TNPSC Current Affairs : September-08-2020
ராஷ்டிரிய போஷன் மா
நலன்புரி சார்ந்த அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு

 

ராஷ்டிரிய போஷன் மா

ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்க ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வலியுறுத்தியுள்ளாா்.

ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில் ‘ராஷ்ட்ரீய போஷண் மா’ திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018-இல் அறிமுகம் செய்தது.

  • செப்டம்பர் மாதம் முழுவதும் “ராஷ்டிரிய போஷன் மா” என்று கொண்டாடப்படும்.
  • 2019 ஆண்டின் கருப்பொருள்: “காம்ப்ளெமென்டரி பீடிங்”.
  • முழுமையான ஊட்டச்சத்துக்கான பிரதமரின் திட்டமான – போஷான் அபியான் என்பது 2022 ஆம் ஆண்டளவில் இலக்கு அணுகுமுறையுடன் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கான தொலைநோக்குடன் கூடிய ஒருங்கிணைப்பு பணி ஆகும்.
  • பிரதம மந்திரியின் ராஷ்டிரிய போஷன் அபியான் எனும் திட்டத்தின் கீழ், பிறந்த குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும், 6 வயது வரை குழந்தைக்கு சத்தான உணவு கொடுக்க வேண்டும், கருவுற்ற தாய்மார்கள் சத்தான உணவு சாப்பிட வேண்டும், பள்ளி செல்லும் சிறுவர்கள் சத்தான உணவு வகைகளை சாப்பிட வேண்டும்