TNPSC Current Affairs : October-27-2020
இன்றைய நடப்பு நிகழ்வுகள்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

இஸ்ரேலிய புலனாய்வு அமைப்பான மொசாட் சீனாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியை 'ஆய்வு'க்காக வாங்கி உள்ளது.

இன்றைய நடப்பு நிகழ்வுகள்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

சீனாவின் மிரட்டலை மீறி அமெரிக்கா 2.4 பில்லியன் டாலர் கடலோர பாதுகாப்பு அமைப்புகளை தைவானுக்கு விற்பனை செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

தமிழக அரசு அறிவிப்பு
மாநிலங்களின் சுயவிவரம்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடைபெற்று தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு கிராம ஊராட்சியும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிலைக் குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.  

நியமன குழு, வளர்ச்சி குழு, வேளாண்மை மற்றும் நீர்பிரி முகடு குழு, பணிகள் குழு, கல்விக்குழு ஆகிய 5 விதமான குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும், நியமன குழுவில் தலைவர் தவிர 2 ஊராட்சி உறுப்பினர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதர குழுக்களில் அரசு அலுவலர்கள் மற்றும் கிராம ஊராட்சி உறுப்பினர்கள் அல்லாத வெளி நபர்கள் 2 பேர் இருக்கலாம்.

இக்குழுக்கள் 2 மாதத்திற்கு ஒருமுறை கூட்டம் நடத்த வேண்டும் என ஊராட்சி தலைவர்களுக்கு அதில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

கிராம் சம்பர்க் யோஜனா
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

500 கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு சிறப்பு வசதிகளை அளிப்பதற்காக பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2020 அக்டோபர் 2 அன்று தொடங்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு செயல்பாட்டில் இருக்கும் கிராம் சம்பர்க் யோஜனா என்னும் திட்டத்தையும் அவர் பாராட்டினார்.

நான்காவது இந்திய எரிசக்தி மன்றத்தின் கூட்டம்
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்

நான்காவது இந்திய எரிசக்தி மன்றத்தின் கூட்டமான செராவீக்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் துவக்கவுரை ஆற்றினார்.

கருபொருள்:

"மாறிவரும் உலகத்தில் இந்தியாவின் எரிசக்தி எதிர்காலம்" என்பது இந்த வருட நிகழ்ச்சியின் கருப்பொருளாகும்.