TNPSC Current Affairs : October-03-2020
உ.பி. முதலமைச்சர்
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்

உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

வைபவ்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்களுக்கான வைபவ்' என்ற பெயரில் உச்சி மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த பின்னர் பேசிய பிரதமர் மோடி பேசியதாவது:- *

  1. உலகெங்கிலும் இருந்து விஞ்ஞானிகள் பலர் தங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வழங்கினர்.
  2. அணு சக்தியை அதிகரிக்க புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
  3. பல வரலாற்று கேள்விகளுக்கு விஞ்ஞானத்தின் மூலமாக விடை கிடைத்துள்ளது.
  4. பூஜ்ஜியத்தை பற்றி பேசும் போது, உலகம் முழுவதும் இந்தியாவை பற்றி பேசும்.
  5. இந்தியாவின் பண்டைய வரலாறு என்பது பல விஞ்ஞானிகளை கொண்டுள்ளது.
  6. சுயசார்பு இந்தியாவை உருவாக்க விஞ்ஞான ரீதியாக பல முயற்சிகளை செய்து வருகிறோம்.
  7. விண்வெளித்துறையில் அன்மையில் பல புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  8. உலகளவில் இந்திய தூதுவர்கள், இந்தியாவின் மதிப்பை எடுத்து கூறுகின்றனர்.
  9. பல நல்ல கருத்துகளை வழங்கியதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி.
  10. மனிதனின் வளர்ச்சிக்கு விஞ்ஞானம் அடிப்படை. இந்திய அரசின் முக்கிய குறிக்கோளே சமுதாயத்தில் மாற்றம் ஏற்படுத்துவது தான் .
  11. அறிவியல் வளர்ச்சியில், புதுமையை மேம்படுத்த இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது.
  12. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 2014இல் பல்வேறு தனித்துவமான தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டன.
  13. 2025ம் ஆண்டுக்குள் இந்தியாவில் இருந்து காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும்.
  14. 25 புதிய தொழில்நுட்ப மையங்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன.
  15. உணவு தானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க வேளாண் துறை விஞ்ஞானிகள் தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
டெல்லி முதல்-மந்திரி
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்

டெல்லி முதல்-மந்திரி அர்விந்த் கெஜ்ரிவால்

உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை

  • இமாசல பிரதேச மாநில பிரதேசத்தில் மணாலியில் இருந்து, லே நகருக்கு செல்லும் நெடுஞ்சாலையில், கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
  • 9 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கம் உலகிலேயே, நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள, மிக நீளமான சுரங்கம் ஆகும்.
  • 10 ஆண்டுகள் கடும் உழைப்பில் இந்த சுரங்கம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
  • இதனால், மணாலியில் இருந்து லே செல்லும் தூரத்தில், 46 கி.மீ., குறைவதுடன், 4 மணி நேர, பயண நேரம் சேமிக்கப்படும்.
  • ‘அடல்’ என, பெயரிடப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதையில், ஒவ்வொரு, 60 மீட்டர் இடைவெளியில் தீயணைப்பு கருவிகள் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு 250 மீட்டர் இடைவெளியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
  • ஒவ்வொரு, 500 மீட்டர் தூரத்திலும், அவசர கால வெளியேறும் வழி அமைந்துள்ளது.
  • இந்த நிலையில் இந்த சுரங்கப் பாதை திறப்பு விழாவிற்கு முழு தயார் நிலையில் உள்ளதாக எல்லை சாலை அமைப்பு தெரிவித்தது.