TNPSC Current Affairs : October-01-2020
உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை

  • இமாசல பிரதேச மாநில பிரதேசத்தில் மணாலியில் இருந்து, லே நகருக்கு செல்லும் நெடுஞ்சாலையில், கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
  • 9 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கம் உலகிலேயே, நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள, மிக நீளமான சுரங்கம் ஆகும்.
  • 10 ஆண்டுகள் கடும் உழைப்பில் இந்த சுரங்கம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இதனால், மணாலியில் இருந்து லே செல்லும் தூரத்தில், 46 கி.மீ., குறைவதுடன், 4 மணி நேர, பயண நேரம் சேமிக்கப்படும்.
  • ‘அடல்’ என, பெயரிடப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதையில், ஒவ்வொரு, 60 மீட்டர் இடைவெளியில் தீயணைப்பு கருவிகள் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு 250 மீட்டர் இடைவெளியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
  • ஒவ்வொரு, 500 மீட்டர் தூரத்திலும், அவசர கால வெளியேறும் வழி அமைந்துள்ளது.