ஜல் ஜீவன் இயக்கம்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்புஜல் ஜீவன் இயக்கம்
பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச மாநிலத்தின் விந்தியாச்சல் பகுதியில் உள்ள மிர்சாப்பூர் மற்றும் சோன்பத்ரா மாவட்டங்களில் ஊரகக் குடிநீர் விநியோக திட்டங்களுக்கு காணொலி வாயிலாக இன்று அடிக்கல் நாட்டினார்.
பிரதமர் இன்று அடிக்கல் நாட்டியுள்ள திட்டங்களின் மூலம் 2,995 கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் தண்ணீர் இணைப்புகள் அளிக்கப்படும்.
இதன் மூலம் சுமார் 42 லட்சம் பேர் பயனடைவர்.
இத்திட்டத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்புக்காக கிராம தண்ணீர் மற்றும் சுகாதாரக் குழுக்கள் அனைத்து கிராமங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.
இத்திட்டங்களுக்காக ரூ. 5,555.38 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
24 மாதங்களுக்குள் இதற்கான பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சைட்மெக்ஸ்- 20 (SITEMEX-20)
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்புஇந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து கடற்படைகளுக்கு இடையிலான முத்தரப்பு பயிற்சி நடைபெற்று வருகிறது.
சைட்மெக்ஸ்- 20 (SITEMEX-20) என்று அழைக்கப்படும் இந்த பயிற்சி, அந்தமான் கடற்பகுதியில் 2020 நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
முதலாவது சைட்மெக்ஸ் பயிற்சி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போர்ட் பிளேயரில் நடைபெற்றது.
அமித் ஷா
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்புசென்னையில் ரூ 70,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்கான அடிக்கல்லை நாட்டி, திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகையில் ரூ 380 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நீர்த்தேக்கத்தை திறந்து வைத்தார்.
ரூ. 61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கும் மத்திய உள்துறை அமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.
'இந்தியாவின் மறைந்திருக்கும் மாணிக்கங்கள்'
புவியியல் அடையாளங்கள்நமது நாட்டைப் பாருங்கள் என்ற வரிசையின் கீழ் 'இந்தியாவின் மறைந்திருக்கும் மாணிக்கங்கள்' என்ற தலைப்பிலான இணைய கருத்தரங்கை 2020 நவம்பர் 21 அன்று மத்திய சுற்றுலா அமைச்சகம் நடத்தியது.
ஜி20 தலைவர்களின் 15வது உச்சிமாநாடு
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்சவுதி அரேபியா, நவம்பர் 21-22 ஆகிய தேதிகளில் கூட்டிய 15வது ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.
19 உறுப்பு நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியன் மற்றும் அழைப்பு விடுக்கப்பட்ட இதர நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் கலந்து கொண்ட இந்த உச்சிமாநாடு, கொவிட்-19 தொற்று காரணமாக காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டது.
சவுதி தலைமையில் நடந்த இந்த உச்சி மாநாடு, ‘‘அனைவருக்குமான 21ம் நூற்றாண்டின் வாய்ப்புகளை உணர்ந்து கொள்வது’’ என்ற கருப் பொருளை மையமாக கொண்டு நடந்தது.
சிறப்பு தினங்கள்
பொது அறிவு பகுதி- குடியரசு தினம் - ஜனவரி 26
- உலக காசநோய் தினம் - பிப்ரவரி 25
- தேசிய அறிவியல் தினம் - பிப்ரவரி 28
- உலக மகளிர் தினம் - மார்ச் 8
- நுகர்வோர் உரிமை தினம் - மார்ச் 15
- உலக பூமி நாள் - மார்ச் 20
- உலக வன நாள் - மார்ச் 21
- உலக நீர் நாள் - மார்ச் 22
- தேசிய கப்பற்படை தினம் - ஏப்ரல் 5
- உலக சுகாதார நாள் - ஏப்ரல் 7
- பூமி தினம் - ஏப்ரல் 22
- உலக புத்தகநாள் - ஏப்ரல் 23
- தொழிலாளர் தினம் - மே 1
- உலக செஞ்சிலுவை தினம் - மே 8
- சர்வ தேச குடும்பதினம் - மே 15
- உலக தொலைத்தொடர்பு தினம் - மே 17
- தேசிய வன்முறை ஒழிப்புதினம் - மே 21
- (ராஜிவ் காந்தி நினைவு நாள்)
- காமன்வெல்த் தினம் - மே 24
- உலக போதை மருந்து எதிர்ப்பு நாள் - ஜூன் 26
- உலக மக்கள் தொகை நாள் - ஜூலை 11
- கல்வி நாள் (காமராஜர் பிறந்த நாள்) - ஜூலை 15
- ஹுரோஷிமா தினம் - ஆகஸ்ட் 6
- நாகசாகி தினம் - ஆகஸ்ட் 9
- சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15
- தேசிய விளையாட்டு தினம் - ஆகஸ்ட் 29
- ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5
- உலக எழுத்தறிவு தினம் - செப்டம்பர் 8
- சர்வதேச அமைதி தினம் - செப்டம்பர் 16
- உலக சுற்றுலா நாள் - செப்டம்பர் 27
- உலக விலங்கு தினம் - அக்டோபர் 4
- விமானப்படை தினம் - அக்டோபர் 8
- உலக தர தினம் - அக்டோபர் 14
- உலக உணவு தினம் - அக்டோபர் 16
- ஐ.நா.தினம் - அக்டோபர் 24
- குழந்தைகள் தினம் - நவம்பர் 14
- உலக எய்ட்ஸ் நாள் - டிசம்பர் 1
- உடல் ஊனமுற்றோர் தினம்- டிசம்பர் 3
- இந்திய கப்பற்படை நாள் - டிசம்பர் 4
- கொடிநாள் - டிசம்பர் 7
- சர்வ தேச விமானப்போக்குவரத்து தினம் - டிசம்பர் 9
- மனித உரிமை தினம் - டிசம்பர் 10
- விவசாயிகள் தினம் - டிசம்பர் 23
ஆதாரம் : கல்விச்சோலை வலைதளம்
-
MORE CURRENT AFFAIRS VIEW ALL
- TNPSC Current Affairs - 2019