TNPSC Current Affairs : November-20-2020
பிரதமர் பசல் பீமா யோஜனா பயிர் காப்பீடு
நலன்புரி சார்ந்த அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு

பிரதமரின் பசல் பீமா யோஜனா ( பிஎம்எப்பிஒய்) 2016 கரீப் பருவத்தில் இருந்து தொடங்கப்பட்டது.

குறைந்த பிரிமியத்துடன் கூடிய பயிர் காப்பீடு வழங்கி, வேளாண் உற்பத்திக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன் இது தொடங்கப்பட்டது.

எதிர்பாராத வகையில், ஏற்படும் பயிர் இழப்பு/சேதம் ஆகியவற்றால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிதி ஆதரவு வழங்கி, வேளாண் துறையில் நிலையான உற்பத்திக்கு உதவுவதை பிஎம்எப்பிஒய் நோக்கமாகக் கொண்டுள்ளது.

புதுமையான மற்றும் நவீன வேளாண் நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

குறுகிய கால பருவ வேளாண் நடவடிக்கை கடன்கள்/ குறிப்பிட்ட பயிர்களுக்கான கிசான் கடன் அட்டைகளுக்கு அனுமதிக்கப்பட்ட விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளுக்கும் இத்திட்டம் பொருந்தும்.

2017 கரீப் பருவம் முதல் பயிர் காப்பீடு பெறுவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் சராசரி விளைச்சலுக்கு ஏற்ப, நிதி அளவை நிர்ணயிப்பது மாநிலங்களின் விருப்பமாகும்.

இதற்கு ஏற்ப பிஎம்எப்பிஒய் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பாசனமற்ற பயிர்களுக்கு மத்திய அரசு மானியம் 30 சதவீதமாக இருக்கும்.

பாசனப் பகுதிகளுக்கு அது 25 சதவீதமாகும்.

வேளாண் பயிர்க் கடன்கள் பெற்றுள்ள விவசாயிகள், அதே வங்கியிலேயே காப்பீடு எடுத்துக் கொள்ளலாம்.

இத்திட்டத்தின் கீழ், நெல், பருப்பு வகைகள், வேர்க்கடலை, சோளம் மற்றும் சிறு தானியங்களுக்கு காப்பீட்டு தொகையில் 2 சதவீதம் மட்டும் செலுத்த வேண்டும்.

பருத்தி பயிர்களுக்கு மொத்த காப்பீட்டில் 5 சதவீதம் செலுத்த வேண்டும்.

தமிழகத்தில், பிரதமர் பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ், இதுவரை, ரூ.1899 கோடிக்கு 2.88 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான வேளாண் பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன.

செலுத்தப்பட்ட மொத்த பிரிமியத் தொகை ரூ.667 கோடியில், மத்திய அரசு ரூ.222 கோடியும், தமிழக அரசு ரூ.416 கோடியும், விவசாயிகள் ரூ.28.89 கோடியும் செலுத்தியுள்ளனர்.

தேசிய மாணவர் படை
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

உலகின் மிகப்பெரிய சீருடையணிந்த இளைஞர்கள் அமைப்பான தேசிய மாணவர் படை (என் சி சி), அதன் 72-வது ஆண்டு விழாவை 2020 நவம்பர் 22 அன்று கொண்டாடவிருக்கிறது.

தேசிய மாணவர் படையை எல்லையோர மற்றும் கடலோரப் பகுதிகளில் விரிபடுத்துவது குறித்த அறிவிப்பு 2020 ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்டது.

உமாங்க் செயலி
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

உமாங்க் செயலியின் மூன்றாவது ஆண்டை குறிக்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தலைமையில் இணைய மாநாடு.

இரண்டாயிரத்துக்கும் அதிகமான சேவைகளை வழங்கி வரும் உமாங்க் செயலியின் மூன்றாவது ஆண்டை குறிக்கும் வகையில் மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, சட்டம் மற்றும் நீதி அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத்தின் தலைமையில் இணைய மாநாடு ஒன்று 2020 நவம்பர் 23 அன்று மாலை 4 மணிக்கு நடைபெறும்.