சதுப்புநிலம்
பொது அறிவு பகுதிசதுப்புநிலம் (Marsh) அல்லது ஈரைநிலம் என்பது ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் கூடிய நிலங்களில் சிறு தாவரங்களும், நீர் வாழ் விலங்குகள் மற்றும் பறவைகளுடன் கூடிய பகுதியாகும்.
சதுப்பு நிலங்கள், உவர்ப்புத் தன்மை கூடிய சதுப்பு நிலங்கள் என்றும் நன்னீர் சதுப்பு நிலங்கள் என இரண்டு வகையாக உள்ளது.
சதுப்பு நிலங்களில் வளரம் கூட்டமாக வளரும் சிறு தாவரங்களை அலையாத்தித் தாவரங்கள் என்பர்.
அலையாத்தி தாவரங்கள் சுனாமி போன்ற பேரலைகளிடமிருந்து கடற்கரை மக்களையும், கட்டமைப்புகளையும் பாதுகாக்கும் வல்லமை படைத்தது.
இந்தியாவில்
இந்தியா - வங்காளதேசம் எல்லைகளுக்கிடையே அமைந்த வங்காள விரிகுடாவில் அமைந்த கங்கையாற்றுப் படுகையில் உள்ள சுந்தரவனக்காடுகள் உலகின் மிகப்பெரிய உவர்ப்புத் தன்மை கொண்ட அலையாத்திக் காடாகும்.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவினால் சுந்தரவனக்காடுகள், உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரம் என்ற ஊரில் உள்ள அலையாத்திக் காடு உலகிலேயே இரண்டாவது பெரிய கண்டல் காடுகள் ஆகும்.
கோடியக்கரையை அடுத்துள்ள முத்துப்பேட்டை கண்டல்கள், தமிழகத்திலுள்ள கண்டல் ஈரநிலங்களில் மிகப்பெரியவை, மேலும் சென்னையை ஒட்டியுள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலம் பகுதியும் பல்லுயிர் வளம் நிறைந்த சதுப்பு நிலப்பகுதியாகும்.
அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் சதுப்பு நிலங்கள் காணப்படுகின்றன.
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில், சாரி-தந்து சதுப்பு நில காப்புக் காடுகள் என்ற பெயரில் சதுப்பு நிலங்கள் உள்ளது.
கேரளா மாநிலத்தில் கண்ணனூர் கடற்கரைப் பகுதிகளில் சதுப்பு நிலங்கள் காணப்படுகிறது.
சுனாமி போன்ற பேரலைகளிலிருந்து கடற்கரைப் பகுதிகளையும், கடற்கரை கட்டுமானங்களையும் காக்கக்கூடிய தன்மை சதுப்பு நில அலையாத்தித் தாவரங்கள் உண்டு.
தற்போது உலகம் முழுவதும் சதுப்பு நிலங்களை அழித்து வேளாண் நிலங்களாகவும், வீட்டடி மனைகளாகவும் மாற்றம் செய்வதால் புவி வெப்பம் கூடி வருகிறது.
RRB /TNPSC CURRENT AFFAIRS
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
இந்திய அரசியலமைப்பு சபையின் பின்வரும் குழுக்களில் எது படேல் தலைமையிலானது?
1. அடிப்படை உரிமைகள் தொடர்பான ஆலோசனைக் குழு
2. மாகாண அரசியலமைப்பு குழு
3. சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினர் மற்றும் விலக்கப்பட்ட பகுதிகள் பற்றிய குழு
4. மேலே உள்ள அனைத்தும்
Ans: மேலே உள்ள அனைத்தும்
-
MORE CURRENT AFFAIRS VIEW ALL
- TNPSC Current Affairs - 2019