TNPSC Current Affairs : May-09-2021
டிஆர்டிஓ ஆய்வகம்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சமீபத்திய கண்டுபிடிப்புகள்
 • டி.ஆர்.டி.ஓ உருவாக்கிய கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான தடுப்பு மருந்தின் அவசரகால பயன்பாட்டுக்கு, நாட்டின் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
 • மத்திய பாதுபாப்பு ஆராய்ச்சி மையம் எனும் டிஆர்டிஓ ஆய்வகம் மற்றும் ஹைதராபாத்தில் இயங்கும் டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்கள் 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) மருந்தின் பார்முலாவுடன் கோவிட் எதிர்ப்பு மருந்தினை உருவாக்கியது.
 • இந்த மருந்து பொடி வடிவில் பாக்கெட்டுகளில் கிடைக்கும் என்றும், அதை தண்ணீரில் கரைத்து வாய்வழியாக எடுத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
 • இந்த மருந்துகளின் கட்டுப்பாட்டு மூலக்கூறு, கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளை விரைவாக மீட்டெடுக்க உதவுகிறது மற்றும் ஆக்ஸிஜன் சார்புநிலையை குறைக்கிறது என்பதை மருத்துவ சோதனை முடிவுகள் காட்டிய பின்னர் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் (டி.சி.ஜி.ஐ) இம்மருந்துக்கு ஒப்புதல் அளித்தது என கூறப்பட்டிருக்கிறது.
 • இம்மருந்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட சோதனைகளில் நோயாளிகளிடம் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
லாங் மார்ச் ராக்கெட்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சமீபத்திய கண்டுபிடிப்புகள்
 1. சீனா அனுப்பிய மிகப்பெரிய லாங் மார்ச் ராக்கெட்டின் 18 டன் எடை கொண்ட உடைந்த பாகம், பூமியின் நீள்வட்டப் பாதைக்குள் நுழைந்துவிட்டது.
 2. இந்த ராக்கெட்டின் உடைந்த பகுதி 72.47 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும், 2.65 டிகிரி வட அட்சரேகையிலும் பகுதியில், மாலத்தீவுக்கும் கடலில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது என சீனாவின் வி்ண்வெளி்த்துறை பொறியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 3. சீனா விண்வெளியில் உருவாக்கி வரும் தியாங்காங் விண்வெளி நிலையத்துக்கு பொருட்களை சுமந்து கொண்டு கடந்த மாதம் 29-ம்தேதி ஹெய்னன் நகில் உள்ள வென்சாங் விண்வெளி நிலையத்திலிருந்து லாங் மார்ச் 5-பி எனும் ராக்கெட் ஏவப்பட்டது.
 4. அந்த ராக்கெட் ஒரு பாகம் அதாவது 33 மீட்டர் (108 அடி) 20 டன் எடை கொண்ட பாகம் திடீரென ராக்கெட்டிலிருந்து பிரிந்து பூமியை நோக்கி விழத் தொடங்கியது.
சண்முகசுந்தரம்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

புதிய தலைமை வழக்கறிஞர்

தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரத்தை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த விஜய் நாராயணன், மே 2  ராஜினாமா செய்தார்.

1977-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்த சண்முகசுந்தரம், தன் தந்தையும் புகழ்பெற்ற வழக்கறிஞருமான எஸ்.ராஜகோபாலிடம் கிரிமினல் சட்டத்தில் பயிற்சி பெற்றார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞராக, மாநில அரசு, சிபிஐ, ரயில்வே சார்பாக பல வழக்குகளில் வாதாடியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை குறித்து விசாரித்த எம்.சி.ஜெயின் விசாரணை ஆணையம் உட்பட பல விசாரணைகளுக்கு சண்முகசுந்தரம் அரசு சார்பாக வாதாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நடப்பு நிகழ்வுகள்
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பதவி ஏற்றவுடன் தலைமை செயலாளர், முதல்-அமைச்சரின் தனிச்செயலாளர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர்.

 1. வெ.இறையன்பு, புதிய தலைமை செயலாளராக பொறுப்பேற்றார்.
 2. சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மாற்றப்பட்டு, புதிய கமிஷனராக ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பியாக இருந்த சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார். 
 3. சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்து வந்த பிரகாஷ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 4. சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக ககன் தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 
ஹிமாந்த பிஸ்வா சர்மா
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்
 • அசாமில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவராக ஹிமாந்த பிஸ்வா சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
 • அவர் முதல்வராக பதவியேற்க உள்ளார்.
 • மொத்தம், 126 இடங்களை உடைய, அசாம் சட்டசபைக்கு தேர்தல் நடந்தது.
 • அதில், ஆளும் கட்சியான, பா.ஜ., 60 இடங்களிலும், கூட்டணி கட்சிகள், 15 இடங்களிலும் வென்றன.
TNPSC GROUP I & II & IIA 2021 (GROUP I MAINS)
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சமீபத்திய கண்டுபிடிப்புகள்

அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான இடங்கள்:

இஸ்ரோ தலைவர்: கே.சிவன்.

இஸ்ரோ தலைமையகம்: பெங்களூரு, கர்நாடகா.

இஸ்ரோ நிறுவப்பட்டது: 15 ஆகஸ்ட் 1969.

TNPSC GROUP I & II & IIA 2021 (GROUP I MAINS)
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
 1. பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய கவுன்சில் கூட்டத்தில் (European Council meeting) பங்கேற்க எப்போது திட்டமிடப்பட்டுள்ளது? - மே 8.
 2. மே 7 ஆம் தேதி எந்த மாநில / யூடியின் முதல்வராக என். ரங்கசாமி பதவியேற்றார்? - புதுச்சேரி.
 3. ஏழை COVID-19 நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை திட்டத்தை எந்த மாநிலம் அறிவித்துள்ளது? -மத்தியப் பிரதேசம்.
 4. COVID-19 நோயாளிகளுக்கு ஆயுர்வேத டெலிமெடிசின் வசதியை எந்த மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது? - ஹரியானா.
 5. கோவிட் -19 தடுப்பூசியின் 3 வது கட்டத்தை எந்த மாநிலம் இடைநிறுத்தியது? - சத்தீஸ்கர்.
 6. எந்த இரண்டு மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு டெல்லி 14 நாள் நிறுவன தனிமைப்படுத்தலை கட்டாயமாக்கியுள்ளது? - தெலுங்கானா, ஆந்திரா.
 7. பாதுகாப்பு அபாயங்களுக்காக வெளிநாட்டு முதலீடுகளை திரையிட எந்த நாடு ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது? - டென்மார்க்.
 8. COVID-19 விகாரங்களுக்கு எதிராக 79.4 சதவிகித செயல்திறனை எந்த தடுப்பூசியின் கூறு நிரூபிக்கிறது? - ஸ்பூட்னிக் லைட்