TNPSC Current Affairs : May-03-2021
இன்றைய நடப்பு நிகழ்வுகள்
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்
  • நியூசிலாந்து நாட்டின் பிரதமராக இருந்து வருபவர் ஜெசிந்தா ஆர்டென் (வயது 40). தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராக உள்ள கிளார்க் கைபோர்டு (வயது 44) என்பவருடன் கடந்த 2019ம் ஆண்டு நிச்சயம் செய்யப்பட்டது.
  • சீனாவில் உருவாக்கப்பட்ட கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்த அனுமதி அளிப்பது குறித்து ஐரோப்பிய யூனியன் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு (இஎம்ஏ) பரிசீலித்து வருகிறது. கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக கடுமையாக போராடி வரும் இந்தியாவுக்கு உதவிடும் நோக்கில் உயிா்காக்கும் மருந்துகளை அனுப்பவுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
  • இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் எரிக் கார்செட்டியை அறிவிப்பது பற்றி பைடன் பரிசீலனை மேற்கொண்டு வருகிறார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் முதல் இடத்தில் அமெரிக்கா தொடர்ந்து நீடிக்கிறது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் அந்நாட்டு மக்களுக்கு தடுப்பூசி பணிகளில் தீவிரம் செலுத்த தொடங்கினார்.
  • இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய 7 பணக்கார நாடுகள், ஜி-7 நாடுகள் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. தற்போது இதன் தலைவராக இங்கிலாந்து செயல்பட்டு வருகிறது. ஜி-7 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மாநாட்டுக்கு இங்கிலாந்து ஏற்பாடு செய்துள்ளது. லண்டனில், லங்காஸ்டர் ஹவுஸ் அரங்கத்தில் இந்த 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது.
  • உலக வர்த்தக கண்காட்சியான எக்ஸ்போ 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. முதன்முதலாக 1851-ம் ஆண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இந்த உலக வர்த்தக கண்காட்சி நடத்தப்பட்டது. இறுதியாக கடந்த 2015-ம் ஆண்டு இத்தாலியில் உள்ள மிலன் நகரில் இக்கண்காட்சி நடைபெற்றது.
  • அமெரிக்காவின் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பில் கேட்ஸ். அந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான இவரது மனைவி மெலிண்டா கேட்ஸ். இந்த தம்பதி 27 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளனர்.