TNPSC Current Affairs : May-01-2021
TNPSC GROUP I & II & IIA 2021 (GROUP I MAINS)
நலன்புரி சார்ந்த அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு

‘ஆயுஷ்-64’ மருந்து

உருவாக்கப்பட்ட ஆண்டு: 1980 (மலேரியாவை குணப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்டது)

சிகிச்சை:அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் ‘ஆயுஷ்-64’ மருந்து நல்ல பயனுள்ளதாக இருக்கும்.

பலன்கள்: பொது சுகாதாரம், களைப்பு, கவலை, மன அழுத்தம், பசி, மகிழ்ச்சி, தூக்கம் போன்ற சிக்கல்களுக் நல்ல விளைவுகளை அளிப்பதும் உணரப்பட்டது.

தனி அமைச்சகம்: மத்திய அரசில் ஆயுஷ் துறைக்கென தனி அமைச்சகம் உள்ளது.

 

மருத்துவ முறைகள்: ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி என இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகள் இணைந்தது ‘ஆயுஷ்’ துறை ஆகும்.

 
TNPSC GROUP I & II & IIA 2021 (GROUP I MAINS)
பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL)

  • இந்தியாவின் மொத்த மருத்துவ ஆக்ஸிஜன் தயாரிப்பில் 11 சதவீதத்திற்கும் அதிகமான உற்பத்தியை மேற்கொள்கிறது.
  • திரவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம்.
  • ரிலையன்ஸ், குஜராத் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து ஆக்ஸிஜனை இலவசமாக மகாராஷ்டிராவுக்கு அனுப்பத் தொடங்கியது. 
  • தினமும்,1000 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை (Oxygen) உற்பத்தி செய்து அதனை இலவசமாக வழங்குகிறது.
  • ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்காக 24 ISO  கன்டெய்னர்களை வெளிநாடுகளில் இருந்து வாங்கியுள்ளது.
இன்றைய நடப்பு நிகழ்வுகள்
தற்போதைய சமூக பொருளாதார சிக்கல்கள்
  1. உலகிலேயே மிகவும் நீளமான 1,693அடி தொங்கு நடைபாலம் – போர்ச்சுகலில் திறப்பு உலகிலேயே மிக நீளமானமானதாக கருதப்படும் தொங்கு நடைப்பாலம் போர்ச்சுகலில் திறக்கப்பட்டுள்ளது.
  2. போர்ச்சுகல்லில் உள்ள அரோவுகா (Arouca) பகுதியில் பசுமையான இயற்கை சூழலுக்கு மத்தியில், ஆற்றின் குறுக்கே இந்த தொங்கு நடைபாலம் கட்டப்பட்டுள்ளது.
  3. தரையில் இருந்து 175 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், 2.8மில்லியன் டாலர் மதிப்பில், இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நடப்பு நிகழ்வுகள்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

உலகிலேயே மிகப்பெரிய மாம்பலத்தை கொலம்பியா விவசாயிகள் பயிரிட்டு கின்னஸ் சாதனை புரிந்துள்ளனர்.