TNPSC Current Affairs : March-08-2020
தேசிய ஊட்டச்சத்து விழா/தேசிய ஊட்டச்சத்து மாதம்
பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்

மத்திய அரசின் உத்தரவின் பேரில் மார்ச்-8 முதல் 22 ஆம் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து விழாவை அனுசரிக்க உத்தரவிடப்பட்டது.

தேசிய ஊட்டச்சத்துத் திட்டம் இந்தியாவின் முதன்மைத் திட்டம் ஆகும். இது மார்ச் 2018-ல் தொடங்கப்பட்டது. ஆறு வயது வரை உள்ள குழந்தைகள், இளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு ஊட்டச்சத்தை மேம்படுத்துவது இதன் நோக்கம். குறை எடைக் குழந்தைகள், வளர்ச்சி குன்றல் ஆகியவற்றை தடுத்தலில் குறிப்பிட்ட இலக்கை ஊட்டச்சத்து குறைவு மற்றும் இரத்த சோகை கட்டுப்பாட்டில் மூன்று ஆண்டுகளில் அடைவது இத்திட்டத்தின் நோக்கம்.

ஒரு முழுமையான அணுகுமுறையைப் பின்பற்றுவதை உறுதி செய்ய கட்டம் கட்டமாக 36 மாநிலம்/யூனியன் பிரதேசங்களில் இது நடைமுறைப் படுத்தப்படும். 2018-19-ல் 315 மாவட்டங்களிலும், 2019-20ல் மீதி உள்ள மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டத்தால் 10 கோடிக்கும் மேற்பட்டோர் பயன் அடைவார்கள்.

ஊட்டச்சத்து திட்டம் ஒரு திட்டம் அல்ல;  ஒரு மக்கள் இயக்கம். உள்ளாட்சி பிரதி நிதிகள், மாநில அரசுத் துறைகள், சமூக அமைப்புகள், பொது  மற்றும் தனியார் துறைகள் இதில் இணைந்து செயல்படும்.

பெண்கள் மற்றும் குழந்தை நலம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், குடிநீர் மற்றும் சுகாதாரம், கிராம வளர்ச்சி, உள்ளாட்சி, கல்வி, உணவு மற்றும் பிற தொடர்புடைய துறைகள் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் இணைந்து செயல்படும்.

ஊட்டச்சத்து திட்டத்துக்கு ஊக்கம் அளிப்பதற்காக, இந்திய ஊட்டச்சத்து சவால்களுக்கான தேசியப் பேரவை செபடம்பர் மாதத்தை தேசிய ஊட்டச்சத்து மாதமாக அனுசரிக்க 24 ஜூலை 2018 அன்று முடிவு செய்தது. அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அடிப்படை அமைப்புகள் முதற்கொண்டு ஊட்டச்சத்து விழிப்புணர்வை உருவாக்க இந்த மாதம் முழுவதும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டுத் துறை அங்கன்வாடி பணியாளர்கள் மூலமும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, ஆஷா, ஏஎன்எம், ஆரம்ப சுகாதார மையம், சமுதாய சுகாதார மையம் ஆகியவற்றின் மூலமாகவும், பள்ளி கல்வி படிப்பறிவுத் துறை பள்ளிகள் மூலமும், உள்ளாட்சித் துறை பஞ்சாயத்துகள் மூலமும், கிராம வளர்ச்சித் துறை சுய உதவிக் குழுக்கள் மூலமும் செய்தியை இம்மாதம் முழுவதும் எடுத்துச் செல்லும்.

யாரிடம் மாற்றத்தை ஏற்படுத்துவது

குழந்தைகளின் தாய்மார்கள், இளம்பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், குடும்ப உறுப்பினர்கள் (கணவர், தந்தை, மாமியார்), சமுதாய உறுப்பினர்கள், சுகாதாரப் பராமரிப்பாளர்கள் (ஏஎன்எம், ஆஷா, அங்கன்வாடி பணியாளர்) ஆகியோருக்கு முக்கிய ஊட்டச்சத்து வழிமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம்.

முக்கிய ஊட்டச்சத்து வழிமுறைகள்

கர்ப்பிணிகளுக்கு:

  • இரும்பும் உயிர்ச்சத்தும் கொண்ட பலவகையான சமநிலை உணவு
  • பால், பால்பொருட்கள், அயோடின் உப்பு
  • பாதுகாப்பான குடிநீர்
  • அருகில் உள்ள சுகாதார வசதிகளில் குறைந்த பட்சம் நான்கு பிறப்புக்கு முன்னான பரிசோதனைகள்.
  • இரும்பு, ஃபோலிக் அமிலம், கால்சியம் கூடுதல் சத்து
  • அருகில் உள்ள பராமரிப்பு வசதிகளில் நிறுவனப் பேறு
  • தனிப்பட்ட சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு
  • உணவுக்கு முன் மற்றும் கழிப்பறை பயன்படுத்திய பின் கைகழுவுதல்

பாலூட்டும் தாய்மார்:

  • குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பாலூட்டல்
  • இரும்பும் உயிர்ச்சத்தும் கொண்ட பலவகையான சமநிலை உணவு
  • பால், பால்பொருட்கள், அயோடின் உப்பு
  • இரும்பு, ஃபோலிக் அமிலம், கால்சியம் கூடுதல் சத்து
  • பாதுகாப்பான குடிநீர்
  • உணவுக்கு முன்னும் பாலூட்டும் முன்னும் கை கழுவுதல்
  • கழிப்பறை பயன்படுத்திய பின்/ குழந்தைக்கு மலம் கழுவிய பின் கைகழுவுதல்
  • தாய் மற்றும் குழந்தைக்கு தனிப்பட்ட சுத்தம் மற்றும் சுகாதாரம் பேணுதல்

குழந்தைகள்

  • ஒவ்வொரு குழந்தைக்கும் பிறந்து ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பாலூட்டல்
  • முதல் ஆறு மாதத்துக்குத் தாய் குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டுமே ஊட்டுதல்
  • ஆறு மாதங்களுக்குப் பின் கூடுதல் உணவு அளிக்க வேண்டும்; தாய்ப்பாலை, தொடர்ந்து 2 வருடங்கள் வரை அளிக்க வேண்டும்.
  • அனைவர்க்குமான தடுப்பு மருந்து  திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குழந்தைக்கும் முழு தடுப்பு மருந்துகளை அளிக்க வேண்டும்.
  • 9 மாதங்களில் இருந்து உயிர்ச்சத்து ஏ அளிப்பதோடு 1 வயதில் இருந்து  ஆண்டுக்கு இரு முறை பூச்சி மருந்து அளிக்க வேண்டும்.
  • ஊட்டச்சத்து ஆலோசனை பெற்று தொடர்ந்து குழந்தையின் வளர்ச்சியைக் கவனித்து வர வேண்டும்.
  • வயிற்றுப் போக்கு இருந்தால் குழந்தைக்கு வாய்வழி மறுநீர்ச்சத்துக் கரைசலை துத்தநாகக் கூடுதல் உணவோடு அளிக்க வேண்டும்.

இளம்பெண்கள்

  • இரும்பு மற்றும் உயிர்ச்சத்து நிறைந்த பல்வகை சமநிலை உணவு
  • பால், பால்பொருட்கள், அயோடின் உப்பு
  • ஒவ்வொரு வாரமும் IFA நீல மாத்திரை உட்கொள்ளவும்
  • தனிநபர் மற்றும் மாதவிலக்கு சுத்தம் பேணுதல்
  • ஆண்டுக்கு இருமுறை பூச்சி மருந்து
  • பாதுகாப்பான குடிநீர்
  • சாப்பிடும் முன் மற்றும் கழிப்பறைக்குப் பின் கைகழுவுதல்

சமுதாய அளவில்

  • சமுதாய அளவில் பாதுகாப்பான குடிநீர்
  • குழந்தை மற்றும் விலங்கு மலக்கழிவை பாதுகாப்பான முறையில் அகற்றுதல்
  • குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கழிவறையைப் பயன்படுத்துதல்
  • பெண்களுக்கு ஊட்டச்சத்தும், கல்வியும் அளிப்பதோடு சரியான திருமண வயதைப் பேணுதல்
  • சமுதாய அளவில் பயன்படுத்துவதற்காகக் காய்கறி பயிரிடுதல்
உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியா 5-ஆவது பட்டம் வென்று சாதனை
விளையாட்டு

இந்தியாவை 85 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸி. அணி தனது பட்டத்தை தக்க வைத்ததோடு, மட்டுமின்றி 5-ஆவது முறையாகவும் உலகக் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.

அலிஸா ஹீலி ஆட்ட நாயகியாகவும், பெத் மூனி தொடா் நாயகியாகவும் தோ்வு செய்யப்பட்டனா்.

2010, 2012, 2014, 2018 ஆம் ஆண்டுகளில் ஏற்கெனவே உலகக் கோப்பையை வென்றுள்ளது ஆஸ்திரேலியா.

பெடரேஷன் கோப்பை டென்னிஸ்: வரலாறு படைத்தனா் இந்திய மகளிா்
விளையாட்டு

அங்கிதா ரெய்னாவின் அபார இரட்டை வெற்றியால் முதன்முறையாக பெடரேஷன் கோப்பை டென்னிஸ் போட்டியில் உலக சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளது.

ஆடவருக்கு டென்னிஸ் உலகில் டேவிஸ் கோப்பை போட்டி நடத்தப்படுவது போல், மகளிருக்கு பெடரேஷன் கோப்பை போட்டி நடத்தப்படுகிறது. இதில் பல்வேறு நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன.

விஷால் உப்பல் தலைமையிலான இந்திய மகளிா் அணியில் சானியா மிா்ஸா, அங்கிதா ரெய்னா, ருட்டுஜா, ரியா பாட்டியா, சௌஜன்யா பவிசெட்டி ஆகியோா் இடம் பெற்றிருந்தனா்.

துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் சீனா, இந்தியா, தென்கொரியா, இந்தோனேஷியா, தைவான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட மகளிா் அணிகள் கலந்து கொண்டன.

இதில் சீனாவிடம் மட்டுமே இந்தியா தோல்வி கண்டது. உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, சீனதைபே உள்ளிட்ட அணிகளை வீழ்த்தியது.

இந்தோனேஷியாவை வென்றது:

கடைசி ஆட்டத்தில் இந்தோனேஷியாவை எதிா்கொண்டு ஆடிய இந்திய அணியில் ருட்டுஜா 3-6, 6-3,3-6 என இந்தோனேஷியாவின் பிரிஸ்காவிடம் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா்.

இரண்டாவது ஒற்றையா் ஆட்டத்தில் அங்கிதா ரெய்னா 6-3, 6-3 என அல்டிலா சுட்ஜியாடியை வீழ்த்தினாா். கடைசியாக வெற்றியை நிா்ணயிக்கும் இரட்டையா் ஆட்டத்தில் சானியா மிா்ஸா-அங்கிதா இணை வென்று 2-1 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவை வீழ்த்தியது.

இதன் மூலம் முதன்முறையாக பெடரேஷன் கோப்பை போட்டி உலக சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்தியாவின் முதல் பெண் கப்பல் பைலட்
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்
  • இந்தியாவின் முதல் பெண் கப்பல் பைலட் ரேஷ்மா நிலோஃபர்.
  • இந்தியாவின் முதல் பெண் கடல் மாலுமி மட்டுமின்றி நதிகளில் கப்பலை இயக்கும் முதல் பெண் மாலுமியாக அறியப்படும் ரேஷ்மா.
  • இவர் கண்டம் விட்டு கண்டம் தாண்டி சுமார் நாற்பது நாடுகளுக்கு கப்பலை இயக்கிச் சென்றுள்ளார்.
  • கடந்த ஆண்டு மகளிர் தினத்தன்று, பெண்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான 'நாரி சக்தி புரஸ்கார் விருது' ரேஷ்மாவுக்கு வழங்கப்பட்டது.
  • சென்னையில் பிறந்து மேற்கு வங்கத்தில் பணியாற்றி தற்போது உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கும் இந்தியாவின் முதல் பெண் கப்பல் பைலட் ரேஷ்மா நிலோஃபர்.

 

ஒளவையாா் விருது 2020
விருதுகள்

ஆா்.கண்ணகி

  1. பல்வேறு துறைகளில் சாதனைகளைப் படைக்கும் பெண்களுக்கு மகளிா் தினத்தை ஒட்டி கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் ஒளவையாா் விருது வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டுக்கான விருது, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த ஆா்.கண்ணகிக்கு வழங்கப்பட்டது.
  2. திருவண்ணாமலை நகராட்சி எரிவாயு தகன மேடை பெண் பொறுப்பாளரான ஆா்.கண்ணகிக்கு ஒளவையாா் விருதினை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை வழங்கினாா்.
  3. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த அவா், 1992-ஆம் ஆண்டு முதல் பல்வேறு சமூகப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வருகிறாா். சுமாா் 350-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளை ஓட்டு வீடுகளாக மாற்றுவதற்கு பெரும் பங்காற்றியுள்ளாா். மகளிா் சுய உதவிக் குழுக்களை அமைப்பதிலும் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறாா்.
  4. டந்த 12 ஆண்டுகளாக திருவண்ணாமலை நகராட்சியின் 16-ஆவது வாா்டில் மகளிா் சுய உதவிக் குழுக்களை ஊக்கப்படுத்தும் பணியில் ஈடுபட்டாா். 528 குழுக்களுக்கு ஒருங்கிணைப்பாளராகச் செயலாற்றி வருவதுடன், ‘விழுதுகள்’ என்ற பகுதி அளவிலான கூட்டமைப்பையும் நடத்தி வருகிறாா்.
  5. வருக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடந்த நிகழ்வில் ஒளவையாா் விருதுக்கான ரூ.8 லட்சம் காசோலை, 8 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கி பொன்னாடை அணிவித்து கெளரவித்தாா்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள டிஃபாக் விஜியன் ஜோதி (Vigyan Jyoti) நிறுவனத்தை அறிமுகப்படுத்துகிறது
நலன்புரி சார்ந்த அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு
மார்ச் 8, 2020 அன்று, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இயங்கும் டிஃபாக் விஜியன் ஜோதி நிறுவனத்தை அறிமுகப்படுத்தியது. 
சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.
விஜியன் ஜோதி பெண்கள் மத்தியில் STEM கல்வியை மேம்படுத்துவதற்காக மத்திய அரசால் விஜியன் ஜோதி தொடங்கப்பட்டது.
STEM என்பது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம். இது அக்டோபர் 2019 இல் தொடங்கப்பட்டது.
இத்தகைய முயற்சிகளைக் கொண்டுவருவது அவசியம், ஏனென்றால் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கூற்றுப்படி, தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 24% மட்டுமே STEM துறையில் உள்ளனர், மேலும் முதுகலை பட்டதாரிகளில் 22% மட்டுமே பெண்கள்.
நாரி சக்தி விருது 2020
விருதுகள்

15 பெண் சாதனையாளர்கள் 

திருமதி மன் கவுர்

93 வயதில் தடகள விளையாட்டைத் தொடங்கி, போலந்தில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன் போட்டியின் தடகளப் பிரிவில் 4 தங்கப்பதக்கங்களை வென்ற 103 வயதாகும் திருமதி மன் கவுர், பிரதமரை சந்தித்த சாதனையாளர்களில் ஒருவராவார்.

ஆரிஃபா ஜான்

ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த ஆரிஃபா ஜான், அழிந்து போன நுங்தா கைவினைக் கலையை உயிர்ப்பித்தவராவார். அழியும் நிலையில் உள்ள இந்த கைவினை கலைக்கு புத்துயிர் அளித்து, காஷ்மீரைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயிற்சி அளிப்பதில் கிடைத்த அனுபவங்களை இவர் பகிர்ந்து கொண்டார்.

மோகனா சிங், பாவனா காந்த் & அவானி சதுர்வேதி

இந்திய விமானப் படையின் முதலாவது பெண் போர் விமானிகளான மோகனா சிங், பாவனா காந்த் & அவானி சதுர்வேதி ஆகியோரும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். விமானப்படையின் போர்ப்பிரிவில் சோதனை அடிப்படையில் பெண்களை சேர்த்துக் கொள்ள மத்திய அரசு முடிவெடுத்த பிறகு, இவர்கள் மூவரும் இந்திய விமானப்படையின் போர் விமானப் படைப்பிரிவில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இவர்கள் 2018-ல் மிக் 21 விமானத்தை தனியாக இயக்கியதன் மூலம் இந்தியாவின் முதலாவது பெண் போர் விமானிகள் என்ற சிறப்பைப் பெற்றனர்.

பாதலா பூதேவி & பீனா தேவி

ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் விவசாயியும், கிராமப்புற தொழில் முனைவோருமான பாதலா பூதேவி, காளான் சாகுபடி செய்வதால், ‘காளான் பெண்மணி’ என்றழைக்கப்படும் பீகாரின் முங்கேர் பகுதியைச் சேர்ந்த பீனா தேவி ஆகியோரும் விவசாயம் மற்றும் விளைபொருட்களை சந்தைப்படுத்துவது குறித்த அனுபவங்களை பிரதமருடன் பகிர்ந்து கொண்டனர்.

கலாவதி தேவி

உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளியான கலாவதி தேவி, அந்த மாவட்டத்தில் திறந்தவெளி கழிப்பிடங்களை அகற்றுவதில் முக்கியப் பங்காற்றியவராவார். கான்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கழிவறைகளைக் கட்டுவதற்கு இவரே காரணம். திறந்தவெளி கழிப்பிடங்களால் எத்தகைய தீயவிளைவுகள் ஏற்படுகிறது என்று வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியது குறித்தும், திறந்தவெளி கழிப்பிடங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக கான்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்களில் நீண்ட நேரம் பயணம் செய்தது குறித்த அனுபவங்களையும் இவர் பிரதமருடன் பகிர்ந்து கொண்டார்.

சாமி முர்மு

ஜார்க்கண்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான சாமி முர்மு, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை இணைத்து, 2,500 குழுக்களை அமைத்து, தரிசு நிலங்களில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

காத்யாயனி அம்மா

கேரளாவைச் சேர்ந்த 98 வயதாகும் காத்யாயனி அம்மா, கேரள எழுத்தறிவு இயக்கத்தின் ஆகாஷர லக்ஷம் திட்டத்தின் மூலம் ஆகஸ்ட் 2018-ல், நான்காம் வகுப்புக்கு இணையான தேர்வில் தேர்ச்சிப் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். 98% மதிப்பெண் பெற்ற இவர், முதலிடம் பெற்று தேர்ச்சிப் பெற்றுள்ளார்.