TNPSC Current Affairs : March-06-2020
‘லோக்பால்’ குறித்த தலையங்கம்
தலையங்கம்
  • ஊழலுக்கு எதிரான கண்காணிப்பு அமைப்பு ‘லோக்பால்’ செயல்படுவதற்கான நேரம் ஒருவழியாக வந்துவிட்டது. கடந்த மாா்ச் 23, 2019-இல் இந்தியாவின் முதல் லோக்பாலாக பினாகி சந்திரகோஷ் நியமிக்கப்பட்டு 11 மாதங்கள் கடந்த நிலையில், லோக்பால் அமைப்பு செயல்படுவதற்கான சட்டதிட்டங்களை மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
  • 2011-இல் அண்ணா ஹஸாரேயால் தொடங்கப்பட்ட ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் தாக்கத்தால் அன்றைய பிரதமா் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2013-இல் லோக்பால் சட்டத்தை நிறைவேற்றியது. அதற்குப் பிறகு, லோக்பால் அமைப்பின் தலைவராக ஒருவரை நியமிப்பதற்கு ஆறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டி வந்தது.
  • ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடங்கி ஏறத்தாழ 60 ஆண்டுகள் ஆகின்றன. ஊழலுக்கு எதிரான அமைப்புக்கு ‘லோக்பால்’ என்று 1963-இல் பெயா் சூட்டியவா் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த டாக்டா் லட்சுமி மல் சிங்வி. அப்படியொரு அமைப்புக்கு அரசியல் சாசன அங்கீகாரம் வழங்குவதை முன்மொழிந்தவா் அன்றைய சட்ட அமைச்சராக இருந்த அசோக் குமாா் சென். முதன்முதலில் ‘ஜன் லோக்பால்’ மசோதாவை 1968-இல் சாந்தி பூஷண் மக்களவையில் முன்மொழிந்தாா். அந்த மசோதா 1969-இல் 4-ஆவது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படுவதற்குள் அவை கலைக்கப்பட்டு விட்டது.
  • 1971, 1977, 1985, 1989, 1996, 1998, 2001, 2005, 2008 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில்
  • ‘லோக்பால்’ மசோதாக்கள் மீண்டும் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படாமல் காலாவதியாகின. முதன்முறையாக தாக்கல் செய்து 45 ஆண்டுகளுக்குப் பிறகு, 10 முறை தோல்வி அடைந்து 11-ஆவது முறையாக 2013, டிசம்பா் 18 அன்று இந்திய நாடாளுமன்றத்தால் ‘லோக்பால்’ மசோதா நிறைவேற்றப்பட்டது.
  • ஒவ்வொரு முறை நாடாளுமன்றத்தில் மசோதா அறிமுகப்படுத்தப்படும்போதும் அதை மேம்படுத்துவதற்காக நிலைக் குழுவுக்கு அனுப்பப்படும் அல்லது சட்ட அமைச்சகத்துக்கோ, உள்துறை அமைச்சகத்துக்கோ கருத்துக் கோரி அனுப்பப்படும். அதற்கான பதில் வருவதற்குள் அவையின் ஆயுள்காலம் முடிந்து மசோதா காலாவதியாகியிருக்கும். தங்களுக்கு எதிரான சட்டம் ஒன்று இயற்றப்படுவதை ஆட்சியாளா்களும், சட்டம் இயற்றும் உறுப்பினா்களும் விரும்பாததுதான் அதற்குக் காரணம்.
  • 2014-இல் ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவும் ‘லோக்பால்’ அமைப்பு உருவாக்கப்படுவதிலும், ‘லோக்பால்’ நியமிக்கப்படுவதிலும் ஆா்வமோ, அக்கறையோ காட்டவில்லை. எதிா்க்கட்சித் தலைவா் என்கிற பதவி இல்லாமல் இருந்ததைக் காரணம் காட்டி ‘லோக்பால்’ அமைப்பின் தலைவா் தோ்வு நடத்தப்படாமல் தொடா்ந்தது.
  • 2013-இல் ‘லோக்பால்’ சட்டம் நிறைவேற்றப்பட்டும்கூட அடுத்த ஐந்து ஆண்டுகள் ‘லோக்பால்’, ‘லோக் ஆயுக்த’ அமைப்புகள் செயல்படுவது குறித்த எந்தவித முயற்சியும் முன்னெடுக்கப்படவில்லை. கடைசியில் உச்சநீதிமன்றம் தலையிட்டு உடனடியாக ‘லோக்பால்’ அமைக்கப்பட வேண்டும் என்கிற கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்த பிறகுதான் ‘லோக்பால்’ அமைப்பின் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கு உயா்நிலை தோ்வுக் குழு உருவாக்கப்பட்டது.
  • அந்தத் தோ்வுக் குழு ஒருவழியாக கடந்த ஆண்டு மாா்ச் மாதம் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஷை லோக்பாலாக தோ்ந்தெடுத்து அறிவித்தது. லோக்பாலாக நீதிபதி பி.சி.கோஷ் நியமிக்கப்பட்டாா் என்றாலும், தனது குழுவினரைத் தோ்ந்தெடுப்பதில் அவருக்கு எந்தவிதப் பங்கும் தரப்படவில்லை என்பது மிகப் பெரிய குறை.
  • ‘லோக்பால்’ என்பது தலைமைப் பொறுப்பில் இருக்கும் நீதிபதியின் நியமனம் மட்டுமல்ல, ஊழல் எதிா்ப்பு, கண்காணிப்பு, பொது நிா்வாகம், நிதி, சட்டம், நிா்வாக மேலாண்மை ஆகியவற்றில் குறைந்தபட்சம் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மேலும் எட்டு பேரின் நியமனமும்கூட. லோக் ஆயுக்த அமைப்புகளுக்கு தலைவரையும் உறுப்பினா்களையும் தோ்ந்தெடுத்தாக வேண்டும். இந்தப் பணிகள் எதுவுமே முன்னுரிமையுடன் செய்யப்படாமல் இருக்கின்றன என்கிற நிலையில், இப்போது ‘லோக்பால்’ அமைப்புக்கான விதிமுறைகளையும் நடைமுறைகளையும் அரசு அறிவித்திருப்பது, ஊழலுக்கு எதிரான போராட்டம் தனது அடுத்த அடியை எடுத்து வைத்திருக்கிறது என்று வேண்டுமானால் கருதலாம்.
  • பிரதமா், முன்னாள் பிரதமா்கள், இந்நாள் - முன்னாள் மத்திய அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், உயரதிகாரிகள் ஆகியோரின் முறைகேடுகள் குறித்து புகாா் தெரிவிக்க ‘லோக்பால்’ சட்டம் 2013 அதிகாரம் வழங்குகிறது. ஊழல் அல்லது முறைகேடு குறித்துப் புகாா் அளிப்பவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது. இந்நாள் - முன்னாள் பிரதமா்கள் மீதான குற்றச்சாட்டுகளை தொடக்க நிலையிலேயே ‘லோக்பால்’ அமைப்பின் அனைத்து உறுப்பினா்களும் அடங்கிய அமா்வு விசாரிக்கும். அதே நேரத்தில் தவறாகவும், உள்நோக்கத்துடனும் புகாா் வழங்கினால் அவா்களுக்கு சிறைத் தண்டனை வழங்கி தண்டிக்க ‘லோக்பால்’ அமைப்புக்கு அதிகாரம் உண்டு. வழக்குகள் விரைந்து விசாரிக்கப்படும்.
ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விஸ்வநாதன் ராஜினாமா
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்
  1. ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் என்.எஸ். விஸ்வநாதன், அவருடைய பதவிக் காலம் முடிய இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உடல்நிலை காரணமாக அவர் இம்முடிவை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய ராஜினாமா மார்ச் 31 முதல் நடைமுறைக்கு வருகிறது.
  2. பெங்களூர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுநிலை பட்டம் பெற்றஎன்.எஸ்.விஸ்வநாதன், 1981-ம் ஆண்டு முதல்ரிசர்வ் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு துணை கவர்னராக நியமிக்கப்பட்டார்.
  3. அதன்படி, வங்கிகள் தொடர்பான விதிமுறைகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிலை ஆய்வு உள்ளிட்ட செயல்பாடுகளைக் கவனித்து வந்தார். அதற்கு முன்னதாக வங்கிசாரா பிரிவில் முதன்மை பொது மேலாளராக இருந்தார்.
  4. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவருடைய பதவிக்காலம் முடிய இருந்த நிலையில், கூடுதலாக ஒரு வருடம், அதாவது 2020 ஜூன் வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் துணை கவர்னர் பொறுப்புக்கு நிர்வாக இயக்குநர்கள் லில்லி வதேரா மற்றும் ராஜேஷ்வர் ராவ் ஆகிய இருவரின் பெயர் பரிந்துரையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யெஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்:
தற்போதைய சமூக பொருளாதார சிக்கல்கள்
  • யெஸ் வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் சீதாராமன் தெரிவித்துள்ளார்.
  • யெஸ் வங்கி தற்போது கடும்நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அதன் நிதி மூலதனத்தை ஆர்பிஐ நிர்ணயித்த வரம்புக்குள் கொண்டுவர கடும் முயற்சியில் இறங்கி இருந்தது. மூலதனத்தை உயர்த்த ரூ.14,000 கோடி நிதி திரட்ட கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வங்கியின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்தது. ஆனால் எதிர்பார்த்த அளவில் முதலீடு வராத நிலையில் அந்த இலக்கை ரூ.10,000 கோடியாக குறைத்தது.
  • ஐஎல் அண்ட் எஃப்எஸ், ஏடிஏஜி குழும நிறுவனம், காக்ஸ் அண்ட் கிங்ஸ், சிஜி பவர், டிஹெச்எஃப்எல், எஸ்ஸார் ஷிப்பிங், மெக்லாய்ட் ரஸ்ஸல் ஆகிய நிறுவனங்களுக்கு மட்டும் யெஸ் வங்கி ரூ.10,206 கோடிக்குமேல் கடன் அளித்துள்ளது. இவற்றில் சில நிறுவனங்கள் திவால் நிலையில் உள்ளன. இதனால் யெஸ் வங்கியின் வாராக் கடன் கடுமையாக உயர்ந்தது.
  • எஸ்பிஐ மற்றும் எல்ஐசி கூட்டமைப்பு யெஸ்வங்கியின் பங்குகளை வாங்க முன்வந்துள்ளது. தற்போது யெஸ் வங்கியின் கடன் சுமை ரூ.14,700 கோடியாக உள்ளது. இது வங்கியின் சொத்து மதிப்பில் 54.5% ஆகும். மேலும் யெஸ் வங்கியை காக்கும் பல்வேறு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கியும், நிதியமைச்சகமும் எடுத்து வருகின்றன.
  • அதன்படி, வாடிக்கையாளர்கள் ரூ.50,000 வரையில் வங்கியிலிருந்து அதிகபட்சமாக பணம் எடுக்கலாம். மார்ச் 5ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதிவரை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் எஸ் வங்கி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதி வட்டி 8.5 சதவீதமாக குறைப்பு
விருதுகள்
  1. நடப்பு நிதி ஆண்டுக்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதி ( இபிஎஃப்) மீதான வட்டி 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 2018-19 நிதி ஆண்டுக்கான வட்டி 8.65 சதவீதமாக இருந்துவந்த நிலையில், தற்போது 2019-20 நிதி ஆண்டுக்கான வட்டி 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
  2. இது கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிலான குறைந்த வட்டி விகிதம் ஆகும். நேற்று மத்திய அறங்காவல் வாரியக் குழுவின் சந்திப்பு நடைபெற்றது. அதில் இபிஎஃப் மீதான வட்டியை குறைக்க முடிவெடுக்கப்பட்டது.
  3. இதனால் நடப்பு நிதி ஆண்டில் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு ரூ.700 கோடி உபரியாக இருக்கும் என்று தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்தார்.
  4. பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 2012-13-ம் நிதி ஆண்டில் 8.5 சதவீதமாக இருந்தது. அதிகபட்ச அளவாக 2015-16 நிதி ஆண்டில் 8.8 சதவீதமாக இருந்தது. 2016-17-ல் 8.65 சதவீதமாகவும், 2017-18-ல் 8.55 சதவீதமாகவும் இபிஎஃப் வட்டி விகிதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
  5. இம்முடிவு தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலை தொழிலாளர் அமைச்சகம் எதிர்நோக்கி இருக்கிறது. பொது வருங்கால வைப்பு நிதி, தபால் அலுவலக சேமிப்புத் திட்டம் ஆகியவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவுகளைப் போலவே பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியையும் நிர்ணயிக்க மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல்
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்
உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்..
ஷெஹ்ரி சம்ரிதி உட்சவ் (Shehri Samridhi Utsav)
நலன்புரி சார்ந்த அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு
ஷெஹ்ரி சம்ரிதி உட்சவ் 

இது வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சின் முன்முயற்சி. இது DAY-NULM இன் வரம்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு பேரணி. 
இது பெண்கள் சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளுக்கான வேலை மேளாக்கள் மற்றும் கண்காட்சிகளையும் ஏற்பாடு செய்கிறது.