TNPSC Current Affairs : March-03-2020
தமிழருக்கு ‘இஸ்லாமிகா 500’ இதழ் விருது
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்
 • இஸ்லாமியப் பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவதற்காக சிங்கப்பூரைச் சேர்ந்த முஹம்மது ஜின்னாவுக்கு, ‘இஸ்லாமிகா 500’ இதழ் விருது வழங்கி சிறப்பித்துள்ளது. இவர் தமிழர் ஆவார்.
 • யுனைடெட் வேர்ல்டு ஹலால்டெவலப் மென்ட் (UNWHD) என்றநிறுவனத்தின் தலைவராக இருந்துவரும் முஹம்மது ஜின்னா, இஸ்லாமிய பொருளாதாரத்துக்காகப் பெரும் பங்காற்றிவருகிறார். ஆண்டுதோறும் நவம்பர்1-ம் தேதியை உலக ஹலால் தினமாக அறிவித்து, அன்றைய தினத்தில் சர்வதேச அளவிலானவர்த்தகக் கண்காட்சியை பல்வேறுநாடுகளில் நடத்தியிருக்கிறார்.
 • இந்த வர்த்தக கண்காட்சி, இஸ்லாமிய வங்கி, உணவுப் பொருட்கள் தயாரிப்பு, போக்குவரத்து, சுற்றுலா மற்றும் மருத்துவ சுற்றுலாஆகியவற்றை பல்வேறு நாடுகளுக்கு மத்தியில் மேம்படுத்தும் முன்முயற்சியை எடுப்பதற்கும் – உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள், முதலீட்டார்கள், நுகர்பொருள்நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுகள் ஆகியவைப் பொதுவான ஒரு தளத்தில் சந்தித்து தொழில் பரிமாற்றங்கள், ஒப்பந்தங்wகள், வர்த்தக சமூகங்களுக்கு மத்தியிலான நெட்வொர்க்கிங் முதலானவற்றுக்கு களம் அமைத்து தருகிறது. மேலும் முஹம்மது ஜின்னா சில நாடுகளுக்கு சுற்றுலாத் துறை ஆலோசகராகவும் இருக்கிறார். போஸ்னியாவின் அமைதி தூதுவராகவும் இருக்கிறார்.
ஜிஎஸ்டி லாட்டரி திட்டம் வரும் ஏப்ரல் 1-ல் அறிமுகம்
தற்போதைய சமூக பொருளாதார சிக்கல்கள்
 1. நாடு முழுவதும் சரக்கு மற்றும்சேவை வரி (ஜிஎஸ்டி) கடந்த 2017 ஜூலை 1-ம் தேதி அமலுக்கு வந்தது.
 2. விற்பனை வரி, உற்பத்தி வரி, சேவை வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளுக்கு பதில் இந்த ஒருங்கிணைந்த வரி முறை அறிமுகம்செய்யப்பட்டது.
 3. ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு மறைமுக வரி வருவாய் கிடைக்கவில்லை. வரி ஏய்ப்பே இதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.
 4. எனவே, பொதுமக்கள் பொருட்களை வாங்கும்போதும் சேவைகளைப் பெறும்போதும் அதற்குரிய ரசீதை கேட்டு வாங்குவதை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 5. இதற்காக, ஜிஎஸ்டி லாட்டரி திட்டம் வரும் ஏப்ரல் 1-ல் அறிமுகம் செய்யப்படும் .
 6. இதன்மூலம் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்வது குறையும் என அரசு கருதுகிறது. வரும் 14-ம் தேதி நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
கொரோனா வைரஸ் (கொவிட்-19) குறித்த அறிவுரை
பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்
 • கொவிட்-19 குறித்த உலகளாவிய சூழல் காரணமாக, இதற்குமுன் அனுப்பப்பட்ட அறிவுரைகளைப் புறந்தள்ளி, கீழ்காணும் புதிய அறிவுரைகளை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை 03.03.2020 அன்று வெளியிட்டுள்ளது.
 • வழக்கமான அனைத்து (ஸ்டிக்கர்) விசாக்கள் / இ-விசா (ஜப்பான் மற்றும் தென்கொரியாவுக்கான வந்தவுடன் பெற்றுக்கொள்ளும் விசா உட்பட) இத்தாலி, ஈரான், தென்கொரியா, ஜப்பான் பிரஜைகளுக்கு 03.03.2020 அன்று அல்லது அதற்குமுன்பு வழங்கப்பட்டு, அந்தப் பயணி இதுவரை இந்தியாவிற்குள் வரவில்லை என்றால், அந்த விசா உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. தவிர்க்க முடியாத காரணங்களின் பேரில் இந்தியா வரவிரும்புவோர், புதிய விசா கோரி தங்களுக்கு அருகில் உள்ள இந்தியத் தூதரகம் / துணைத் தூதரகத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
 • சீன மக்களுக்கு 05.02.2020 மற்றும் அதற்கு முன்பு வழங்கப்பட்ட வழக்கமான (ஸ்டிக்கர்) விசா / இ-விசா ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்கிறது. தவிர்க்க முடியாத காரணங்களின் பேரில் இந்தியா வரவிரும்புவோர், புதிய விசா கோரி தங்களுக்கு அருகில் உள்ள இந்தியத் தூதரகம் / துணைத் தூதரகத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
 • சீனா, ஈரான், இத்தாலி, தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு 01.02.2020 அல்லது அதற்குப் பிறகு சென்று வந்த அனைத்து வெளிநாட்டினருக்கும் வழக்கமான (ஸ்டிக்கர்) விசா / இ-விசா வழங்கப்பட்டு, அவர்கள் இதுவரை இந்தியாவிற்குள் வரவில்லையெனில், அந்த விசாக்கள் உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. தவிர்க்க முடியாத காரணங்களின் பேரில் இந்தியா வரவிரும்புவோர், புதிய விசா கோரி தங்களுக்கு அருகில் உள்ள இந்தியத் தூதரகம் / துணைத் தூதரகத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
 • தூதர்கள் / ஐநா மற்றும் இதர சர்வதேச அமைப்புகளின் அதிகாரிகள், வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினர் மற்றும் மேற்குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த விமானப் பணியாளர்கள் இந்தியாவிற்குள் நுழைவதற்கு இந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. எனினும், அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்பட வேண்டியது கட்டாயமாகும்.
 • எந்தவொரு விமான நிலையத்திலிருந்தும் இந்தியாவிற்கு வரும் அனைத்து சர்வதேச விமானப் பயணிகளும், முறையாக பூர்த்தி செய்யப்பட்ட சுய விவரப் படிவம் (தொலைபேசி எண் மற்றும் இந்தியாவில் தங்கும் முகவரி உள்ளிட்ட சுயவிவரங்கள்) மற்றும் தங்களது பயண விவரம் போன்றவற்றை அனைத்து விமான நிலையங்களிலும் உள்ள சுகாதார அதிகாரிகள் மற்றும் குடியேற்றப் பிரிவு அதிகாரிகளிடம் வழங்க வேண்டும்.
 • கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நாடுகள் தவிர, சீனா, தென்கொரியா, ஜப்பான், ஈரான், இத்தாலி, ஹாங்காங், மகாவ், வியட்நாம், மலேஷியா, இந்தோனேஷியா, நேபாளம், தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் தைவான் நாடுகளில் இருந்து நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ வரும் அனைத்துப் பயணிகளும் (வெளிநாட்டு மற்றும் இந்தியப் பயணிகள்) தாங்கள் வந்திறங்கும் விமான நிலையத்தில் மருத்துவப் பரிசோதனைக்கு கட்டாயம் உட்பட வேண்டும்.
 • இந்தியர்கள் யாரும் சீனா, ஈரான், கொரிய குடியரசு, இத்தாலி நாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதுடன், கொவிட்-19 பாதிப்புக்கு ஆளான பிற நாடுகளுக்கும் அத்தியாவசியமின்றி செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
 • இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவுவதைத் தடுக்க,   மேற்காணும் அறிவுரைகள் குறித்து, தமிழகத்தில் உள்ள அனைத்து தொலைக்காட்சி செய்தி அலைவரிசைகள் மற்றும் பண்பலை வானொலிகளும் விரிவாக செய்தி வெளியிடுவதோடு, விரைவுச் செய்திகளிலும் இதனை வெளியிட்டு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

பிற்சேர்க்கை – 1

நோவல் கொரோனாவைரஸ் (கொவிட்-19)

உங்களையும் மற்றவர்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

உங்களுக்கு உதவ எங்களுக்கு உதவுங்கள்

   செய்யக்கூடியவை

 • முறையான தனிநபர் சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும்
 • கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும்
 • அடிப்படை சுவாச பாதுகாப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும் – இருமல் மற்றும் தும்மலின் போது உங்களது வாயை மூடிக்கொள்ள வேண்டும்
 • உங்களது கைகளை சோப்பு போட்டு ஓடும் தண்ணீரில் கழுவ வேண்டும் (கைகள் அழுக்காக காணப்பட்டால்)
 • ஆல்கஹால் கலந்த கை துடைக்கும் சாதனம் அல்லது சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கை கழுவ வேண்டும் (கைகள் அழுக்காக காணப்படாவிட்டால்)
 • உபயோகித்த காகித துடைப்பான்களை உடனடியாக மூடப்பட்ட குப்பை கூடைக்குள் போட வேண்டும்
 • சுகவீனம் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும் 

செய்யக்கூடாதவை

 • இருமல் அல்லது காய்ச்சல் இருந்தால், யாருடனும் நெருங்கிய தொடர்பு கொள்ளலாம்
 • பொது இடத்தில் எச்சில் துப்பலாம்
 • உயிருடன் உள்ள விலங்குகளைத் தொடலாம் அல்லது சமைக்கப்படாத மாமிசத்தை உட்கொள்ளலாம்
 • பண்ணைகள், கால்நடை சந்தைகள் அல்லது மிருகவதை இடங்களுக்கு செல்லலாம்