TNPSC Current Affairs : March-01-2020
உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்

உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்- 9-வது இடத்தில் முகேஷ் அம்பானி.

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 9-வது இடத்தைப் பிடித்துள்ளார். அவருடைய சொத்து மதிப்பு 13 பில்லியன் டாலர் (ரூ.92,300 கோடி) உயர்ந்து, 67 பில்லியன் டாலரை (ரூ.4,75,700 கோடி) எட்டியதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக உலக கோடீஸ் வரர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இடம்பெற்றுள்ளார்.

ஹூருன் நிறுவனம் 2020-ம்ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி பேஜ் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஸ்டீவ் பால்மர் ஆகிய இருவருடன் முகேஷ் அம்பானியும் 9-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆசியாவிலிருந்து முதல் 10 இடங்களில் இடம்பெற்று இருப்பவர் முகேஷ் அம்பானி மட்டுமே என்று ஹுருன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

  1. 140 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் ஃபிஸோஸ் முதல் இடத்தைத் தக்க வைத்துகொண்டுள்ளார்.
  2. எல்விஎம்ஹெச் நிறுவனத்தின் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் 107 பில்லியன் டாலர் மதிப்புடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
  3. முந்தைய ஆண்டு இரண்டாம் இடத்தில் இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இந்த ஆண்டு 106 பில்லியன் டாலர் மதிப்பைக்கொண்டு மூன்றாம் இடத்துக்கு நகர்ந்துள்ளார்.
  4. 102 பில்லியன் டாலர் மதிப்புடன் சந்தை முதலீட்டாளர் வாரன் பஃபெட் 4-வது இடத்திலும்,
  5. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பர்க் 84 பில்லியன் டாலர் மதிப்பைக்கொண்டு 5-இடத்திலும் உள்ளனர்.
துபாய் டென்னிஸ்: ஜோகோவிச் ‘சாம்பியன்’
விளையாட்டு
துபாய் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா), 6-ம் நிலை வீரர் சிட்சிபாசுடன் (கிரீஸ்) மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 5-வது முறையாக இந்த கோப்பையை வசப்படுத்தினார். இந்த சீசனில் இன்னும் தோல்வியே சந்திக்காத ஜோகோவிச் தொடர்ச்சியாக பெற்ற 21-வது வெற்றி இதுவாகும். மகுடம் சூடிய ஜோகோவிச்சுக்கு ரூ.4 கோடியும், 2-வது இடம் பிடித்த சிட்சிபாசுக்கு ரூ.2 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
அகில இந்திய டென்னிஸ்: எஸ்.ஆர்.எம். அணி ‘சாம்பியன்’
விளையாட்டு
கல்லூரி அணிகளுக்கான அகில இந்திய டென்னிஸ் போட்டி அந்த கல்லூரி வளாகத்தில் நடந்தது. 16 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் கிரண் அருணாச்சலா, ஓஜெஸ் தெய்ஜோ, யாஷ்வாத் ராகவ், கிருஷ்ணா தேஜா ஆகியோர் அடங்கிய எஸ்.ஆர்.எம். அணி 2-0 என்ற கணக்கில் எஸ்.எஸ்.என். என்ஜினீயரிங் கல்லூரி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு மொத்தம் ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.
சர்வதேச டென்னிசில் இருந்து விடைபெற்றார், மரிய ஷரபோவா
விளையாட்டு
உலகின் சிறந்த டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவராக வலம் வந்த ‘ரஷிய புயல்’ மரிய ஷரபோவா சர்வதேச டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான 32 வயதான ஷரபோவா 5 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளர் ஆவார்.2004-ம் ஆண்டு ஷரபோவா தனது 17-வது வயதில் செரீனா வில்லியம்சை நேர் செட்டில் தோற்கடித்து விம்பிள்டன் பட்டத்தை வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதைத் தொடர்ந்து 2006-ம் ஆண்டு அமெரிக்க ஓபனிலும், 2008-ல் ஆஸ்திரேலிய ஓபனிலும், 2012 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் பிரெஞ்ச் ஓபனிலும் மகுடம் சூடினார். விளம்பர படங்களிலும், டென்னிசிலும் கொடிகட்டி பறந்த ஷரபோவா அதிக வருவாய் ஈட்டும் வீராங்கனையாக அடையாளம் காணப்பட்டார்.
அருணாச்சல பிரதேச காகிதமில்லாமல் சட்டமன்றம்
இந்தியாவில் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் அமைப்பு
பிரதமர் நரேந்திர மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ முயற்சிக்கு ஏற்ப அருணாச்சல பிரதேச சட்டமன்றம் காகிதமில்லாமல் போய்விட்டது. மாநில சட்டசபையின் பட்ஜெட் அமர்வு 2020 மார்ச் 2 அன்று தொடங்கியது. இந்த அமர்வு 2020 மார்ச் 10 அன்று நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளது.
மக்களவை சபாநாயகர் ஸ்ரீ ஓம் பிர்லா சுபோஷித் மா அபியனை ராஜஸ்தானின் கோட்டாவில் தொடங்கினார்.
நலன்புரி சார்ந்த அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு
மார்ச் 1, 2020 அன்று, மக்களவை சபாநாயகர் ஸ்ரீ ஓம் பிர்லா, சுபோஷித் மா அபியனை (Suposhit Maa Abhiyan) ராஜஸ்தானின் கோட்டாவில் தொடங்கினார். 

ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கம். 

​​​​​​​இது முக்கியமாக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் இளம் பருவப் பெண்களை ஆதரிக்கிறது.