TNPSC Current Affairs : June-30-2020
டிரம்பை கைது செய்ய பிடிவாரண்டு
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கைது செய்ய ஈரான் பிடிவாரண்டு பிறப்பித்தது.

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் அறிவித்தார்.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.

59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
 • ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயக்க முறைமை கொண்ட செல்போன்களில் பயன்படுத்தப்படும் சில செயலிகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் வந்தன.
 • குறிப்பாக பயனாளர்களின் தரவுகளை திருடி இந்தியாவுக்கு வெளியே இருக்கும் அதன் மைய அமைப்புகளுக்கு (சர்வர்) அனுப்புவதாக புகார்கள் எழுந்துள்ளன.
 • இவ்வாறு திருடப்படும் தகவல் தொகுப்பால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைகிறது.
 • இது இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டையும் பாதிக்கிறது.
 • இது உடனடியாக சரி செய்ய வேண்டிய விவகாரம் என்பதால் அவசர நடவடிக்கை தேவைப்படுகிறது.
 • மேலும் தீங்கிழைக்கும் இந்த செயலிகளை தடை செய்யுமாறு இந்திய சைபர் குற்றங்களுக்கான ஒருங்கிணைப்பு மையம் மற்றும் உள்துறை அமைச்சகத்தில் இருந்து பரிந்துரைகள் வந்துள்ளன.
 • இந்த பரிந்துரைகளின் அடிப்படையிலும், இந்த செயலிகளால் இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் விளைவதாக சமீபத்தில் கிடைத்த நம்பகமான தகவல்களின் அடிப்படையிலும் இந்த செயலிகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 • அதன்படி செல்போன் மற்றும் செல்போன் அல்லாத பிற இணைய பயன்பாட்டு கருவிகளிலும் இந்த செயலிகள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
 • இந்திய சைபர் வெளியில் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
 • மேலும் இந்த நடவடிக்கை, கோடிக்கணக்கான இந்திய செல்போன் மற்றும் இணையதள பயனாளர்களை பாதுகாக்கும்.
 • இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. ‘டிக் டாக்’, ‘வி சாட்’, ‘ஹலோ’ மட்டுமின்றி, ‘ஷேர்இட்’, ‘யூசி பிரவுசர்’, ‘கிளாஷ் ஆப் கிங்ஸ்’, ‘லைக்’, ‘எம்.ஐ. கம்யூனிட்டி’, ‘நியூஸ்டாக்’, ‘பியூட்ரி பிளஸ்’, ‘ஜெண்டர்’, ‘பிகோ லைவ்’, ‘மெயில் மாஸ்டர்’, ‘வி சிங்’, ‘விவா வீடியோ’, ‘விகோ வீடியோ’, ‘கேம் ஸ்கேனர்’, ‘விமேட்’ என மொத்தம் 59 செயலிகள் தடை செய்யப்படுகின்றன.
மத்திய அரசின் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நாட்கள்
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்

மத்திய அரசின் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நாட்கள்:

 • கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்திய-சீன ராணுவங்களிடையே பதற்றம் நிலவும் நிலையிலும், ஜூலை 1 முதல் நாட்டில் 2-ஆம் கட்ட பொதுமுடக்க விடுப்பு (அன்லாக்-2) அமலாகும் சூழலிலும் பிரதமா் மோடி உரையாற்றுவது குறிப்பிடத்தக்கது.

 

 1. கரோனா நோய்த்தொற்று சூழல் ஏற்பட்டதையடுத்து நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி உரையாற்ற இருப்பது இது 6-ஆவது முறையாகும்.
 2. முதலில் கடந்த மாா்ச் 19-ஆம் தேதி உரையாற்றியபோது மாா்ச் 22-ஆம் தேதி ஒருநாள் பொது முடக்கத்தை அறிவித்தாா்.
 3. பின்னா் மாா்ச் 24-ஆம் தேதி உரையாற்றியபோது கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க நாட்டில் 21 நாள் பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதாக அறிவித்தாா்.
 4. ஏப்ரல் 3-ஆம் தேதி நாட்டு மக்களுக்கு வெளியிட்ட காணொலிச் செய்தியில், கரோனா முன்களப் பணியாளா்களை கௌரவிக்கும் வகையில் ஏப்ரல் 5-ஆம் தேதி வீடுகளில் விளக்கேற்றக் கூறியிருந்தாா். பின்னா் ஏப்ரல் 14-ஆம் தேதி ஆற்றிய உரையின்போது பொது முடக்கம் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தாா்.
 5. இறுதியாக கடந்த மே 12-ஆம் தேதி மக்களுக்கு உரையாற்றியபோது நாட்டின் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்டெடுப்பதற்காக ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் சிறப்பு நிதி தொகுப்பை அறிவித்திருந்தாா்.
சிவ போஜன் திட்டம்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
 1. மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.10க்கு மதிய உணவு(தாலி) வழங்கும் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது.
 2. இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதன் காரணமாக, ரூ.10-க்கு வழங்கப்பட்ட உணவு ரூ.5 ஆகக் குறைத்து அந்த மாநில அரசு அறிவித்தது.
 3. இதையடுத்து, மாநிலம் முழுவதும் தற்போது 848 சிவ போஜன் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
 4. மகாராஷ்டிர அரசாங்கத்தின் லட்சியத் திட்டமான சிவ போஜன் தாலி கடந்த ஜனவரி 26-ம் தேதி துவங்கியதிலிருந்து இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளதாக முதல்வர் அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.