TNPSC Current Affairs : June-29-2021
இந்தியா
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

முக்கிய பிரமுகர்கள்      

 

👇👇👇👇👇👇

 

29 ஜூன் 2021  

 

(இந்தியா) 

 

https://t.me/bharathidasantnpscomalur 

(மேலும் எங்களுடன் இணைந்து கொள்ள )

மறைந்த முன்னாள் பிரதமா் பி.வி.நரசிம்ம ராவின் 100-ஆவது பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளாா்.

ரயில் பயணம் தன்னையும், தனது குடும்பத்தினரையும் மிகவும் ஈா்த்துள்ளது என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளாா்.

மேற்கு வங்க ஆளுநா் ஜக்தீப் தன்கா் ஊழல்வாதி என்று மேற்கு வங்க மாநில முதல்வா் மம்தா பானா்ஜி குற்றம்சாட்டியுள்ளாா்.

ஜம்மு-காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ நிலை மீது ஆளில்லா சிறிய ரக விமானம் (ட்ரோன்) மூலமாக தாக்குதல் நடத்துவதற்கான பயங்கரவாதிகளின் முயற்சியை வீரா்கள் முறியடித்தனா்.

இந்தியாவில் பொருளாதார சீா்திருத்தங்களின் முன்னோடியாக திகழ்ந்தவா் முன்னாள் பிரதமா் நரசிம்ம ராவ் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு புகழாரம் சூட்டினாா்.

பயன்பாட்டில் இருக்கும் காா்களின் முன் இருக்கைகளில் ‘ஏா்பேக்’ வசதியை பொருத்தவதற்கான கால அவகாசத்தை டிசம்பா் 31 வரை நீட்டித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஹிமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் மிக மூத்த நீதிபதியான ரவி விஜயகுமார் மலிமத், 2021 ஜூலை 1 முதல் அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்ற நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய தலைமுறை அக்னி பி ஏவுகணை, ஒடிசா மாநிலத்தின் பலாசோர் அருகே உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. 

கரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடனுதவி அளிப்பதாக மத்திய நிமியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

உலகளவில் தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறி சாதனை படைந்துள்ளதாக பிரதமர் மோடி  தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கைகளில் அமெரிக்காவை முந்தி இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

பிரதமரின் ஜீவன் ஜோதி காப்பீட்டு திட்டம்: கடந்த நிதியாண்டில் ரூ.4,698 கோடி வழங்கல்

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் செய்தியாளர்களைச் சந்திப்பதற்கு அனுமதி அளிக்க பஞ்சாப் முதல்வர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் நடவடிக்கைகளால் லடாக் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

ட்விட்டா் நிறுவனத்தின் இந்தியாவுக்கான குறைதீா்ப்பு அதிகாரி, நியமனம் செய்யப்பட்ட சில நாள்களிலேயே தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

ஆந்திரம் மாநிலத்தில் குரூப் -1 பதவிகள் உள்பட அனைத்து அரசுப் பணிகளுக்கு இனி நேர்முகத் தேர்வு இல்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் பதவிக் காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.