TNPSC Current Affairs : June-20-2021
இன்றைய நடப்பு நிகழ்வுகள்(20-June-2021)
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

(TNPSC/RRB/SSC/BANK)

 

 • டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 7,500 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.
 • இந்திய இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா, மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
 • இந்திய அணியை அதிக டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
 • அஸ்ஸாமில் இரு குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு அரசின் சில நலத் திட்டங்களின் கீழ் சலுகைகளை அளித்து, இரு குழந்தைகள் கொள்கையை படிப்படியாக அமல்படுத்த அஸ்ஸாம் அரசு முடிவு
 • இந்திய விமானப் படையில் 36 ரஃபேல் போா் விமானங்களும் அடுத்த ஆண்டுக்குள் இணைக்கப்படும் என்று விமானப் படையின் தலைமை தளபதி ஆா்.கே.எஸ்.பதௌரியா தெரிவித்துள்ளாா்.
 • தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக ஊக்குவிப்புத் துறையின் செயலா் குருபிரசாத் மொஹபாத்ரா (59), கரோனாவுக்கு பிந்தைய தொந்தரவுகளால், தில்லியில்  காலமானாா்.
 • சாகித்ய அகாதெமி விருது பெற்ற மலையாள எழுத்தாளா் எஸ்.ரமேசன் நாயா் (73), உடல்நலக்குறைவால் கொச்சியில்  காலமானாா்.
 • மக்களவைத் தலைவராக ஓம் பிா்லா இரண்டு ஆண்டுகள் பணி நிறைவு செய்துள்ள நிலையில், அவரின் பணிக்கு பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்தாா்.
 • இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூன் 11-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 60,808 கோடி டாலரைத் தாண்டி புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.
 • அஸ்ஸாமில் தினந்தோறும் 3 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்தாா்.
 • காா்கிலுக்கு விமானச் சேவைகளை அளிப்பது தொடா்பான சாத்தியக்கூறுகள் குறித்து லடாக் துணைநிலை ஆளுநா் ஆா்.கே.மாத்தூா் மத்திய அரசுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
 • ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் நிலையில், சா்வதேச யோகா தினத்தை குறிக்கும்விதமாக சிறப்பு அஞ்சல்தலை முத்திரை ஒன்றை இந்திய அஞ்சல் துறை வெளியிடவுள்ளது
 • கடந்த ஓராண்டாக திருமலையில் நெகிழிப் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டதால், திருமலை பசுமை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 • ஈரானில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட அந்த நாட்டின் தலைமை நீதிபதி இப்ராஹிம் ரய்சி அமோக வெற்றி பெற்றாா்.
 • ஜனநாயக ஆதரவு நாளிதழான ‘ஆப்பிள் டெய்லி’யின் தலைமை ஆசிரியா் ரையன் லா மற்றும் தலைமைச் செயலதிகாரி சேயங் கிம்-ஹங் ஆகியோருக்கு அந்த நகர நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.
 • ஐ.நா. பொதுச் செயலராக அன்டோனியோ குட்டெரெஸ் வெள்ளிக்கிழமை மீண்டும் நியமிக்கப்பட்டாா்
 • கனடா உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த மஹ்மூத் ஜமால் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
 • ஜெனீவாவில் நடைபெற்ற சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு வழங்கிய சிறப்பு பரிசு கவனம் பெற்றுள்ளது.
 • நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
 • இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்கா் ராதிகா ஃபாக்ஸ் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தண்ணீா் பிரிவு அலுவலக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதை அமெரிக்க நாடாளுமன்ற மேலவையான செனட் உறுதிப்படுத்தியத
 • தனது சொந்த விண்வெளி நிலையத்துக்கு 3 வீரா்களை முதல்முறையாக அனுப்பி சீனா சாதனை படைத்துள்ளது.
 • இந்திய - சீன ஜோடியினருக்கு எதிராக இன ரீதியாக இழிவுபடுத்துவதுபோல பேசியதாக சிங்கப்பூரில் பேராசிரியரை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 • இலங்கையில் சூரிய ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் சுமாா் ரூ.740 கோடி கடனை இந்தியா வழங்கியுள்ளது.
 • பிரிட்டனில் செயல்படுத்தப்பட்டு வரும் கரோனா தடுப்பூசி திட்டம், 21 மற்றும் 22 வயதினருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
 • கத்தாா் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியுடன் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தோஹாவில் செவ்வாய்க்கிழமை சந்தித்து
 • சீனாவில் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் கசிவு ஏற்பட்டு கதிா்வீச்சு அபாயம் உருவாகியுள்ளதாக வெளியான தகவலை அந்நாடு மறுத்துள்ளது.

 

Bharathidasan Tnpsc Coaching Center:

Telegram link:

https://t.me/joinchat/yTMhgStic1JiMzhl

 

Share and support with us