TNPSC Current Affairs : June-20-2020
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பு திட்டத்தை தொடக்கி வைத்தார்
நலன்புரி சார்ந்த அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு

Garib Kalyan Rojgar Abhiyaan

புதிய வேலைவாய்ப்பு திட்டம்

சொந்த ஊர்களுக்குத் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலமாக இன்று தொடக்கி வைத்தார். பொது முடக்கத்தால் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிய புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு வேலை வாய்ப்பளித்து, அவா்களின் வாழ்வாதாரத்துக்கு உதவிடும் வகையில், ரூ.50,000 கோடியில் கிராமப்புற பொதுப் பணி திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது.

தொடக்கம் :

பிகாரில், ககரியா மாவட்டத்தில் உள்ள தேலிகா் கிராமத்தில் இந்த திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

பங்கேற்பு:

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா், துணை முதல்வா் சுஷீல் குமாா் மோடி ஆகியோா் முன்னிலையில், பிரதமா் மோடி தில்லியில் இருந்தபடி காணொலி முறையில் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். 

நோக்கங்கள்:

  • புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் வாழ்வாதாரத்துக்கு உதவுவதற்காக, கிராமப்புற பொதுப் பணி திட்டங்களில் அவா்களுக்கு 125 நாள்கள் வேலை வழங்கப்படவுள்ளது.
  • பிகாா், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜாா்க்கண்ட், ஒடிஸா ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களில் இந்த திட்டப் பணிகள் நடைபெறவுள்ளன.
  • இந்தப் பணிகளுக்காக, 25,000 புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
  • அதன்படி, புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு 125 நாள்களில் 25 வகையான வேலைகள் வழங்கப்படும்.
  • அவா்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதுடன் ரூ.50,000 கோடியில் கிராமப்புற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
  • இவா்கள், அங்கன்வாடி மையங்கள், கிராம ஊராட்சி அலுவலகங்கள், தேசிய நெடுஞ்சாலைப் பணிகள், ரயில்வே பணிகள், குடிநீா் பாதுகாப்பு திட்டங்கள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வா்.
  • ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ், சாலைப் போக்குவரத்து, சுரங்கம், குடிநீா் மற்றும் துப்புரவுத் துறை, சுற்றுச்சூழல், ரயில்வே, பெட்ரோலியம், மரபுசாரா எரிசக்தி, எல்லைச் சாலைகள், தொலைத்தொடா்பு, விவசாயம் ஆகிய 12 துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்தத் திட்டப் பணிகள் நிறைவேற்றப்படவுள்ளன.

 

விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ். பதெளரியா
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்

ஆர்.கே. எஸ். பதெளரியா

இந்திய விமானப் படையின் புதிய தலைமை தளபதியாக ஏர் மார்ஷல் ஆர்.கே. எஸ். பதெளரியா நியமிக்கப்பட்டுள்ளார்.

விமானப் படையின் தலைமைத் தளபதியாக இருக்கும் பி.எஸ். தனோவாவின் பதவிக்காலம் 30-ஆம் தேதி முடிவடைந்தது.

புதிய தலைமைத் தளபதியாக, விமானப் படையின் துணை தளபதியாக இருக்கும் ராகேஷ் குமார் சிங் பதெளரியாவை நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது 

இவரைப் பற்றி 

தேசிய பாதுகாப்பு அகாதெமி மாணவரான பதெளரியா, கடந்த 1980-ஆம் ஆண்டு விமானப் படையில் இணைந்தார்.

போர் விமானத்தில் சுமார் 4,250 மணி நேரத்தைக் கழித்துள்ளார்.

விமானப் படையின் துணைத் தளபதியாக 2019 மே மாதம் நியமிக்கப்பட்ட பதெளரியா, இப்போது விமானப் படையின் 26-ஆவது தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்வான் பள்ளத்தாக்கு
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்

கல்வான் பள்ளத்தாக்கு

கல்வான் நதி

  • கல்வான் நதி கடல் மட்டத்தில் இருந்து 4,350 மீட்டர் உயரத்தில் உள்ளது.
  • தொலைவு.
  • சீனாவின் தெற்கு சிஞ்சியாங் பகுதியில் இருந்து காஷ்மீர் வரை நீளும் நதி கல்வான் நதியாகும்.

 

  • இந்த நதி சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணித்து சையோக் நதியுடன் கலக்கிறது.
    பின்னணி
  • இந்த நதி குறித்து 1899 ஆம் ஆண்டு முதன்முதலில் ஆய்வு செய்து கண்டறிந்த லே பகுதியைச் சேர்ந்த குலாம் ரசூல் கல்வான் என்பவரது பெயராலேயே இந்த நதி அழைக்கப்படுகிறது.
    இதன் எல்லை
  • இந்த நதியின் பள்ளத்தாக்கு காஷ்மீரின் வடமேற்கே அக்சாய் சின் பகுதியில் அமைந்துள்ளது.

 

    1962 போர்
  • 1962 ஆம் ஆண்டு இந்தியாவுடன் நடைபெற்ற போரில், இப்பகுதியை சீனா தன்வசப்படுத்திக் கொண்டது.
  • இந்த பகுதியில் எல்லை தெளிவாக வரையறுக்கப்படாததால், இரு நாட்டு படையினரும் அப்பகுதிக்கு உரிமை கோரி வந்தனர்.
  • அதன்பிறகு எப்போதும் அந்த பகுதியில் தற்போது ஏற்பட்டதை போன்ற பதற்றம் ஏற்பட்டதில்லை
டாக்டர் சேதுராமன் பஞ்சநாதன்
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்

டாக்டர் சேதுராமன் பஞ்சநாதன்

 

இந்திய - அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் சேதுராமன் பஞ்சநாதன் அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குநராக நியமனம்.

இந்திய - அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் சேதுராமன் பஞ்சநாதன் என்ற சென்னையைச் சேர்ந்த தமிழரை அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குநராக அமெரிக்க செனட் தேர்வு செய்துள்ளது.

 

58 வயதாகும் பஞ்சநாதன் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர், அமெரிக்காவின் முன்னணி அறிவியல் நிதி ஒதுக்கீடு அமைப்புக்கு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இத்தாலி கோப்பை கால்பந்து:
விளையாட்டு

ஐரோப்பியாவில் பிரபலமான ‘இத்தாலி கோப்பை’ கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் ஜூவென்டஸ் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் அபராமாக வீழ்த்தி நபோளி அணி 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

ஈட்டி எறிதல் வீரர் தேவிந்தர் சிங் காங்
விளையாட்டு

ஈட்டி எறிதல் வீரர் தேவிந்தர் சிங் காங்கிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தடை செய்யப்பட்ட டெக்சாமிதாசோன் குளூகோகார்டிசாய்ட்ஸ் ஊக்கமருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உலகின் முதல் மாஸ்க் கண்காட்சி
பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்

உலகின் முதல் மாஸ்க் கண்காட்சி

 

  1. ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்குதலில் இருந்து ஓரளவுக்குத் தப்பித்த ஒரு நாடு செக்.
  2. தவிர, லாக்டவுனின் போது வீட்டைவிட்டு ஒரு அடி வெளியே வந்தாலும் கூட கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்று சொல்லிய நாடும் செக்தான்.
  3. ஆரம்பத்தில் கொரோனா தாக்குதல் பரவலாக இருந்தபோது மாஸ்க்கிற்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது.
  4. அதனால் மக்களே தங்களுக்குத் தேவையான மாஸ்க்குகளைத் தயாரிக்கத் தொடங்கிய சம்பவம் டுவிட்டரில் வைரலானது.
  5. இப்போது அங்கே லாக்டவுன் தளர்வு ஏற்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
  6. இந்நேரத்தில் நாட்டின் குடிமக்களைக் கவுரவிக்கும் விதமாக மக்கள் தயாரித்த 100 மாஸ்க்குகளை நேஷனல் மியூசியத்தில் கண்காட்சிக்கு வைக்கப் போகிறது செக்.
  7. ஒரு ஆட்டிச குழந்தை தயாரித்த மாஸ்க்கும் கண்காட்சியில் இடம் பெறுகிறது. மாஸ்க் அணிந்து தான் கண்காட்சியைப் பார்வையிடமுடியும்.
  8. இப்படி மாஸ்க் கண்காட்சி நடப்பது உலகில் இதுவே முதல் முறை.
நாசாவின் மனித விண்வெளி விமானத் திட்டத்திற்குத் தலைமை தாங்கிய முதல் பெண்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

நாசாவின் மனித விண்வெளி விமானத் திட்டத்திற்குத் தலைமை தாங்கிய முதல் பெண் என்ற பெருமையை கேத்தி லியூடர்ஸ் பெற்றுள்ளார். மனித ஆய்வு மற்றும் செயல்பாடுகளின் (HEO) மிஷன் இயக்குநரகத்தின் புதிய இணை நிர்வாகியாக லூடர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆரோக்கிய சேது’ (Aarogya Setu)
நலன்புரி சார்ந்த அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு

‘உடல்நலத்திற்கான பாலம்’ எனப்படும் ‘ஆரோக்கிய சேது’ (Aarogya Setu)

  • மத்திய அரசு வெளியிட்டிருக்கும் சமஸ்கிருத மொழியில் ‘உடல்நலத்திற்கான பாலம்’ எனப்படும் ‘ஆரோக்கிய சேது’ (Aarogya Setu) என்னும் பெயர் கொண்ட செயலி, ப்ளூடூத் மற்றும் லொகேஷனை வைத்து பயன்பாட்டாளர் இருக்கும் பகுதி கோவிட்-19 தொற்று உள்ள பகுதியா இல்லையா என்பதை கண்டறியும்.
  • நோய் இருப்பவர்களின் தகவலை ஆராய்ந்து பார்த்து அவர்களில் யாரேனும் இந்த செயலியை பயன்படுத்தும் நபர் இருக்கும் அதே பகுதியில் உள்ளனரா என ஆராயும்.
  • இந்த செயலி உங்களிடம் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளித்து உங்களுக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளாக எவ்வளவு வாய்ப்பு உள்ளது என்பதை நீங்கள் அறிய முடியும்.
  • இந்த சோதனையைப் பயன்பாட்டாளர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை செய்துகொள்ள முடியும். கோவிட்-19 தொற்று ஏற்பட பயன்பாட்டாளருக்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தால், அவரை உடனடியாக மருத்துவ சேவையை நாட ‘ஆரோக்கிய சேது’ செயலி அறிவுறுத்தும்.
  • இதைப் பயன்படுத்த செல்பேசியில் பதிவிறக்கம் செய்துகொண்ட பின், உங்கள் செல்பேசி எண்ணை இதில் பதிவு செய்யவேண்டும்.