TNPSC Current Affairs : June-16-2021
இன்றைய நடப்பு நிகழ்வுகள்(16-June-2021)
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

ஜல்காவோன் வாழைப்பழம்

புவியியல் குறியீட்டுச் சான்றிதழ் பெற்ற வேளாண் பொருள்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் நார் மற்றும் தாதுச் சத்து நிறைந்த ‘ஜல்காவோன் வாழைப்பழம்’, துபைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

 

கரோனா வைரஸ்

  • ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,617 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • கரோனா தொற்று பரவல் காரணமாக மணிப்பூரில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு புதன்கிழமை அறிவித்தது.

உலக நடப்புகள்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் சந்தித்துக் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்றது.