TNPSC Current Affairs : June-13-2020
பிரதம மந்திரி வய வந்தனா திட்டம்
நலன்புரி சார்ந்த அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு

பிரதம மந்திரி வய வந்தனா திட்டம்

 

பிரதம மந்திரி வய வந்தனா திட்டம் என்பது மூத்த குடிமக்களுக்கு வயது முதிர்வு கால வருமானத்துக்கு உறுதி செய்யும் நலத்திட்டமாகும்.

  • திட்ட காலம் பிரதமர் வய வந்தனா திட்டத்தை (PMVVY) 2020 மார்ச் 31-க்கு பின்னரும் மேலும் மூன்றாண்டு காலத்துக்கு 2023 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • முக்கிய அம்சங்கள் முதலில், 2020-21-இல் ஆண்டுக்கு 7.40 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட வருவாய்க்கு அனுமதி.
  • பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மறுநிர்ணயம். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் மாற்றியமைக்கப்பட்ட விகிதப்படி, நிதியாண்டின் ஏப்ரல் 1 முதல் உறுதியளிக்கப்பட்ட வட்டி விகித ஆண்டு மறு நிர்ணயம், புதிய திட்ட மதிப்பீட்டுக்கிணங்க 7.75 சதவீத உச்சவரம்புக்கு மிகாமல் இருக்கும்.
  • எல்ஐசி-யால் உருவாக்கப்பட்ட சந்தை மதிப்பு (நிகரச்செலவு) வருவாய்க்கும், திட்டத்தின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்ட விகித வருவாய்க்கும் இடையிலான வேறுபாடு காரணமாக எழும் தொகைக்கான அனுமதி.
  • புதிய பாலிசிகளுக்கு, திட்டத்தின் முதலாண்டுக்கான நிதியில் ஆண்டுக்கு 0.5 சதவீதம் மேலாண்மைச் செலவுக்கு வரம்பாக நிர்ணயம். அதன் பின்னர், இரண்டாம் ஆண்டு முதல் அடுத்த 9 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 0.3 சதவீதம் ஆக இருக்கும். ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்தில் ஆண்டு வருவாய் விகிதத்தை மாற்றியமைப்பதை அனுமதிக்க நிதி அமைச்சருக்கு அதிகாரம் வழங்குதல்.
  • திட்டத்தின் மற்ற அனைத்து விதிமுறைகளும் தொடர்ந்து அதேவிதமாக நீடிக்கும். ஆண்டுக்கு ரூ.12,000 ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச முதலீடு ரூ.1,56,658 ஆக நிர்ணயம்.
  • திட்டத்தின் கீழ், மாதம் குறைந்த பட்சம் ரூ.1,000 ஓய்வூதியம் பெறுவதற்கான முதலீடு ரூ.1,62,162 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
வித்யாதான் 2.0
நலன்புரி சார்ந்த அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு

மின்னணு சாதனங்கள் மூலம் - கற்றலுக்கான பங்களிப்புகளைப் பெறுவதற்கு வித்யாதான் 2.0 என்ற தேசிய அளவிலான திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தொடங்கி உள்ளது.

 

  • ஏன் இந்த திட்டம் கோவிட்-19 பாதிப்பின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள சூழ்நிலையில் மாணவர்களுக்கு (பள்ளி மற்றும் உயர்கல்வி பயில்வோர்) மின்னணு சாதனங்கள் வழியாகக் கற்பதற்கான பாடங்களுக்கு அதிக தேவை ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில் இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
  • கற்றலை மேம்படுத்துவதற்கு பள்ளிகளில் கற்றலுடன், டிஜிட்டல் கல்வியை ஒருங்கிணைக்க வேண்டிய அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டும் இத்திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது.

 

முக்கிய அம்சங்கள்

 

  1. நாடு முழுக்க தனிப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பள்ளி மற்றும் உயர் கல்விக்கான மின்னணு சாதனங்கள் வழியாகக் கற்பதற்கான பாடத் திட்டங்களை அன்பளிப்பாக அளிக்க / பங்களிப்பு செய்ய உதவும் வகையில் வித்யாதான் திட்டம் உருவாக்கப்பட்டது.
  2. நாடு முழுவதும் உள்ள பிள்ளைகள் எந்த இடத்தில் இருந்தும், எந்த நேரத்திலும் தங்கள் கற்றலைத் தொடர்வதற்கு உதவும் வகையில், இந்தப் பாடத் திட்டங்கள் திக்சா ஆப்-ல் பயன்படுத்தப்படும்.
  3. இதில் பங்களிப்பு செய்ய முன்வருபவர்கள் பதிவு செய்து கொண்டு, பல்வேறு வகையான பாடங்களை (வீடியோக்கள் மூலமாக விளக்குவது, பயிலரங்கு போல நடத்துதல், திறனறி அடிப்படையிலான நடைமுறைகள், கேள்வி கேட்கும் நடைமுறைகள் போன்றவை) அளிக்கலாம். மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் பயன்படுத்தும் எந்த பாடத்திலும், எந்த வகுப்புக்கானதாகவும் (1 முதல் 12 ஆம் வகுப்பு வரையில்) அவை இருக்கலாம். கல்வியாளர்கள், குறிப்பிட்ட பாடத்தில் நிபுணர்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், தனிநபர்கள் போன்றவர்கள் இதில் பங்களிப்பு செய்யலாம்.
  4. திக்சா மின்னணு சாதனங்கள் வழி கற்றலுக்கான பாடத் திட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்டு, அதில் சேர்க்கப்படுவது, பங்களிப்பு செய்பவர்களுக்கு பெருமைக்குரிய விஷயமாகவும், அங்கீகாரம் தருவதாகவும் இருக்கும். பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் நடைமுறையில் இருக்கும் பாடங்களின் வகைப்பாட்டில் தேர்வு செய்து, பதிவேற்றம் செய்வதற்கு அனுமதி பெறுவதற்கு அவகாசம் இருக்கும். ஆசிரியர் பயிற்சிக்கான பாடத் திட்டங்களுக்கும் பங்களிப்புகளை அளிக்கலாம்.