TNPSC Current Affairs : June-12-2020
ஷேரன் வர்கீஸ்
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்
 1. கேரளாவின், கோட்டயம் மாவட்டம் கருப்பந்துரா பகுதியைச் சேர்ந்த தம்பதி லல்லிசென் மல்லிசேரி-ஆன்சி பிலிப்.
 2. இவர்களுக்கு ஷேரன் வர்கீஸ் என்ற மகள் உள்ளார்.
 3. கடந்த 2016-ஆம் ஆண்டு ஷேரன் வர்கீஸ் ஆஸ்திரேலியாவிற்கு படிக்க சென்றார்.
 4. அங்கிருக்கும்வொல்லன்காங்க் பல்கலைக்கழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நர்ஸிங் படிப்பை முடித்த, இவர் அதன் பின் அங்கு அவருக்கு செவிலியராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
 5. ஆனால், ஷேரன் வர்கீஸ் முதியோர் இல்லத்தில் சேர்ந்து பணியாற்றினார். இவருடன் பல நாடுகளைச் சேர்ந்த செவிலியர் மாணவர்களும் பணியாற்றிவந்தார்கள்படிக்கும்போதே ஷேரனுக்கு சேவை, இசை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபாடு இருந்திருக்கிறது.
 6. இதன் காரணமாக, நண்பர்களின் துணையுடன் வி பிலாங் காங் என்ற வீடியோவை 2016-ஆம் ஆண்டு எடுத்தார்.
 7. அது, அவரது கல்லூரியில் பரவலாகப் பேசப்பட்டது. அத்துடன் பல்கலைக்கழகத்தில் உள்ள வானொலியில், பாட்டுப் பெட்டி என்ற மலையாள நிகழ்ச்சியின் ரேடியோ ஜாக்கியாகவும் பணியாற்றினார்.
 8. முதியோர் இல்லத்தில் பணியாற்றியபோது கொரோனா தாக்குதல் தொடங்கியது. இதனால் ஆஸ்திரேலிய அரசு, முதியோர் வசிக்கும் இடங்களில் கூடுதல் அக்கறை எடுத்து கொரோனா நோய்த்தொற்று பரவாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தது.
 9. ஷேரன், தான் பணியாற்றிய முதியோர் இல்லத்தில் மிகுந்த கவனமுடன் செயல்பட்டார்.
 10. வெளியில் இருந்து வரக்கூடியவர்கள் அனைவரையும் வராமல் தடுத்ததுடன், உள்ளேயே தங்கியிருந்து ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உதவிகளைச் செய்துவந்தார்.
 11. இதன் மூலம், நோய்த்தொற்று ஏற்படாமல் அனைவரையும் பாதுகாக்கக் காரணமாக இருந்தார்.
 12. கொரோனா தடுப்புப் பணிகளை சர்வதேச சமூகத்தினர் மேற்கொண்ட விதம் குறித்து வீடியோ வெளியிடுமாறு ஆஸ்திரேலியாவின் வர்த்தகம், கல்வி மற்றும் முதலீட்டுக்கான அரசு அமைப்பான ஆஸ்டிரேட் அழைப்பு விடுத்திருந்தது. அதில், ஷேரன் தன் பணிகள் குறித்து பேசுகையில், கிரீன்ஹெல் மேனர் முதியோர் இல்லத்தில் கொரோனா நுழைந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டோம். ஷிப்ட் முறையில் பணிக்கு வருபவர்களின் உடை மூலம் கிருமி வந்துவிடக் கூடாது என்பதற்காக, உள்ளே நுழையும் இடத்திலேயே துணிகளை மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்தோம்.
 13. நீண்ட தூரங்களில் இருந்து வருபவர்களுக்குப் பதிலாக, உள்ளேயே தங்கியிருந்து பணியாற்ற முக்கியத்துவம் கொடுத்தோம்.
 14. முதியோர்களின் உறவினர்கள் வந்து பார்க்க ஆரம்பத்தில் அனுமதித்தாலும், நோய்த் தொற்று பரவத் தொடங்கியதும் உறவினர்களையும் அனுமதிக்கவில்லை. இத்தகைய நடவடிக்கைகளால் முதியோரைப் பாதுகாத்தோம் என்று கூறியிருந்தார்.
 15. இவரின் பணியை, ஆஸ்டிரேட் அமைப்பு வெகுவாகப் பாராட்டியது. அந்த அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் பேசியுள்ளார்.
 16. அதில், உங்களின் தன்னலமற்ற சேவைக்கு வாழ்த்துகள், ஷேரன். இந்தியாவிலிருந்து கல்விக்காக வந்த நீங்கள், வயதான மக்களுக்கு உரிய நேரத்தில் செய்திருக்கும் உதவி மகத்தானது. நீங்கள் செய்திருக்கும் இந்த உதவியால், இந்தியாவுக்கும் உங்கள் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள் என்று கூறினார்.
 17. இதைக் கேட்ட ஷேரன் வர்கீஸ் , என் தந்தை ஒரு கிரிக்கெட் ரசிகர் என்பதால் ஆடம் கில்கிறிஸ்ட் என்னைப் பாராட்டியிருப்பது என் தந்தைக்கு மட்டுமல்லாமல் தாய்க்கும் பெருமையாக இருக்கிறது.
 18. என் சகோதரியும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார். என தம்பியும் அவனது நண்பர்களும் கில்கிறிஸ்ட் ரசிகர்கள்.
 19. அதனால் அவர்கள் எனக்குக் கிடைத்த வாழ்த்தைக் கொண்டாடி மகிழ்ந்தாக குறிப்பிட்டார்.
ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

 

✓ சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்= ஜூன் 12

✓ இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு மாநாடு நடைபெற்ற இடம்= கொல்கத்தா.

✓ இணையதள சேவைக்கான அணுகலை அடிப்படை மனித உரிமையாக மாற்றிய இந்தியாவின் முதல் மாநிலம்= கேரளா

✓ வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு உதவிக்கான திறன் பணியாளர்களுக்காக தொடங்கப்பட்டுள்ள தரவுத்தளம்=ஸ்வதேஷ்

✓ உலக தடுப்பூசி கூடுகை காணொளி மூலமாக நடைபெற்ற நாடு =இங்கிலாந்து

✓ இந்தி உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர்= பி.ஆர். ஜெய்சங்கர்

✓ மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் புனேவில் உள்ள மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பப் பாதுகாப்பு மையமானது கோவிட் – 19 நோய்த் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்காக வேண்டி நானோ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கிருமிநாசினித் தெளிப்பானை உருவாக்கியுள்ளது.இந்தத் தெளிப்பான் “ANANYA” என்று பெயரிடப் பட்டுள்ளது.இது நீரினால் செயல்படும் ஒரு தெளிப்பான் ஆகும்.

✓ கேரளா மாநில வரலாற்றில் முதல் பெண் பழங்குடியின துணை ஆட்சியராக ஸ்ரீதன்யா சுரேஷ் கோழிக்கோடு மாவட்டத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்

✓ திருச்சி ரயில் நிலையம் பசுமை தங்கம் சான்றிதழ் பெற்றது.

✓ இந்திய இசைக் கலைஞரான ஷோபா சேகர் அவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் உயர் விருது வழங்கப்பட்டது.

✓ குஜராத் கிர் காடுகளில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரிப்பு.தற்போது 674 என்று எண்ணிக்கையில் சிங்கங்கள் உள்ளன.

✓ மெர்கர் என்ற நிறுவனம் வெளியிட்ட 26 வது உலக பணக்கார நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது மும்பை நகரம் 60 வது இடத்தில் உள்ளது.

✓ தமிழகத்தின் சமத்துவபுரம் திட்டம் போல் கேரளாவில் தொடங்க பட்டுள்ள திட்டம் =மக்கள் கிராமம்

✓இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மண் வள விஞ்ஞானி ரத்தன் லால் அவர்களுக்கு உலக உணவு பரிசு வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரில் 9, 10ஆம் நூற்றாண்டு சமணர், விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தலையங்கம்

UNIT VIII தமிழ்நாட்டின் வரலாறு மரபு மற்றும் பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள்

*GROUP II UNIT VIII புத்தகம் கிடைக்கும்* *தொடர்புக்கு:* *9788819401*

*NEW UPDATES*

 

 1. தஞ்சாவூரிலிருந்து களிமேடு, கள்ளப்பெரம்பூர் வழியாக பூதலூர் செல்லும் சாலையில் பூதலூர் நான்கு சாலைக்கு ஒரு கி.மீ. முன்னதாக சாலையின் இடதுபுறத்திலுள்ள வயல்வெளிகளுக்கு இடையில் கன்னிமார் தோப்பு என்ற மேடான பகுதி உள்ளது.
 2. இதையொட்டி, விஷ்ணு மற்றும் சமணர், சப்தமாதர் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன.
 3. இதுகுறித்து வரலாற்று ஆய்வாளரும், சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதருமான மணி மாறன் தெரிவித்தது:

 

 • பூதலூரைச் சேர்ந்த புத்தர் என்பவர் அளித்த தகவலின்பேரில் அப்பகுதியில் கள ஆய்வை மேற்கொண்டபோது அப்பகுதி ஆசிரியர்கள் ஜெயபால், இராமமூர்த்தி, நேரு, அரசு உள்ளிட்டோர் உடனிருந்து களப்பணிக்கு உதவி செய்தனர்.
 • அங்கே புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை மாட்டத்தில் காணப்படுவது போன்ற மிகப்பெரிய கிணறு (பட்டறைக் கிணறு) இருந்தது.
 • இதுபோன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் கிணறு அமைப்பு காண முடியாது.
 • இந்த அமைப்பைப் பார்க்கும்போது ஏதோ ஒரு காலகட்டத்தில் புதுக்கோட்டை, சிவகங்கைப் பகுதியிலிருந்து புலம் பெயர்ந்து வந்த மக்களால் இக்கிணறு வெட்டப்பட்டிருக்கலாம்.
 • இக்கிணற்றின் கரையில் சப்தமாதர் புடைப்புச் சிற்பம் மிகச்சிறிய அளவில் ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ளது.
 • இப்புடைப்புச் சிற்பம் பாதி மண்ணில் புதைந்து மறுபாதி மார்பிலிருந்து தலை வரை வெளியே தெரியுமாறு காணப்படுகிறது.
 • இதன் சிற்ப அமைதியைக் காணும்போது கி.பி.10ஆம் நூற்றாண்டு சோழர் காலத்தைச் சார்ந்தவையாக அறிய முடிகிறது.
 • இதிலிருந்து இப்பகுதியில் சிவாலயம் ஒன்று இருந்திருந்து முற்றிலுமாகச் சிதைந்து போயிருக்கலாம் எனக் கருத முடிகிறது.
 • இக்கிணற்றில் இருந்து மேற்கு திசையில் 150 அடி தொலைவில் மிக அழகிய 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்த விஷ்ணு சிற்பம் இடுப்புக்குக் கீழே மண்ணில் புதையுண்ட நிலையில் இடுப்பிலிருந்து மேல்பாகம் வரை காண முடிகிறது.
 • அழகிய புடைப்புச் சிற்பமாக மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி, வலது கரத்தில் அபயம் காட்டி, இடது கரத்தை இடுப்பில் ஊன்றியவாறு காணப்படுகிறது.
 • இவரின் காது, கழுத்து, கை, இடுப்பு என அனைத்திலும் அணிகலன்கள் திகழ காணப்படுகிறார்.
 • இந்த விஷ்ணு சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து வயல்வெளியில் வடமேற்காக 200 அடி தொலைவு சென்றால் ஒரு கால்வாயின் மதகை ஒட்டி சமணத் தீர்த்தங்கரரின் புடைப்புச் சிற்பம் ஒன்று பீடம் வரை புதையுண்ட நிலையில் காண முடிந்தது.
 • முக்குடையின்கீழ் இருபுறமும் சாமரதாரிகள் சாமரம் வீச அமர்ந்த கோல சமண தீர்த்தங்கரரின் புடைப்புச் சிற்பம் இப்பகுதியில் கண்டறியப்பெற்றதன் மூலம் இங்கே சமணம் தழைத்தோங்கியதை அறிய முடிகிறது.
 • இதிலிருந்து இப்பகுதியில் சிவாலயம், விஷ்ணு ஆலயம், சமணர் ஆலயம் போன்றவை இருந்திருக்கிறது எனக் கருதப்படுகிறது.
 • மேலும், இப்பகுதியில் மிகப்பெரும் குடியிருப்பு சோழர் காலத்தில் இருந்ததற்கான சான்றாதாரங்களையும் காண முடிகிறது.
 • உடைந்த ஏராளமான சோழர்கால கருப்பு, சிவப்பு வண்ணப் பானை ஓடுகள் அந்த வயல் வெளிப்பகுதி முழுவதும் நிறைந்து காணப்படுகின்றன.
 • சற்றேறக்குறைய 1,200 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டத்தில் வளவம்பட்டிக்கு அடுத்துள்ள சோத்துப்பாழை என்ற ஊரிலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் இப்பகுதிக்கு வந்து குடியேறியதாகச் செவிவழிச் செய்தி வழங்கப்பட்டு வருகிறது.
 • வளவம்பட்டி அரசுப் பள்ளி வளாகத்தில் சமண தீர்த்தங்கரரின் சிற்பம் இருக்கிறது.
 • சோத்துப்பாழையில் இருந்து வில்வராயன்பட்டி பகுதிக்கு வந்து குடியேறிய இம்மக்கள் பின்னர் ஏழு கிளைகளாகப் பிரிந்து சித்திரக்குடி, ராயந்தூர், கல்விராயன்பேட்டை, சித்தாயல், குணமங்கலம், வைரபெருமாள்பட்டி, கோவில்பத்து போன்ற பகுதிகளில் குடியேறி இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
 • பல்வேறு சமூகங்களைச் சார்ந்த இம்மக்களுக்கான குலதெய்வம் சந்திவீர ஐயன் மற்றும் பிள்ளைத்தாய்ச்சி அம்மன் எனப்படுகிறது. இந்த பிள்ளைத்தாய்ச்சி அம்மன் கோயில் சோத்துப்பாழை கிராமத்தில் இருக்கிறது.
 • இன்றும்கூட பூதலூரை ஒட்டிய பகுதிகளில் வாழும் இம்மக்கள் புதுக்கோட்டை மாவட்டம், சோத்துப்பாழை சென்று தங்கள் குலதெய்வ வழிபாடு செய்து வருவது மட்டுமன்றி அனைவரும் ஒன்றுசேர்ந்து ஆடி மாதத்தில் ஆண்டுதோறும் திருவிழா எடுத்து நடத்துகின்றனர்.
 • தமிழர் மரபில் தாங்கள் எப்பகுதியிலிருந்து இன்றுள்ள பகுதிக்கு குடியேறினரோ அங்கிருந்து தங்களுடைய பூர்வீக பிறப்பிடத்தில் அமைந்த குலதெய்வத்தை வழிபட்டு வருவது மரபாகும் என்றார் மணி மாறன்.