TNPSC Current Affairs : June-10-2021
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள் (10-June-2021)
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்
  • ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை டிஐஜியாக லட்சுமியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
  • இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய ஏழு நாடுகள் அடங்கிய, ஜி - 7 அமைப்பின் மாநாடு, ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் உள்ள கார்ன்வால் என்ற இடத்தில் வரும் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இன்றைய நடப்பு நிகழ்வுகள்(10-June-2021)
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

உலகம்

  • ரஷியாவின் முக்கிய எதிா்க்கட்சி தலைவா் அலெக்ஸி நவால்னியின் அமைப்புகளுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
  • கரோனா வைரஸின் உருமாறிய அதிதீவிர தன்மை கொண்ட ஆல்ஃபா, டெல்டா வகை கரோனா வைரஸ்கள் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ​
  • 50 கோடி பைசர் தடுப்பூசிகளை வாங்கி 92 நாடுகளுக்கு வழங்குவது குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிடவுள்ளார்.
  • மெய்நிகா் நாணயமான பிட்காயினை பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சட்டப்பூா்வ நாணயமாக மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாா் அங்கீகரித்துள்ளது.
  • சுட்டுரை (ட்விட்டா்) வலைதளத்துக்கு தடை விதித்துள்ள நைஜீரியாவுக்கு அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
  • டிக் டாக், வீ சாட் போன்ற சீன செயலிகளுக்கு தடை விதிக்க டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்த காலத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை வெள்ளை மாளிகை கைவிட்டுள்ளது.
  • ஐ.நா. பொதுச் செயலா் பதவிக்காக அன்டோனியோ குட்டெரெஸ் பெயரை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பரிந்துரைத்தது.
  • ஐ.நா. சமூக-பொருளாதார கவுன்சிலின் உறுப்பினராக 3 ஆண்டுகளுக்கு இந்தியா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு 

  • மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவா்களது உதவியாளா்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலா் ஆா்.லால்வேனா பிறப்பித்துள்ளாா்.
  • தமிழகத்தில் கள்ளச்சாராயம் தயாரிக்கப்படுவதை தடுக்கும் வகையில் "ஆபரேஷன் விண்ட்' (Operation Wind) என்ற பெயரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்தியா 

  • அலகாபாத் உயர் நீதிமன்ற நிதிபதியாக சஞ்சய் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.