TNPSC Current Affairs : June-08-2020
ஜம்முவில் மத்திய நிர்வாக தீர்ப்பாய அமர்வு தொடக்கம்
மாநிலங்களின் சுயவிவரம்

ஜம்முவில் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் 

ஜம்முவில் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அமர்வை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.

ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கான, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் பதினெட்டாவது அமர்வை, மத்திய வடகிழக்கு மண்டல மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் காணொலி மாநாட்டின் மூலமாக இன்று தொடங்கி வைத்தார்.

மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் ஜம்மு அமர்வு, அரசு ஊழியர்களின் பணி விவரங்கள் தொடர்பான வழக்குகளை மட்டுமே விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய இடங்களில் உள்ள மக்களின் நன்மைக்காக, அரசியல் சட்டம் 370 மற்றும் 35A ஆகியவை, 5 ஆகஸ்ட் 2019 அன்று ரத்து செய்யப்பட்ட பிறகு, 800க்கும் அதிகமான மத்திய சட்டங்கள் தற்போது ஜம்மு காஷ்மீருக்கும் பொருந்துவதாக உள்ளன. 

DoPT யின் மூன்று முக்கிய முகமைகளான CAT, CIC, CVC ஆகியவை தற்போது ஜம்மு, காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களிலும் இயங்கிவருகின்றன என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

முன்னதாக 28.5.2020 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி நிர்வாகத் தீர்ப்பாய சட்டம்

1985 (13 of 1985) பிரிவு 5, உட்பிரிவு 7இன் படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டு ஜம்மு, காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் சாதாரணமாக ஜம்முவிலும், ஸ்ரீநகரிலும் இயங்கும் என்று மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது.

இதேபோல மத்திய தகவல் ஆணையம், ஜம்மு, காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களின் விண்ணப்பதாரர்களிடமிருந்து வரும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழான விண்ணப்பங்களை 15.5.2020 முதல் விசாரிக்கத் துவங்கியுள்ளது.

பாரரிசன்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
 • சாமோலி மாவட்டத்தில் உள்ள பாரரிசன் (கரிசைன்) உத்தரகண்டின் புதிய கோடை தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ளது.
 • ஜம்மு-காஷ்மீருக்குப் பிறகு இரண்டு தலைநகரங்களைக் கொண்ட இந்தியாவின் இரண்டாவது மாநிலமாக உத்தரகண்ட் உள்ளது.

 

இந்தியாவின் உணவு பாதுகாப்பு குறியீடு
மாநிலங்களின் சுயவிவரம்
 • ஜூன் 7, 2020 அன்று எஃப்எஸ்எஸ்ஏஐ பகிர்ந்த தகவல்களின்படி,பெரிய மாநிலங்களில் இந்தியாவின் உணவு பாதுகாப்பு குறியீட்டில் குஜராத் முதலிடத்திலும், சிறிய மாநிலங்களிடையே கோவா முதலிடத்திலும் உள்ளது.
 • குஜராத்தை தமிழகம் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை பெரிய மாநிலங்களில் உள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் சிறிய மாநிலங்களில் கோவாவைத் தொடர்ந்து மணிப்பூர் மற்றும் மேகாலயா உள்ளது.
ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

 

 1. தனியார் மருத்துவமனைகளில் படுக்கை விவரங்களை அறிய தமிழக அரசால் உருவாக்கப்பட்ட புதிய இணையதளம் =ஸ்டாப் கரோனா
 2. இந்திய சீன எல்லைப் பகுதியில் கட்டுமானப் பணிகளுக்கான இந்திய அரசின் திட்டங்கள்:
  • லடாக்- ஆப்பரேஷன் விஜயக் மற்றும் ஹிமங்க்
  • உத்தரகாண்ட்= சிவாலிக் திட்டம்
  • ஹிமாச்சல பிரதேசம்= தீபக் திட்டம்
  • ஜம்மு காஷ்மீர் =பீகன் திட்டம் 
  • உத்தரகாண்ட் மாநில கோடைகால தலைநகரம் =கெயிர்சான்
  • -அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை தாக்கிய புயல் =கிரிஸ்டோபல் 
  • பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக சென்னை காவல் துறையால் உருவாக்கப்பட்ட திட்டம் =தோழி
 3. சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டு 2020 இல் இந்தியா 168 வது இடத்தில் உள்ளது. டென்மார்க் முதலிடம்.
 4. கவிஞரும் எழுத்தாளருமான ஜாவேத் அக்தர் 2020 ரிச்சர்ட் டாக்கின்ஸ் விருதைப் பெற்ற முதல் இந்தியர் ஆவார்.
 5. உலக மூளை கட்டி நாள் - ஜூன் 8
 6. இந்தியாவின் முதல் ஆன்லைன் கழிவு மாற்று திட்டம் ஆந்திர மாநில அரசினால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
 7. விஷத்தன்மை உடைய மற்றும் மட்கா கழிவுகளை பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்வது அல்லது அழிப்பதற்கான இந்தத் திட்டத்தை ஆந்திர பிரதேச சுற்றுச்சூழல் மேலாண்மை நிறுவனம் (APEMC) செயல்படுத்துகிறது.
 8.  "நன்றி அம்மா" என்ற பெயரில் மரம் நடும் இயக்கத்தை தொடங்கியுள்ள மாநிலம்= மத்திய பிரதேசம்.
 9. SUMERU-PACS (Personal Protective Equipment (PPE)) சுமேரு பாக்ஸ் என்ற பெயரில் தனிநபர் பாதுகாப்பு உபகரண உடை அணிவோர் வியர்வை பிரச்சனை இன்றி இலகுவாக உணர்வதற்கான கருவியை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (DRDO) கண்டுபிடித்துள்ளது.
 10. அரசு ஊழியர்கள் தங்களது சம்பளம் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக MeraVetan என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது ஜம்மு காஷ்மீர் மாநில அரசு.
 11. திரைப்பட கல்லூரிகள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களின் செயல்பாடுகளை மறு ஆய்வு செய்வதற்காக பிமல் ஜீல்கா தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை சமீபத்தில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.
 12. உத்தர்காண்ட் மாநிலத்தின் கோடைகால தலைநகராக காயிர்செயின் (Gairsain) நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகரத்திற்கு ’ஃபராரிசென்’ (Bhararisen) என்ற பெயரும் உண்டு.ஏற்கனவே அம்மாநிலத்திற்கு தலைநகராயிருந்த டேராடூன் (Dehradun) அம்மாநிலத்தின் குளிர்கால தலைநகராக தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 13. பொதுவெளியில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக சோடார்( ‘Sodar’) என்ற மொபைல் செயலியை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
 14. 20வது ஆசிய பெண்கள் கால்பந்து கோப்பை போட்டி வரும் 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது.