TNPSC Current Affairs : June-07-2021
இன்றைய நடப்பு நிகழ்வுகள்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

நைஜீரியாவில் சுட்டுரை (ட்விட்டா்) வலைதளம் மீது அந்த நாட்டு அரசு விதித்திருந்த தடை அமலுக்கு வந்தது.

கரோனா ஆபாயப் பகுதிகளுக்கான பட்டியலில் இருந்து இத்தாலி, செக் குடியரசு ஆகிய நாடுகளை ஜொ்மனி நீக்கியுள்ளது. மேலும், ஆஸ்திரியாவின் பெரும்பாலான பகுதிகளும் அந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

வரி ஏய்ப்பு செய்வதைத் தடுக்கும் சா்வதேச வரி சீா்திருத்தங்களை மேற்கொள்வதற்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தில் உலகின் மிகப் பெரிய 7 பணக்கார நாடுகள் கையெழுத்திட்டன.

சட்ட விரோதமாக போதைப் பொருள் கடத்தப்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் இந்தியா - அமெரிக்கா கூட்டு சோ்ந்து ஈடுபட முடிவு செய்துள்ளன.

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ராணுவம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதையடுத்து, அந்த நாட்டு ராணுவத்துடனான கூட்டு நடவடிக்கையை பிரான்ஸ் நிறுத்திவைத்துள்ளது.

இந்தியாவில் முதல்முதலில் கண்டறியப்பட்ட டெல்ட்டா வகை கரோனாக்கள்தான் பிரிட்டனில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளனா்.