TNPSC Current Affairs : June-07-2020
ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
  1. 2022-23க்குள் ஜல் ஜீவன் மிஷனின் கீழ் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் இணைப்புகளை வழங்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது.
  2. ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் பழமை வாய்ந்த இரண்டு முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு.
  3. 2022-ல் ஆசிய கால்பந்து போட்டி நடைபெற உள்ள நாடு =இந்தியா
  4. 2020 ஆம் ஆண்டில் உலக தொழில்முனைவோர் பட்டம் பெற்றுள்ள இந்தியர்
  5. கிரண் மஜூம் தார் ஷா - "சிறந்த மீளமைத்தல்" என்ற கருப்பொருளில் 2021 ஆம் ஆண்டிற்கான உலக பொருளாதார அமைப்பின் இரட்டை மாநாடு நடைபெற உள்ள இடம்=டாவோஸ்
  6. சென்னையில் உள்ள கிழக்கு பிராந்திய இந்திய கடலோர காவல்படையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ரோந்து கப்பல்= கஜாய்
  7. குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் பயணத்துக்காக பி777 போயிங் ரக அதிநவீன விமானத்தை இந்தியா எந்த நாட்டில் இருந்து வாங்க உள்ளது= அமெரிக்கா
  8. தமிழக அரசின் தேவையில்லாத பணியிடங்களை குறைத்து, குறிப்பிட்ட பணிகளை அவுட்சோர்சிங் முறையில் அளிப்பது தொடர்பாக பரிந்துரைகளை வழங்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர்= ஆதிசேஷய்யா
  9. தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக பரிந்துரைகளை வழங்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் = பொன்.கலையரசன்
  10. ஸ்விட்சர்லாந்து நாட்டின் இந்திய தூதராக மோனிகா கபில் மோஹ்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
  11. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் -ராமேஸ்வரம் தீவு பகுதியை இணைக்கும் ரயில் காலம் கடந்த 1914ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
  12. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தின் பொது உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக ஜாவேத் இக்பால் வாணி நியமிக்கப்பட்டுள்ளார்.
  13. ஆசியாவின் நோபல் பரிசு என்றழைக்கப்படும் ராமன் மகசேசே விருது கரோனா நோய்த்தொற்று பிரச்சினை காரணமாக இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. 
  14. ஐ.நாவின் 75 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக உலகத்தலைவர்கள் நேரில் பங்கேற்காத பொதுச்சபைக் கூட்டம் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.
  15. வேடந்தாங்கல் ஏரியில் மொத்த பரப்பு 73.06ஏக்கர் ஆகும் .கடந்த 1988 ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி இந்த ஏரி வன உயிரின சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.