TNPSC Current Affairs : June-05-2021
இன்றைய நடப்பு நிகழ்வுகள்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை காலத்தில் சமைத்த உணவுக்கு பதிலாக உலர் பொருட்கள் மற்றும் 10 முட்டைகளை வழங்க உத்தரவிட்டுள்ளது.

இன்றைய நடப்பு நிகழ்வுகள்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

‘பி-75 இந்தியா

  • மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் கடற்படைக்கு புதிதாக 43 ஆயிரம் கோடியில் 6 நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்கும் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
  • இந்த திட்டத்திற்கு ‘பி-75 இந்தியா’ என பெயரிடப்பட்டுள்ளது.
இன்றைய நடப்பு நிகழ்வுகள்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.

இன்றைய நடப்பு நிகழ்வுகள்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

ரூ.86 ஆயிரம் கோடி செலவில் – நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு தேசிய நதிநீர் மேம்பாட்டு அமைப்பு (என்டபுள்யூடிஏ) ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, இதற்கான திட்ட அறிக்கையை (டிபிஆர்) சம்பந்தப்பட்ட மாநிலங் களுக்கு அனுப்பியுள்ளது.

இன்றைய நடப்பு நிகழ்வுகள்
விருதுகள்

2021ம் ஆண்டுக்கான சிறந்த புகைப்படக் கலைஞருக்கான விருது-தாமஸ் விஜயன்.

  • அந்தப் புகைப்படத்தில் ஓராங்குட்டான் மரத்தை அணைத்தப்படி தலைகீழாக தொங்கிக் கொண்டு இருக்கிறது.
  • அதற்கு மேலே, மரத்தின் இலைகள், வானம் தெரிகின்றன.
  • ‘உலகம் தலைகீழாகப் போகிறது’ என்று பெயரிடப்பட்டது..
இன்றைய நடப்பு நிகழ்வுகள்
நலன்புரி சார்ந்த அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு

‘புராஜக்ட் 75 இந்தியா’

  • மத்திய அரசு தற்போது  ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை ஊக்குவித்து வருகிறது.
  • அதன்படி, ‘புராஜக்ட் 75 இந்தியா’ என்ற பெயரில் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்கும் திட்டம் அறிமுகம் செய்ய உள்ளது.
  • ரூ.50 ஆயிரம் கோடி மதிப்புள்ள இத்திட்டத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற, ராணுவ தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
  • மும்பையில் அரசுக்கு சொந்தமான மஸாகான் கப்பல் கட்டும் தளம் மற்றும் தனியார் நிறுவனமான எல் அண்ட் டி-க்கு விரைவில் ஒப்பந்தம் அளிக்கப்பட உள்ளது.
  • இந்த இரண்டு  நிறுவனங்களும் வெளி நாடுகளின் தொழில்நுட்பத்துடன் இந்தியாவிலேயே 6 அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக் கும். மஸாகான் – எல் அண்ட்டி இணைந்து.