TNPSC Current Affairs : June-05-2020
இந்தியா ஆஸ்திரேலியா
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
 • இந்திய- ஆஸ்திரேலிய உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்த மாநாடு டில்லியில் நடத்த திட்டமிட்டப்பட்டிருந்தது.
 • இதில் கலந்து கொள்ள ஸ்காட் மோரிசன் இந்தியா வர விருந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது.
 • இரு நாட்டு பிரதமர்களும் வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று ஆலோசனை நடத்தினர்.
 • இதில் இரு தரப்பு பரஸ்பரம் நட்புறவு , பாதுகாப்பு, வர்த்தகம், கடல்சார் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும், உலகில் பரவியுள்ள கொடிய வைரசான கொரேனா தொற்று குறித்தும், இரு நாடுகளுக்கிடையே உறவு மேலும் செழிப்பாக வளர மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.பிரதமர் மோடி பேசியதாவது:
 • ஆஸி.,யில் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு, இந்திய மக்கள் சார்பில் வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன்.
 • இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான உறவை வலுப்படுத்த இதுவே சரியான நேரம். நமதுநட்பை பலப்படுத்த ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
 • மேலும், தற்போது ஏற்பட்டுள்ள சவால்களை, வாய்ப்பாக மாற்ற ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
 • நமது உறவை பொறுத்து தான், இந்த பிராந்தியத்தில் நிலைத்தன்மை நிலவும்.
 • கொரோனா பிரச்னையை ஒரு வாய்ப்பாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து துறைகளிலும் சீர்திருத்தங்களை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளோம்.
 • இதன் பலன்கள் விரைவில் தெரிய வரும்.
 • கொரோனாவால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளில் இருந்து விடுபட ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஆஸி.,யுடன் உறவை வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது.
 • இதனால், இரு நாடுகளுக்கு மட்டும் அல்லாமல், இந்தோ - பசுபிக் - பிராந்தியத்திற்கும், உலகத்திற்கும் இதனால், பலன் கிடைக்கும்.
கீழடி அகழாய்வில் நத்தை ஓடுகள்
மாநிலங்களின் சுயவிவரம்
 • திருப்புவனம்; கீழடி, ஆறாம் கட்ட அகழாய்வில், அகரம் கிராமத்தில், அதிகளவு நத்தை ஓடுகள் கண்டெடுக்கப்படுகின்றன.
 • இதனால், பண்டைய தமிழர்களுக்கு, நத்தைகள் மருந்தாக பயன்பட்டதா என, ஆய்வு செய்யப்படுகிறது.
 • கீழடி, ஆறாம் கட்ட அகழாய்வு, அகரத்தில் நடக்கிறது. அகழாய்வில் நன்னீர் நத்தை ஓடுகள் அதிகமாக கிடைக்கின்றன.
 • பண்டைய தமிழர்கள் இயற்கை முறையில் உடல் உபாதைகளுக்கு தீர்வு கண்டனர்.
 • இதனால், நத்தைகளை மருந்தாகவோ, உணவுக்காகவோ முன்னோர்கள் பயன்படுத்தி இருக்கலாம் என, கருதப்படுகிறது.
 • கீழடியில் வேளாண்மை, பாசனம், கால்நடை வளர்ப்பிற்கான ஆதாரங்களும், கொந்தகையை இடுகாடாக பயன்படுத்தியதற்கான ஆதாரங்களும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
நேத்ரா
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்
 1. பிரதமரால் பாராட்டப்பட்ட மதுரை மோகன் மகள் நேத்ரா ஐ.நா. நல்லெண்ண தூதராக தேர்வாகியுள்ளார்.
  மதுரையில் மேலமடையைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன் (47) ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரிசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை நிவாரணமக வழங்கினார்.
 2. இதற்காக தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்த ரூ.5 லட்சத்தை செலவிட்டுள்ளார்.
 3. இக்கட்டான நிலையில் மோகன் உதவிய சம்பவம் அறிந்த பிரதமர் மோடி, மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார்.
 4. இந்நிலையில் மகள் படிப்புக்காக சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஏழைகளுக்காக வழங்கியதை பாராட்டி, ஐ.நா-வின் வளர்ச்சி மற்றும் அமைதி சார்பாக ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராக நேத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
 5. மேலும் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மாநாட்டில் வறுமை ஒழிப்பு தொடர்பாக இவர் பேசவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
உலக சுற்றுச்சூழல் தினம் 2020 ஜூன் 5
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

உலக சுற்றுச்சூழல் தினம் 2020 ஜூன் 5

 • உலக சுற்றுச்சூழல் தினம் 2020 ஜூன் 5, 2020 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
 • இயற்கையையும் மனித நேயத்தையும் கவனிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.
 • சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுகிறது.
 • 1974ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது.
 • 2020ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்துக்கான கருப்பொருளாக 'பல்லுயிர்ப் பெருக்கத்தை' ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
கீழடி அகழாய்வு
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

கீழடி அகழாய்வு: கொந்தகையில் கிடைத்த மண்டை ஓடு, எலும்புகள், நத்தை ஓடுகள், முதுமக்கள் தாழிகள்

சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் மண்டை ஒடுடன் எலும்புகள், நத்தை ஓடுகள் மற்றும் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கபட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிவடைந்து ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி தொடங்கியது. ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்து வந்தன. கொரானோ வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி அகழாய்வு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

மே 20ல் அகரம், கீழடியில் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டது. மணலூரில் மே 22ம் தேதி, கொந்தகையில் 27ம் தேதி முதல் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறுது.

கொந்தகையில் நடந்த அகழாய்வில் நான்கு முதுமக்கள் தாழிகளும், ஆறு சிறிய மண்பானைகளும் கண்டறியப்பட்டதால், கொந்தகை பண்டைய காலத்தில் இடுகாடாக இருந்திருக்க கூடும், என மதுரை காமராசர் பல்கலை கழகம் மற்றும் உயிரியல் துறை இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்தது.

கொந்தகையில் குறைந்த பட்சம் 15 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் அலுவலர்கள் முடிவு செய்து அந்த பகுதியில் அகழாய்வு நடத்தி வரும் நிலையில்  (05.06.2020) அந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள கதிரேசன் என்பவரின் தோட்டத்தில் தென்னை கன்றுகள் நடுவதற்காக இயந்திரம் மூலம் குழிகள் தோண்டும் போது முதுமக்கள் தாழி முழு அளவில் கண்டறியப்பட்டது.

தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் மற்றும் தொல்லியல் குழுவினர் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று முதுமக்கள் தாழியை ஆய்வு செய்து தாழியினுள் இருந்த மண்டை ஓடு, எலும்புகள் உள்ளிட்டவைகளை பாதுகாப்பாக வெளியில் எடுத்தனர்.

 

பண்டைய காலத்தில் முதியோர்களை பராமரிக்க முடியாவிட்டால் பெரிய அளவிலான பானையினுள் அவர்களை வைத்து உணவு, தண்ணீருடன் மண்ணிற்குள் புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது. தற்து உணவு குவளை, தண்ணீர் பாத்திரம் உள்ளிட்டவற்றுடன் மண்டை ஓடு, எலும்புகள் கண்டறியப்பட்டது இதற்கு ஆதாரமாக கருதப்படுகிறது.

முதுமக்கள் தாழியில் இருந்து எடுக்கப்பட்ட எலும்புகள், மண்டை ஓடுகளை ஆய்வு செய்த பின்தான் இவற்றின் காலம் பற்றி அறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை சிவகங்கை மாவட்டம் அகரம் அகழாய்வில் அதிகமாக நத்தை கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "நத்தைகளில் இருவகை உண்டு, நன்னீரில் வளரும் நத்தைகளை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்துவார்கள். கடல் நீர் நத்தைகளை அழகு பொருளாக மட்டுமே பயன்படுத்துவார்கள்.

அகரத்தில் கிடைத்த நத்தை கூடுகள் அனைத்துமே நன்னீர் நத்தை கூடுகள். பண்டைய தமிழர்கள் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி உடல் உபாதைகளுக்கு தீர்வு கண்டறிந்த நிலையில், நத்தைகளை மருத்துவ ரீதியாக பயன்படுத்தினார்களா அல்லது உணவு பொருளாக பயன்படுத்தினார்களா என்பது ஆய்வின் முடிவில்தான் தெரிய வரும்" என்று கூறப்பட்டுள்ளது.

"நத்தைகளை சமைத்து சாப்பிட்டால் சளி, இருமல் சிறு குழந்தைகளுக்கு உமிழ் நீர் வடிதல் உள்ளிட்ட பிரச்சனைகள் தீரும், ரத்தகட்டுக்கு நத்தையை அரைத்து ரத்தக்கட்டு உள்ள இடத்தில் வைத்து கட்டுப்போட்டால் விரைவில் குணமடையும். நத்தை ஓடுகள், மூலம் நோய்க்கு சிறந்த மருந்து. நத்தையின் சதை, விந்து எண்ணிக்கையை உயர்வடைய செய்யும் என்பதால், அகரத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் தொடர்ச்சியாக நத்தை கூடுகள் கிடைத்திருப்பதால் அங்கு சமையல் கூடமாக இருக்க வாய்ப்புண்டு. தொடர்ச்சியான அகழாய்வு மூலம் இதன் பயன்பாடு தெரிய வரும்" என சித்த மருத்துவர் வெங்கட்ராமன் தெரிவிக்கிறார்.