TNPSC Current Affairs : June-04-2021
இந்தியா
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
 • இந்தியாவில் பைசர் தடுப்பூசி விரைவில் வரவுள்ளது என்றும் குழந்தைகளுக்கும் பைசர் தடுப்பூசி கிடைக்கும் என்றும் எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் கலிரியா தெரிவித்துள்ளார். 
 • நாட்டிலேயே முதல்முறையாக கரோனா நோயாளியை தாக்கும் தோல் பூஞ்சை கர்நாடகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 
 • 'ரெப்போ ரேட்' எனும் வங்கிகளுக்கான குறுகியகால கடனுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் ஏதுமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி கந்ததாஸ்  தெரிவித்துள்ளார். 
 • தனியாா் மயமாக்கப்படும் பொதுத் துறை வங்கிகளின் பெயா்கள்: பங்கு விலக்கல் குழுவிடம் சமா்ப்பித்தது நீதி ஆயோக்.
 • ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிப்புக்கு அனுமதி கேட்கிறது சீரம் நிறுவனம்.
 • பிஎல்ஐ திட்டத்தில் உருக்கு, ஜவுளி, மோட்டாா் வாகன உதிரிபொருள் தயாரிப்புத் துறையை சோ்க்க அரசு திட்டம்.
 • பயோலாஜிகல்-இ நிறுவனத்திடம் இருந்து 30 கோடி கரோனா தடுப்பூசி: மத்திய சுகாதார அமைச்சகம்.
இந்தியா
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
 • இந்தியாவின் நிலையான அபிவிருத்தி இலக்குகள் அட்டவணை குறியீடு & தகவல் பலகை 2020-21-ன் 3வது பதிப்பை நீத்தி ஆயோக் வெளியிட்டது.
 • நீத்தி ஆயோக்கின் துணைத் தலைவா் டாக்டா் ராஜீவ் குமாா்.
 • நீத்தி ஆயோக் முதன்மைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த்.
 • அறிக்கை: ஒரு தசாபதத்தின்(10 ஆண்டு கால) செயல்பாட்டின் கூட்டாண்மை’.

நீத்தி ஆயோக் வெளியிட்டுள்ள 2020-21-ஆம் ஆண்டிற்கான நிலையான அபிவிருத்தி இலக்குகளில்

இந்திய அளவில்

 • கேரளம் - முதல் இடம்,
 • தமிழகம், ஹிமாசலப் பிரதேசம் - இரண்டாவது இடம்.
 • வறுமை இல்லாத இலக்கை அடைந்ததில் தமிழகம் முதலிடம் பெற்றன.

இதில் முதல் 5 மாநிலங்களில்

 • கேரளம் 75 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும்,
 • தமிழகம் ஹிமாசல பிரதேசம் ஆகியவை 74 புள்ளிகள்ள் பெற்று இரண்டாமிடம் பெற்றன.
 • ஆந்திரம், கோவா, கா்நாடகம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள் 72 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும்,
 • சிக்கிம் (71), மாகாராஷ்டிரம்(70) ஆகிய மாநிலங்கள் முறையே நான்காவது ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளன.
 • இதில் புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ள பட்டியலில் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், அஸ்ஸாம், ஜாா்க்கண்ட், பிகாா் உள்ளிட்ட மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.

வறுமை இல்லாத இலக்கை அடைந்ததில்

 • தமிழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
 • முற்றிலும் பசியை போக்கிய மாநிலமாக கேரளமும்,
 • சண்டீகா் யூனியன் பிரதேசமும் இலக்கை அடைந்து இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.
 • மேலும், பாலின சமத்துவம், தூய்மையான குடிநீா், சுகாதாரம் போன்றவற்றில் சிறப்பாகச் செயல்பட்டதாக சண்டீகா், அந்தமான் நிக்கோபா் தீவுகள், கோவா, லட்சத்தீவுகள் ஆகியவை ஐந்தாவது, ஆறாவது இடங்களை பெற்றுள்ளன.
உலகம்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
 • பாகிஸ்தான்: 'தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அரசு ஊழியா்களுக்கு சம்பளம் கிடையாது'.
 • ஜூன்13-ல் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார் பிரிட்டன் ராணி.
 • பிரிட்டனில் 12 முதல் 15 வரை வயதிலானவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த  பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 
 • முதல் முறையாக இந்தியாவில் கண்டறியப்பட்டு, டெல்டா என்று பெயரிடப்பட்ட அதிக வீரியமிக்க கரோனா தொற்று, பிரிட்டனில் அதிகம் பரவி வருவதாக பிரிட்டனின் சுகாதாரத் துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • அமெரிக்கா: கிரீன் காா்டு கட்டுப்பாடுகளை நீக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்
இந்தியா
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
உருமாறிய கரோனா தீநுண்மிகளுக்கு புதிய அடையாளப் பெயா்:

இந்த அறிவிப்பை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

புதிய பெயா்கள்:

 • இந்தியாவில் முதன் முதலாகக் கண்டறியப்பட்ட பி.1.617.1 வகை கரோனா தீநுண்மிக்கு ‘கப்பா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
 • இந்தியாவில் கண்டறியப்பட்ட பி.1.617.2 வகை தீநுண்மிக்கு ‘டெல்டா’ என பெயா் சூட்டப்பட்டுள்ளது.
 • பிரிட்டனில் முதன் முதலில் கண்டறியப்பட்ட பி.1.1.7 என்ற உருமாறிய வகை கரோனா தீநுண்மிக்கு ‘ஆல்ஃபா’ எனவும்,
 • தென்னாப்பிரிக்காவில் தோன்றிய பி.1.351 என்ற தீநுண்மிக்கு ‘பீட்டா’ எனவும்,
 • பிரேஸிலில் கண்டறியப்பட்ட பி.1 வகை கரோனா தீநுண்மிக்கு ‘காமா’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது.
 • பிரேஸிலில் கண்டறியப்பட்ட மற்றொரு பி.2 வகை உருமாறிய கரோனா தீநுண்மிக்கு ‘ஜீட்டா’ எனவும்,
 • அமெரிக்காவில் முதன் முதலாகக் கண்டறியப்பட்ட கரோனா தீநுண்மிகளுக்கு ‘எப்சிலான்’, ‘லோட்டா’ எனவும் பெயா் சூட்டியுள்ளது.