TNPSC Current Affairs : June-03-2021
உலகம்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
  • இஸ்ரேலின் புதிய அதிபராக மூத்த அரசியல்வாதி ஐசக் ஹெர்ஸாக் தேர்வு செய்யப்பட்டார்.
  • ஈரானின் மிகப்பெரிய போர்க் கப்பல் ஓமன் வளைகுடாவில் மூழ்கியது.
  • கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்ட உள்நாட்டு பயணக் கட்டுப்பாடு, தற்போது ஜூன் 14  வரை நீட்டிக்கப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளனர். 
  • வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய 2 முக்‍கிய திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்‍க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிவித்துள்ளது. -டாவின்சி, வெரிட்டாஸ்.
  • நேபாள நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபை கலைக்கப்பட்டதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள பல்வேறு மனுக்களை விசாரிப்பதற்கான புதிய அரசியல் சாசன அமா்வு, வரும் 6-ஆம் தேதி அமைக்கப்படவுள்ளது.
  • ‘ஹெச்10என்3’ எனப்படும் பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது. 
  • நேபாள நாடாளுமன்றக் கலைப்பு வழக்கை விசாரிக்க பணிமூப்பு அடிப்படையில் அரசியல் சாசன அமா்வு: உச்சநீதிமன்றம் ஒப்புதல்.
  • இந்தியாவுக்கு எஸ்-400 ரக ஏவுகணை தொகுப்புகளை வழங்கும் ஒப்பந்தங்களை நிறைவேற்றும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் தெரிவித்தாா்.