TNPSC Current Affairs : June-02-2021
உலக சுகாதார அமைப்பு விருது
விருதுகள்

ஹர்ஷ் வர்தனுக்கு உலக சுகாதார அமைப்பு விருது:

  • உலக அளவில் 6 பிராந்தியங்களில் உள்ள கிளைகள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒருவருக்குப் புகையிலை கட்டுப்பாடு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பாராட்டி உலக சுகாதார அமைப்பு விருது வழங்கி கவுரவிக்கிறது.
  • உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி, உலக சுகாதார அமைப்பு இயக்குநரின் சிறப்பு அங்கீகார விருது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு வழங்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கேப்ரியாசிஸ் அறிவித்துள்ளார். 
  • 2019-ம் ஆண்டு இந்தியாவில் இ-சிகரெட்டை ஒழிக்கவும்சூடுபடுத்தப்பட்ட புகையிலைப் பொருட்களை ஒழிக்கவும் சட்டம் இயற்றியதை பாராட்டும் வகையில் ஹர்ஷ் வர்தனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • புகையிலை கட்டுப்பாடு தொடர்பாக தனி நபர் அல்லது அமைப்புகள் செய்த பணிகளை பாராட்டி உலக சுகாதார அமைப்பு ஆண்டுதோறும் சிறப்பு விருது வழங்கி வருகிறது.
காவிரி - கோதாவரி இணைப்பு திட்டம்
புவியியல் அடையாளங்கள்

காவிரி - கோதாவரி இணைப்பு திட்டம்

  • 4 தென் மாநிலங்களின் நீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • அதை விவசாயம், குடிநீர் தேவைக்கு பயன்படுத்த கோதா வரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டம், 60,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது.
  • மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் அருகே பிரம்மகிரி மலையில் திரிம்பர்க் பகுதியில் உருவாகும் கோதாவரி ஆறு ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் நரசபுரா என்னும் இடத்தில் கடலில் கலக்கிறது.
  • ஆந்திர மாநிலத்தில் கோதாவரி ஆற்றின் குறுக்கே, போலாவரம் அணை கட்டப்பட்ட நிலையில், ஆண்டுக்கு, 1,100 டி.எம்.சி., நீர், கோதாவரி ஆற்றிலிருந்து வீணாக கடலில் கலக்கிறது.
  • நாகார்ஜூன சாகர் அணையில் இருந்து 300 டிஎம்சி தண்ணீர் கிருஷ்ணா நதியில் உள்ள போலாவரம் அணைக்கட்டிற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து கர்நாடகாவில் பெண்ணாற்றில் உள்ள சோமசீலா அணை மூலம் காவிரியில் உள்ள பெரிய அணைக்கட்டிற்கு கோதாவரி தண்ணீர் கொண்டுவரப்படும்.


ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகம் பயன்பெறும் மாநிலங்கள்:

  • இதன்மூலம் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் பயன்பெறும்.
  • கால்வாய்கள் வெட்டி தண்ணீர் கொண்டு வந்தால் தண்ணீர் வீணாவதோடு, திட்ட நிதியும் அதிகரிக்கும் என்பதால், ஸ்டீல் குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

திட்ட நிதி:

  • ரூ.60,000 கோடி திட்ட நிதியில் 90% மத்திய அரசும், 10% நிதி  மாநிலங்களும் செலவிடும்.
  • அறுபதாயிரம் கோடி திட்ட நிதியில் 90 விழுக்காடு மத்திய அரசும், பத்து விழுக்காடு நிதி இந்த திட்டத்தால் பயன்பெறும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள் செலவிடும்.

நிதி உதவி:

  • மேலும் இந்த திட்டத்திற்கான நிதியை உலக வங்கியிடமோ அல்லது ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்தோ, பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பயன் பெறும் ஆறுகள்:

  • பாலாறு, தென்பெண்ணை, வெள்ளாறு, காவிரி .

பயன்பெறும் தமிழக மாவட்டங்கள்:

  • திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி.
மராத்தா சமூகத்தினருக்கு பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு: மகாராஷ்டிர அரசு அறிவிப்பு
தற்போதைய சமூக பொருளாதார சிக்கல்கள்

மராத்தா சமூகத்தினருக்கு தனி இடஒதுக்கீடு:

  • பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு:

  • மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி 2018-ம்ஆண்டு மகாராஷ்டிர அரசு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு:

  • இந்தச் சட்டத்துக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
  • இதை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு செல்லும் என்றும் அதே நேரத்தில் இடஒதுக்கீடு அளவைக் குறைத்து கல்வியில் 13 சதவிகிதம் என்றும் வேலைவாய்ப்பில் 12 சதவிகிதம் இருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
  • இந்தத் தீர்ப்பை எதிர்த்துஉச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அரசியல் சாசன அமர்வு:

  • இந்த வழக்கை நீதிபதிகள் அசோக் பூஷண், எல்.என்.ராவ், ஹேமந்த் குப்தா, அப்துல் நசீர், ரவீந்திர பட் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து மாதம் தீர்ப்பு வழங்கியது.

இட ஒதுக்கீடு ரத்து:

  • மராத்தா சமூகத்துக்கான இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

  • அந்த இட ஒதுக்கீடு ரத்து  செய்து தீர்ப்பளித்து.

கெய்க்வாட் ஆணையத்தின் பரிந்துரை ரத்து:

  • மராத்தா சமூகத்திற்கு அதிக இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை, அதுபோன்ற காரணத்தையும் இடஒதுக்கீட்டை பரிந்துரைத்த கெய்க்வாட் ஆணையம் கூறவில்லை என்றும் கெய்க்வாட் ஆணையத்தின் பரிந்துரை ரத்து செய்யப்படுகிறது என்றும் தீர்ப்பளித்தது.

வஜ்ரா இயந்திரம்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சமீபத்திய கண்டுபிடிப்புகள்

வஜ்ரா இயந்திரம்:

  • கரோனா முன்களப் பணியாளர்கள் பயன்படுத்தும் உபகரணங்களில் இருக்கும் தொற்றுக்களை நீக்குவதற்காக வஜ்ரா கவசம் என்ற இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

தயாரிக்கும் நிறுவனம்:

  • மும்பையின் பிவண்டியில் உள்ள இந்திரா வாட்டர் நிறுவனம்

இந்த கிருமி நாசினி இயந்திரம் பின்வரும் தொற்றின் தடயங்கள் முழுவதையும் நீக்குகிறது:

    • முழு உடல் கவசம்,
    • என் 95 முகக் கவசங்கள்,
    • உடைகள், கையுறைகள்.

இதன் பயன்பாடு:

    • மருத்துவ பணியாளர்கள்,
    • உடல் கவச ஆடைகள், 
    • இதரப் பொருட்களை கிருமியை நீக்கி, சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்த முடியும்.

இந்த இயந்திரம் பயன்கள்:

    • பாதுகாப்பு அளிப்பதுடன்,
    • ஒருமுறை பயன்படுத்துவதால் உயிரி மருத்துவ கழிவுகள் பெருகுவதையும் தடுக்கிறது.

இயந்திரத்தின் சிறப்பம்சம்:

  • முழு உடல் கவசங்கள் அதிக எண்ணிக்கையிலும், குறைந்த செலவிலும், எளிதாகவும் கிடைக்கும்.
  • சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்துவதன் காரணமாக அதிகமாக உற்பத்தியும் செய்ய வேண்டிய தேவையும் குறையும்.
  • ஒரு சில நொடிகளிலேயே பொருட்களை முழுவதும் கிருமிநாசினியால் சுத்தப்படுத்துவது இந்த இயந்திரத்தின் சிறப்பம்சமாகும்.