TNPSC Current Affairs : June-01-2020
இன்றைய ஒருவரி செய்திகள் (June 1-2, 2020)
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

ஜூன் 1 தினசரி நடப்பு நிகழ்வுகள் 2020

 

மத்திய அரசின் கொரோனா ஊரடங்கு உத்தரவுகள் 

 • இந்தியாவில் ஊரடங்கு முதலில் மார்ச் மாதம் 25-ந் தேதி அமலானது. இது 21 நாட்களுக்கானது.
 • இரண்டாவது ஊரடங்கு ஏப்ரல் 15-ந் தேதி தொடங்கியது. அது மே மாதம் 3-ந் தேதி வரை நீடித்தது.
 • 3-வது ஊரடங்கு மே 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 4-வது ஊரடங்கு மே 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
 • கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இது உருவான நாடு - சீனா.
 • இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மராட்டியம் உள்ளது.
 • கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முறையே அமெரிக்கா, பிரேசில், ரஷியா உள்ளன. அடுத்தடுத்த இடங்களில் இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு பிறகு 7-வது இடத்தில் இந்தியா உள்ளது.
 • குறு, சிறு, நடுத்தர தொழில்துறைக்கு உதவ புதிய இணையதளத்தை புதிய தொழில் வாய்ப்புகளை கண்டறிய champions.gov.in இணைதள பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
 • மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் - பிரகாஷ் ஜவடேகர்.

 

வாழ்க்கை வரலாற்று நூல்

 • பிரதமர் மோடி பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிடப்பட்டது.
 • ‘நரேந்திர மோடி-வளமையின் முன்னோடி மற்றும் உலக அமைதியின் தூதர்’ என்ற பெயரிலான அந்த புத்தகத்தை சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் வெளியிட்டார். நிகழ்ச்சி, காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.
 • இந்தியாவிலும், அமெரிக்காவிலும் பிரமுகர்கள் பங்கேற்றனர். இந்த புத்தகத்தை அகில இந்திய பார் அசோசியேசன் தலைவர் ஆதிஷ் சி.அகர்வாலா, அமெரிக்க எழுத்தாளர் எலிசபெத் ஹோரன் ஆகியோர் இணைந்து எழுதி உள்ளனர்.

பிற செய்திகள்

 1. விவசாயிகளிடம் விற்பனைக் கட்டணம் வசூலிக்கப்படாது: அவசரச் சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு. தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை (ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 1987ல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக, தமிழ்நாடு அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.
 2. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்காக அமித் பங்கால், விகாஸ் கிருஷ்ணன் ஆகிய இருவரின் பெயரையும் இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் பரிந்துரைத்துள்ளது.
 3. கேரள ரஞ்சி அணிக்கு இந்திய முன்னாள் வீரர் டினு யோஹன்னன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 4. சென்னை தரமணியில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராக பேராசிரியர் இரா.சந்திரசேகரன் (47) நியமிக்கப்பட்டுள்ளார்.
 5. ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை’ திட்டத்தை 2021 மாா்ச் மாதத்தில் நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய உணவுத் துறை அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.
 6. பிரதமா் மோடி, ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிசன் ஆகியோா் காணொலி வாயிலாக வியாழக்கிழமை (ஜூன் 4-ஆம் தேதி) பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளனா். அப்போது கரோனா தொற்று, பாதுகாப்பு, வா்த்தகம், கடல்சாா் பாதுகாப்பு குறித்து இருவரும் விவாதிக்கவுள்ளனா்.
 7. கரோனா நோய்த்தொற்றால் தென் அமெரிக்க கண்டத்தில் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ள பிரேஸிலுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அமெரிக்கா அனுப்பிவைத்தது.
 8. கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 18 மாநிலங்களவை உறுப்பினா் இடங்களுக்கான தோ்தல் ஜூன் 19-ம் தேதி நடத்தப்படும் என்று இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 9. கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அருகே சுவாமி விவேகானந்தருக்கு 120 அடி உயர சிலையொன்றை நிறுவ மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக, மாநில வீட்டு வசதித் துறை அமைச்சர் சோமண்ணா தெரவித்துள்ளார்.
 10. தமிழக அளவில் 5வது சிறந்த பல்கலைக்கழகமாக சிதம்பரம் அண்ணமலைப் பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக (ஈ.டபிள்யு) நிறுவனம் வெளியிட்டுள்ளது.
 11. விளாத்திகுளத்தில் இசைமேதை நல்லப்பசாமிக்கு தமிழக அரசின் சார்பில் கட்டப்பட்ட நினைவுத்தூண் திறப்பு விழா நடைபெற்றது.
 12. தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் மூலமாக செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில், திரைப்படத் தொழிலாளர்களுக்கு சொந்த வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 1000 குடியிருப்புகள் கட்டும் பணிகளுக்கு, இன்று காணொலிக் காட்சி மூலம் முதல்வா் கே. பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
 13. தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், பட்டாபிராமில் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
 14. வங்கக் கடலில் உருவான உம்பன் புயல் மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே கரையைக் கடந்தது. அப்போது 190 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதுடன், பலத்த மழையும் பெய்தது. கன மழையால் மேற்கு வங்கத்தில் நூற்றுக்கணக்கான குடிசை வீடுகளும், பயிர்களும் சேதமடைந்தன. புயல் பாதிப்புக்கு அந்த மாநிலத்தில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
 15. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சோ்ந்த இரு வீரா்களை அந்த நாட்டின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் தனது ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது. தனியாா் நிறுவனத்தின் ராக்கெட்டில் விண்வெளி வீரா்கள் விண்வெளிக்குச் செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
உலக பால் தினம் 2020
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

உலக பால் தினம் 2020

உலகளவில் ஒவ்வொரு ஜூன் 1, 2020 அன்று அனுசரிக்கப்பட்டது.

 

குறிப்பு:

 • பால் மற்றும் உலக உணவாக அதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஜூன் 1 உலக பால் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
 • உலகளாவிய உணவாக பாலின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்க ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) நிறுவிய உலக பால் தினம் 2001 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 அன்று அனுசரிக்கப்படுகிறது.
உலகளாவிய பெற்றோர் தினம்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 ஆம் தேதி கொண்டாடப்படும் உலகளாவிய பெற்றோர் தினத்தின்

கருப்பொருள் 2020 -

உலகம் முழுவதும் உள்ள அனைத்து பெற்றோர்களையும் பாராட்டுங்கள்.

குறிப்பு:

 • உலகெங்கிலும் உள்ள அனைத்து பெற்றோர்களையும் கெளவுரவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 ஆம் தேதி உலகளாவிய பெற்றோர் தினத்தை கொண்டாடுகிறது.
 • பெற்றோர் மட்டுமல்ல, தாத்தா, பாட்டி, பெரிய தாத்தா பாட்டி ஆகியோரும் இந்த நாளின் ஒரு பகுதியாகும்.
 • ஆகவே, வயதானவர்களுக்கு நன்றி மற்றும் உரிய மரியாதை காட்ட பெற்றோரின் உலகளாவிய தினம் வலியுறுத்துகிறது.