TNPSC Current Affairs : July-07-2021
டெஸ்ட் போட்டிகளில் 600-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் எனும் பெருமையை ஆன்டர்ஸ்ன் பெற்றுள்ளார்.
விளையாட்டு
  1. இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்ஸன், தனது முதல்தரக் கிரிக்கெட்டில் ஆயிரமாவது விக்கெட்டை வீழ்த்தினார்.
  2. இதுவரை 162 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆன்டர்ஸன் 617 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
  3. அதில் 27 முறை 4 விக்கெட்டுகளுக்கு அதிகமாக வீழ்த்தியுள்ளார்.
  4. 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஆன்டர்ஸன் 269 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
  5. இதில் 11 முறை 4 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளார்.
  6. இங்கிலாந்து அணியில் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பெருமையை அலிஸ்டார் குக் பெற்றிருந்தார்.