TNPSC Current Affairs : July-05-2021
இந்தியா
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
  1. உத்தரகண்ட் மாநிலத்தின் 11-ஆவது முதல்வராக புஷ்கா் சிங் தாமி பதவியேற்றாா்.
  2. அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவா் அசாதுதீன் ஒவைசியின் சவாலை ஏற்க பாஜக தொண்டா்கள் தயாராக இருக்கிறாா்கள் என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளாா்.
  3. மத்திய  வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஜூலை 8ஆம் தேதி ரஷியா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  4. கரோனா தடுப்பூசி திட்டத்தை முறையாக செயல்படுத்தும் வகையில் ‘கோ-வின்’ என்ற மத்திய தகவல் தொழில்நுட்ப வலைதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.
  5. ராணுவ தலைமைத் தளபதி எம்.எம். நரவணே, பிரிட்டன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு 4 நாள் பயணம் மேற்கொண்டுள்ளாா்.
  6. இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட வெப்ப அலை தாக்குதல் சம்பவங்களில் 17,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாக, ஓா் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  7. கின்னஸ் உலக சாதனைகளில் இடம் பெறும் முயற்சியில், 'கிரீன் இந்தியா சேலஞ்ச்' மூலம் பத்து லட்சம் மரக்கன்றுகளை ஒரு மணி நேரத்தில் நடவு செய்து ஒரு மகத்தான சாதனை புரிந்துள்ளது கிரீன் இந்தியா சேலஞ்ச்.
  8. அமெரிக்காவின் 245-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிபர் ஜோ பைடன் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  9. முதல்தர கிரிக்கெட்டில் 1,000 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை படைத்துள்ளார்.
  10. சர்வதேச ​மகளிர் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகள் வரிசையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் சார்லட் எட்வர்ட்ஸை முந்தி இந்திய கேப்டன் மிதாலி ராஜ் சாதனை படைத்துள்ளார்.