TNPSC Current Affairs : July-03-2021
இந்தியா
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
  • இரு தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டால் கரோனா உயிரிழப்பில் இருந்து 98% பாதுகாப்பு.
  • சர் லுட்விக் குட்மன் பிறந்தநாள்: கூகுள் வெளியிட்ட சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம்.
  • இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி 77.8 சதவீதம் செயல்திறன் கொண்டது என்று தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனையின் முடிவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 
  • கிழக்கு லடாக் எல்லையில் மோதல்போக்குக்கு முந்தைய நிலையை இந்தியாவும், சீனாவும் படிப்படியாக எட்ட வேண்டும் -  முப்படைத் தளபதி விபின் ராவத்
  • பாதுகாப்புப் படைகள் ஈடுபடும் ஒருங்கிணைந்த போா்களில் விமானப் படைக்குப் பெரும் பங்கு உள்ளது -  இந்திய விமானப் படையின் தலைமை தளபதி ஆா்.கே.எஸ்.பதௌரியா.
  • எல்ஐசி தலைவரின் ஓய்வு பெறும் வயதை 62-ஆக நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
  • நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் அடுத்த மாதம் 19-ஆம் தேதி தொடங்குகிறது. இதுதொடா்பான அதிகாரபூா்வ அறிவிப்பை மக்களவைச் செயலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
  • கோவின் வலைதளத்தில் பதிவு செய்து அல்லது நேரடியாக சென்று கா்ப்பிணிகள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அதிகாரபூா்வமாகத் தெரிவித்துள்ளது.
  • பேரிடா் சமயத்தில் சிறப்பாக செயல்பட்டவா்களுக்கு ‘சுபாஷ் சந்திரபோஸ் ஆப்த பிரபந்தன்-2022’ விருது வழங்கி கௌரவிப்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சகம் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
  • வங்கிகளின் மொத்த வாராக்கடன் அடுத்த ஆண்டு மாா்ச்சில் 9.8 சதவீதமாக அதிகரிக்கும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தெரிவித்துள்ளது.
  • உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி நாளை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஜியோ, தனது வாடிக்கையாளர்களுக்கு அவசரகால டேட்டா கடன் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
தமிழகத்திலேயே முதன்முறை
பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்

தமிழகத்திலேயே முதல்முறையாக பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியைச் சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.