TNPSC Current Affairs : July-02-2021
உலகம்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

அண்டார்டிக்கிற்கு 18.3 டிகிரி செல்சியஸ் (64.9 டிகிரி பாரன்ஹீட்) புதிய அதிகபட்ச வெப்பநிலை சாதனையை ஐ.நா உலக வானிலை அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியா
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

இந்தியாவில் ‘ஸ்பூட்னிக் லைட்’ மூன்றாம் கட்ட சோதனைகளை மேற்கொள்ள டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களுக்கு ஜூலை 1, 2021 அன்று மத்திய அரசின் பொருள் நிபுணர் குழு (எஸ்.இ.சி) அனுமதி மறுத்தது.

ஸ்பூட்னிக் லைட் என்பது ரஷ்ய COVID-19 தடுப்பூசியின் புதிய பதிப்பு - ஸ்பூட்னிக் வி.

இந்தியா
விளையாட்டு
 1. யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் உலகின் முதல்நிலை அணியான பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது இத்தாலி.
 2. விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இங்கிலாந்து வீரா் ஆன்டி முா்ரே 3-ஆவது சுற்றில் தோற்று வெளியேற்றம் .
TNPSC GROUP I & II & IIA 2021 (GROUP I MAINS)
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்
 • புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டாரத்திலுள்ள மலையடிப்பட்டி, மேலப்பனையூர், தேவர்மலை போன்ற இடங்களில் பாதுகாப்பு பணி ஒப்பந்தத்தை வெளிப்படுத்தும் ஆசிரியம் கல்வெட்டுகளை கண்டுப்பிடித்துள்ளனர்.
 •  புதுக்கோட்டை மாவட்டத்தில் 13-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலையான ஒருங்கிணைந்த ஆட்சி முறை மறையத் தொடங்கிய சூழலில் அதிக நிலம் படைத்தவர்கள் குறுநில மன்னர்களாக செயல்பட்டு வந்துள்ளனர்.
 • இவர்கள், தமது நிர்வாகத்துக்குட்பட்ட மக்களுக்கும், அவர்களின் உடைமைகளுக்கும், வெளியூரிலிருந்து வணிகம் செய்யும் வணிகர் மற்றும் வணிகப் பொருட்களுக்கும் உரிய பாதுகாப்பாளர்களை நியமித்தனர்.
 • இதுவரை தமிழகத் தில் கண்டுபிடிக்கப்பட்ட 67 கல் வெட்டுகளை ஆய்வில் பட்டியலிட்டதில் 53-ல் ஆசிரியம், 8-ல் ஆசரியம், 3-ல் ஆசுரியம், 3-ல் ஆஸ்ரயம் மற்றும் ஆச்ரயம் ஆகிய சொல்லாடல்கள் கையாளப்பட்டுள்ளன.
 • ஆசிரியம் என்ற தமிழ்ச்சொல் சங்கப்பாடல்களிலும் காணப்படுவதால், இதை சம்ஸ்கிருத சொல்லாடலாக மட்டுமே கருதுவது அனைத்து கல்வெட்டுகளுக்கும் பொருந்தாது என்றார்.
சிவகங்கை அருகே ஆசிரியம் பற்றிய 13-ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
தேசிய சின்னங்கள்
 • புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் காணப்படுகின்றன.
 • ஆசிரியம் என்றால் அடைக்கலம் தருதல், பாதுகாப்பு தருதல் என்று பொருள்.
 • ஆசிரியம் சொல்லுடன் காணப்படும் கல்வெட்டுகள் இதுவரை தமிழகத்தில் 70-க்கும் குறைவாகவே கண்டெடுக்கப்பட்டுள்ளன.
 • ஆசிரியம் கல்வெட்டுகள் தனி கற்களில் பொறிக்கப்பட்டு நடப்பட்டவையாக உள்ளன.
 • சோழர், பாண்டியர்கள் ஆட்சிக்காலத்தில் ஊரவர், நாட்டவர், சிற்றரசர், படைப்பிரிவைச் சார்ந்தோர் தலைமையில் அந்தந்த பகுதிகளில் படைகளை உருவாக்கி ஊர்களை பாதுகாத்து வந்துள்ளனர்.
 • சோழர், பாண்டியர்களுக்கு பிறகு மதுரை சுல்தான்கள் ஆட்சி காலத்திலும் படைகள் இருந்தன.
 • வணிகர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவரவர் தங்களது உயிர், உடமைகளை பாதுகாக்க படைகளை வைத்து கொண்டனர்.
 • தற்போது கோமாளிப்பட்டியில் கிடைத்திருக்கும் இரண்டு கல்வெட்டுகளில் ஒன்று பதிமூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியையும், மற்றொன்று பதிமூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியையும் சேர்ந்தது.
 • முற்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டில் வில், அம்பு சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
 • இக்கல்வெட்டு மூலம் படைவீரர்கள் கேழாநிலை (தற்போதைய கீழாநிலைக்கோட்டையாக இருக்கலாம்) என்ற ஊரில் தங்கியிருந்து இரட்டகுலகாலபுரம் நகரத்தார்க்கு பாதுகாப்பு தந்துள்ளனர்.
 • பதிமூன்றாம் நூற்றாண்டு பிற்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டில் பூரண கும்ப சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
 • இக்கல்வெட்டு மூலம் குலசேகர பாண்டியன் தனது ஆட்சிக்காலத்தில் படையை உருவாக்கி அப்பகுதிக்கு பாதுகாப்பு தந்துள்ளனர் .