TNPSC Current Affairs : July-01-2021
TNPSC GROUP I & II & IIA 2021 (GROUP I MAINS)
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
 • மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதற்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
 • ஏழு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிலும் சுவிட்சர்லாந்திலும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 
 • பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ)  நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15 கட்டணம் வசூலிக்கும் முறை (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. 
 • மத்திய அரசின் அட்டா்னி ஜெனரலாக கே.கே.வேணுகோபால் மேலும் ஓராண்டுக்கு நியமிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு வயது 90.
 • கரோனா சூழலில் பாதிக்கப்பட்டுள்ள முறைசாராத் தொழிலாளா்களுக்கு ரூ.3,717.28 கோடி (500 மில்லியன் அமெரிக்க டாலா்) கடனுதவி அளிப்பதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
 • கரோனா பெருந்தொற்றால் உயிரிழந்த அனைவரின் குடும்பத்துக்கும் நிதியுதவி அளிக்கும் வகையில் புதிய வழிகாட்டுதலை வெளியிடுமாறு தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்துக்கு (என்டிஎம்ஏ) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 • ஜூன் 21 முதல் 27-ஆம் தேதி வரையில் கரோனா பாதிப்பு 10 சதவீதத்துக்கும் அதிகமாக பதிவான மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
 • இந்தியாவில் சா்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 • மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரரை 32.12 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு வழங்கியுள்ளது.
 • கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்க மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்த ரூ.6.29 லட்சம் கோடி நிவாரண தொகுப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
 • 2020-ஆம் ஆண்டுக்கான சா்வதேச இணைய பாதுகாப்புக் குறியீடு (ஜிசிஐ) தரவரிசைப் பட்டியலில் 10-ஆவது இடத்துக்கு முன்னேறி, உலக அளவில் இணைய பாதுகாப்பில் தலைசிறந்த நாடு என்ற நிலையை இந்தியா எட்டியுள்ளது.
 • சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.
 • அமெரிக்க நிதியமைச்சா் ஜேனட் எல்.யெல்லானுடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொலைபேசி வழியாக ஆலோசனை நடத்தினாா்.
 • வெவ்வேறு இந்திய மொழிகளில் எழுதப்பட்ட 10 புகழ்பெற்ற நவீன இலக்கிய நூல்களை மொழிபெயா்த்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு (எஸ்சிஓ) இந்தியா பரிசளித்துள்ளது.
 • கரோனா தொற்று விடுத்திருக்கும் சவாலுக்கு, சா்வதேச நாடுகளின் ஒத்துழைப்பே பதிலாகும் என்று ஜி-20 அமைச்சா்கள் மாநாட்டில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறினாா்.
 • எத்தியோப்பியாவில் பதற்றம் நிறைந்த டிக்ரே மாகாண தலைநகா் மிகேலியை அரசுப் படையினரிடமிருந்து கிளா்ச்சியாளா்கள் மீண்டும் கைப்பற்றினா். அதையடுத்து, எத்தியோப்பிய அரசு போா்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 • அமெரிக்காவில் மட்டுமின்றி சா்வதேச அளவில் புகழ்பெற்ற ஆங்கிலச் சொல் உச்சரிப்பு (ஸ்பெல்லிங் பீ) போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள 11 பேரில் இந்திய அமெரிக்க மாணவ, மாணவியா் 9 போ் இடம் பெற்றுள்ளன
 • சீனாவில் அமைக்கப்பட்டுள்ள உலகின் இரண்டாவது மிகப் பெரிய நீா்மின் உற்பத்தி நிலையத்தின் முதல் இரண்டு அலகுகளில் மின் உற்பத்தி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
 • இத்தாலியில் உள்ள மடேரா நகரில் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆண்டனி பிளிங்கனை சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.
 • சீனாவை அச்சுறுத்தி வந்த மலேரியா முற்றிலும் ஒழிப்பு: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு
 • 12 வயதில் செஸ் கிராண்ட்மாஸ்டர்: உலக சாதனை படைத்த இந்திய வம்சாவளி வீரர் அபிமன்யு மிஸ்ரா
கரூர்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
 • தமிழகத்தில் உள்ள 121 நகராட்சிகளில் நூற்றாண்டு பழமை வாய்ந்த நகராட்சிகளில் கரூர் நகராட்சியும் ஒன்று.
 • கடந்த 1874-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி கரூர் நகராட்சி தோற்றுவிக்கப்பட்டது.
 • கடந்த 2001-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 76,328 பேர் வசித்தனர்.
 • மக்கள்தொகை பெருக்கம், வருமான உயர்வு காரணமாக 1969-ல் முதல் நிலை, 1983-ல் தேர்வுநிலை, 1988-ல் சிறப்புநிலை நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது.
 • 30,000க்கும் அதிக மக்கள்தொகை கொண்ட பேரூராட்சிகள் கடந்த 2004-ம் ஆண்டு நகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்டபோது, கரூர் நகராட்சியை ஒட்டியிருந்த இனாம்கரூர், தாந்தோணி பேரூராட்சிகள் நகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்டன.
 • அப்போதிலிருந்தே கரூர் நகராட்சியுடன் இனாம்கரூர், தாந்தோணி நகராட்சிகளை இணைத்து கரூர் நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
 • அதன்பிறகு கரூர் நகராட்சியுடன் இனாம்கரூர், தாந்தோணி நகராட்சிகள் அருகேயுள்ள ஊராட்சிகளை இணைத்து கரூர் நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தவேண்டும் என இரண்டு, மூன்று முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 • கடந்த 2011-ம் ஆண்டு கரூர் தொகுதியில் போட்டியிட்ட செந்தில்பாலாஜி கரூர் நகராட்சி மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும் என வாக்குறுதி அளித்தார்.
 • ஆனால், 2011-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் இனாம்கரூர், தாந்தோணி நகராட்சிகள், சணப்பிரட்டி ஊராட்சி ஆகியவை கரூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டு பரப்பளவு 6.03 ச.கி.மீட்டரில் இருந்து 53.26 ச.கி.மீட்டராகவும், வார்டுகள் எண்ணிக்கை 48 ஆகவும் அதிகரிக்கப்பட்டது. மக்கள்தொகை 2.14 லட்சமாக உயர்ந்தது.
 • இதையடுத்துக் கடந்த 2013 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் கரூர் நகராட்சி மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
 • அதன்பிறகு கடந்த 2017-ம் ஆண்டு கரூரில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், அப்போதைய முதல்வர் பழனிசாமி பங்கேற்றபோது மாநகராட்சி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.