TNPSC Current Affairs : January-30-2021
இன்றைய நடப்பு நிகழ்வுகள்
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்

முக்கிய நடப்பு நிகழ்வுகள்

ஜனவரி 29, 2021

*காஷ்மீரில்* *பனியால்* கட்டப்பட்டு வீட்டை போல *உணவகம்* திறக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

*ஆஸ்திரேலிய கிரிக்கெட்* அணியில் பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட டாக்சி ஓட்டுநரின் மகன் *தன்வீர் சங்கா* தேர்வு.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அடுத்த நிதியாண்டில் *நாட்டின் வளர்ச்சி 11 சதவீதமாக* இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும், பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று *பஞ்சாப் முதல்-மந்திரி அமரீந்தர் சிங்* தெரிவித்துள்ளார்.

*3 வேளாண் சட்டங்களால்,* 10 கோடி விவசாயிகளுக்கு பலன்; நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பேச்சு. [இது, ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், மரபுப்படி நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றுவதற்காக *ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்* வந்தார். அவரை *மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு,* பிரதமர் *நரேந்திரமோடி,* மக்களவை சபாநாயகர் *ஓம்பிர்லா* ஆகியோர் வரவேற்று அழைத்து வந்தனர்.

பாகிஸ்தானில் 126 ஆண்டுகள் பழமையான *சிவன்* கோவில், புனரமைப்புக்கு பின் பக்தர்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது.

*இங்கிலாந்து-அமீரகம்* இடையே விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாத தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக *இந்தியாவுக்கான .ஐ.நா.சபை தூதர் கே.நாகராஜ் நாயுடு* தெரிவித்துள்ளார்.

*அமெரிக்க - இந்தியா* உறவின் முக்கியத்துவத்தை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தினோம் என்று *அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன்* தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் *ஐநா பொதுச்செயலாளர்* ஆன்டனியோ குட்டரெஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

*அமெரிக்காவில்* இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி.க்களான *பிரமிளா ஜெயபால்* மற்றும் *ராஜா கிருஷ்ணமூர்த்தி* ஆகிய இருவரும் இரு முக்கிய *நாடாளுமன்ற குழுக்களில் உறுப்பினர்களாக* நியமிக்கப்பட்டுள்ளனர்.

*போர்ச்சுகல்* நாட்டின் அதிபராக *மர்செலோ ரெபெலோ டிசோசா* மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

*இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்* எச்சரிக்கையை மீறி *ஸ்காட்லாந்து* செல்லவுள்ளார்.

*இந்தியாவில்* இருந்து *5 லட்சம்* தடுப்பு மருந்துகள் சென்றடைந்ததற்கு *இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே* நன்றி தெரிவித்து உள்ளார். 👇👇👇👇👇👇👇👇 www.rithanyapublications.com