TNPSC Current Affairs : January-29-2021
RRB /TNPSC CURRENT AFFAIRS
நலன்புரி சார்ந்த அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு

தேசிய கடல் ஆமை பாதுகாப்பு செயல்திட்டம் அறிமுகம்

  • கடலில் உள்ள உயிரினங்கள் மற்றும் ஆமைகளை பாதுகாப்பதற்கான அவசியத்தை கருத்தில் கொண்டு, இது தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் தேசிய செயல்திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் புதுடெல்லியில் வெளியிட்டது.
  • காணொலி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கடல்சார் பல்லுயிர்தன்மை இந்தியாவுக்கு அழகு சேர்க்கிறது என்றும், செயல்திறன் மிக்க நடவடிக்கைகளின் மூலம் அதை பாதுகாப்பது அவசியம் என்றும் கூறினார்.
  • அரசு, மக்கள் உட்பட தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களும் இணைந்து செயல்பட்டு எவ்வாறு கடல்சார் உயிரினங்களை பாதுகாப்பது என்பது குறித்து வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் செயல்திட்டம் விளக்குகின்றன.
RRB /TNPSC CURRENT AFFAIRS
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
  • புதிய இரு கட்சி கூட்டணி அரசாங்கம் 2021 ஜனவரி 26 அன்று பதவியேற்றதால் காஜா கல்லாஸ் எஸ்டோனியாவின் முதல் பெண் பிரதமரானார்.
  • ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் 2021 ஜனவரி 28 அன்று உலகளாவிய தடுப்பூசி திட்டத்தில் இந்தியா ஒரு முக்கிய பங்கை வகிக்க அழைப்பு விடுத்தார். 
  • 46 வது அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பிடன் பதவியேற்றார், கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணைத் தலைவராக பதவியேற்றார்.
  • குடியரசு தின அணிவகுப்பு 2021 இல் பங்கேற்ற முதல் பெண் போர் விமானியாக பவானா காந்த் ஆனார்.
  • எலோன் மஸ்க் உலகின் பணக்காரர் ஆவார், ஜெஃப் பெசோஸை முந்தினார்.
  • சத்யா பால் இந்திய சேலைக்கு சமகால மற்றும் நவீன தோற்றத்தை அளிப்பதில் பெயர் பெற்றவர்.
இன்றைய நடப்பு நிகழ்வுகள்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

ஜனவரி 29, 2021 நடப்பு நிகழ்வுகள்

*டெல்லி இஸ்ரேல்* தூதரகம் அருகே குண்டு வெடிப்பு நடந்து உள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விவசாயிகள் போராடி வரும் *டெல்லி -அரியானா* சிங்கு எல்லையில் உள்ளூர்வாசிகளுக்கும் - விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியும் லேசான தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர்.

புதிய வேளாண் சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிக்கும் என *ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்* தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் தூதரகத்திற்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேஸ் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் *மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்* உறுதியளித்தார்.

இந்திய பொருளாதாரம் தொற்றுநோய்க்கு முந்தைய நிலையை அடைய இரண்டு வருடங்கள் ஆகும் என *தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன்* கூறி உள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு 92,300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக *தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா* சாகு தெரிவித்துள்ளார்.

*நாக்பூரில்* பால் தாக்கரே சர்வதேச உயிரியல் பூங்காவை முதல்-மந்திரி *உத்தவ் தாக்கரே* திறந்து வைக்கிறார்.

👇👇👇👇 www.rithanyapublications.com