TNPSC Current Affairs : January-27-2021
RRB /TNPSC CURRENT AFFAIRS
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

குடியரசுத் தலைவரின் வீரதீரப் பதக்கங்கள்:

வீரதீரப் பதக்கங்கள்: 

    1. 946 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
    2. அனைத்து மாநிலங்களின் காவல்துறை,
    3. மத்திய பாதுகாப்பு படைகள்,
    4. மத்திய உளவுத்துறை,
    5. தேசிய பேரிடர் பாதுகாப்பு படை உள்ளிட்டோருக்கும் விருதுகள் அளிக்கப்படுகின்றன.

குடியரசு தலைவர் காவல் பதக்கம் (பிபிஎம்ஜி)

    • ஜார்க்கண்ட் மாநிலக் காவல்துறையின் பனுவா ஓரன்
    • சிஆர்பிஎப் படையின் மோஹன் லால் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளன.

காவல்துறை வீரதீரப் பதக்கங்கள் (பிஎம்ஜி)

  1. 205 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.
  2. மகாராஷ்டிராவில் பிஎம்ஜி பதக்கம் பெற்றவர்களில் ஐபிஎஸ் அதிகாரிகளான இரண்டு தமிழர்களும் இடம் பெற்றுள்ளனர்.
  3. வீரதீரச் செயலின்போது  ஆர்.ராஜா (ஆத்தூரைச் சேர்ந்த) மற்றும்  டாக்டர்.என்.ஹரி பாலாஜி (ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த) ஆகியோர் கட்சிரோலி மாவட்டக் காவல்துறையின் கூடுதல் கண்காணிப்பாளர்களாக இருந்தனர்.
  4. சுமார் நான்கு வருடங்களுக்கு முன் இதே கட்சிரோலியில் நக்ஸலைட்டுகளை என்கவுன்ட்டர் செய்த ராஜ்குமார் ஐபிஎஸ் எனும் தமிழரும் வீரதீரப் பதக்கம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • பணியில் சிறந்த சேவைகளுக்கான தில் குடியரசுத் தலைவர் காவல்துறை பதக்கங்கள் (பிபிஎம்) 89 பேருக்கும்,
  • காவல்துறை பதக்கங்களுக்காக (பிஎம்) 650 பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
RRB /TNPSC CURRENT AFFAIRS
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்

ஜேனட் ஏலன்

  • அமெரிக்க செனட் வரலாற்றில் முதல் முறையாக பெண் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளர் - ஜேனட் ஏலன் (ஃபெடரல் வங்கியின் முன்னாள் தலைவர் ).
  • 1994 - 1997ம் ஆண்டுவரை அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழுவில் ஜேனட் ஏலன் பதவி வகித்துள்ளார்.
  • 2004 - 2010-ம் ஆண்டு வரை சான்பிரான்சிஸ்கோ ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவராக ஜேனட் ஏலன் இருந்தார்.
  • 2014 - 2018-ம் ஆண்டு வரை அமெரிக்க ஃபெடரல் வங்கியின் தலைவராக ஜேனட் ஏலன் இருந்தார்.
  • அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தில் கேபினட் அமைச்சராக ஏலன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • உலகின் சிறந்த பொருளாதார வல்லுநர்களில் ஒருவராகக் கருதப்படும் ஜேனட் ஏலன்.

  •  பிரவுன் மற்றும் யேழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.

  • அமெரிக்க ஃபெடரல் வங்கியின் தலைவராக இருந்தபோது, இவரின் திறமை அறியப்பட்டது.

  • அமெரிக்காவில் வேலையின்மை, பொருளாதாரச் சிக்கல் நிலவியபோது, இவரின் கொள்கைகள், திட்டங்கள் அவற்றிலிருந்து மீண்டுவர உதவின.

  • அமெரிக்க செனட் சபையில் நடந்த வாக்கெடுப்பின்போது, ஜேனட் ஏலன் நிதியமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் முன்மொழிந்ததும் அதைக் குடியரசுக் கட்சியினரும் வரவேற்றனர்.