TNPSC Current Affairs : January-26-2021
RRB /TNPSC CURRENT AFFAIRS
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

72வது குடியரசு தின கொண்டாட்டம்:

 1. ஷனூர் ஷாவன் தலைமையில் 122 பேர் கொண்ட குழுவினர் முதன்முறையாக குடியரசு தின அணிவகுப்பில் வங்கதேச ராணுவத்தினர் பங்கேற்றறனர்.
 2. இந்திய விமானப்படையின் அணிவகுப்பில் அணிவகுத்து சென்றர் - பாவனா காந்த் (இந்திய விமானப்படையில் போர் விமானங்களில் பணியாற்றும் பெண்)
 3. 'ஸ்வர்நீம் விஜய் வர்ஷ்' என்ற தலைப்பில், இந்திய கடற்படை வீரர்கள், அணிவகுப்பில் பங்கேற்றனர்.
 4. எல்லை பாதுகாப்பு படையின் ஒட்டக படைப்பிரிவு அணிவகுப்பில் பங்கேற்றர்  - துணை கமாண்டர் கன்ஷியாம் சிங்.
 5. 1984 ல் உருவாக்கப்பட்ட, தேசிய பாதுகாப்பு படை வீரர்கள், அணிவகுப்பில் பங்கேற்றனர்.
 6. குடியரசு தின அணிவகுப்பில், டிஆர்டிஓவின் பங்கேற்ற குழுக்கள் - இரண்டு குழுக்கள். 
 7. குடியரசு தின அணிவகுப்பில், டிஆர்டிஓவின் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலில் இருந்து கிளம்பும் இலகு ரக விமானம் மற்றும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணை ஆகியவை பங்கேற்றன.
 8. 2021 ஆண்டு குடியரசு தின விழாவில், அணிவகுப்பு கமாண்டராக, லெப்டினன்ட் ஜெனரல் விஜய் குமார் மிஸ்ரா தலைமையேற்று சென்றார்.
 9. இந்தியா - ரஷ்யா கூட்டு தயாரிப்பில், 400 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணை அணிவகுப்பில் இடம்பெற்றது.
 10. கேப்டன் உவாம்ரூல் ஜமன் தலைமையில் இந்த ஏவுகணை இடம்பெற்றது.
 11. உலகின் அதிநவீன ராக்கெட் அமைப்புகளில் ஒன்றான, பினாகா மல்டி லாஞ்சர் ராக்கெட் அணிவகுப்பில் இடம்பெற்றது.
 12. இந்திய கடற்படையின், இசைக்குழுவினர் 'ஜெய் பார்தி' பாடலுக்கு இசையமைத்தபடி, அணிவகுப்பில் அணிவகுத்து சென்றனர்.
 13. நவீன ரேடார் மற்றும் டிஜிட்டல் முறையில் வெடிபொருட்களை கட்டுப்படுத்தும் அமைப்பை கொண்ட ஷில்கா ஆயுத அமைப்பு, கேப்டன் பீரதி சவுத்ரி தலைமையில் அணிவகுத்து சென்றது.
 14. குடியரசு தின அணிவகுப்பில், ராணுவம் சார்பில் பங்கெடுத்த ஒரே பெண் அதிகாரி - கேப்டன் பீரதி சவுத்ரி.
 15. இந்திய ராணுவத்தின் முக்கிய பங்காற்றும் டி-90 பீஷ்மா டாங்க் அணிவகுப்பில் பங்கேற்றது.
 16. கேப்ன் கரன்வீர் சிங் பங்கு, தலைமையில், இந்த டாங்க் அணிவகுத்து சென்றது, மிக்ரகம் மற்றும் சுபோய் போர் விமான அணிவகுப்பும் நடந்தது.
 17. 900 கிலோ மீட்டர் வேகத்தில் அதிநவீன ரபேல் போர் விமானம் விண்ணில் பறந்தது.
TNPSC GROUP II MAINS
விருதுகள்

2021-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் மத்திய அரசு அறிவித்தது.

குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம விபூஷன் விருதுக்கான பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்கள்:

1. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே
2. மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்
3. பெல்லே மொனப்பா ஹெக்டே
4. மறைந்த நரிந்தர் சிங் கபானி
5. மவுலானா வஹிதுதீன் கான்
6. பி.பி. பால்
7. சுதர்ஷன் சாஹூ

பத்ம பூஷன் விருதுக்கான பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்கள்:

1. கிருஷண்ன் நாயர் சாந்த குமாரி சித்ரா
2. மறைந்த அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய்
3. சந்திரசேகர் கம்பரா
4. முன்னாள் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன்
5. நிபேந்த்ரா மிஸ்ரா
6. மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான்
7. மறைந்த குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்
8. மறைந்த கல்பே சாதிக்
9. ரஜ்னிகாந்த் தேவிதாஸ் ஷ்ரோஃப்
10. தர்லோசான் சிங்


பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளவர்கள்:

1. ஸ்ரீதர் வேம்பு

 

2 சாலமன் பாப்பையா
3. மறைந்த திருவேங்கடம் வீரராகவன்
4. மறைந்த பி. சுப்ரமணியன்
5. மறைந்த கே.சி. சிவசங்கர்
6. பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத்
7. பாப்பம்மாள்

இவர்களையும் சேர்த்து மொத்தம் 102 பேர் பத்ம ஸ்ரீ விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

RRB /TNPSC CURRENT AFFAIRS
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
 • அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்றத் தடை நீக்கம்: ட்ரம்ப் உத்தரவை ரத்து செய்தார் அதிபர் ஜோ பைடன்.
 • வரலாற்றில் முதல் முறை: அமெரிக்காவில் முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் ஏலன் நியமனம்.
 • இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.க்கள் பிரமிளா ஜெயபால், ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பட்ஜெட் குழுவிலும், கரோனா வைரஸ் சிக்கல் தீர்வுக் குழுவிலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 • இந்திய ராணுவத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் பல்வேறு ஏவுகணைகளை  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) அமைப்பு தயாரித்து வருகிறது. அந்த வகையில்,  புதிய ரக ஆகாஷ் ஏவுகணை  ஒடிஸாவின் சண்டீபூா் கடற்கரைப் பகுதியில் பரிசோதிக்கப்பட்டது.
 • குடியரசு தினவிழாவையொட்டி போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்பட தமிழக போலீசார் 20 பேருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் வீரதீர செயலுக்கான பதக்கம்:

'அண்ணா பதக்கம்'

 1. தமிழக அரசின் வீரதீர செயலுக்கான 'அண்ணா பதக்கம்' ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஆசிரியை முல்லைக்கு வழங்கப்பட்டது.
 2. தமிழக அரசின் வீரதீர செயலுக்கான 'அண்ணா பதக்கம்' கால்நடை மருத்துவர் பிரகாசுக்கு வழங்கப்பட்டது.
 3. தமிழக அரசின் வீரதீர செயலுக்கான 'அண்ணா பதக்கம்' மதுரையைச் சேர்ந்த ரயில் ஓட்டுநர் சுரேஷுக்கு வழங்கப்பட்டது.
 4. கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம்' கோவையைச் சேர்ந்த அப்துல் ஜப்பாருக்கு வழங்கப்பட்டது.

நாராயணசாமி நாயுடு விருது:

 • நெல் உற்பத்தித் திறனுக்கான நாராயணசாமி நாயுடு விருது அளிக்கப்பட்டது.
 • முதல் முறையாக இந்த விருதானது, நாராயணசாமி நாயுடு பெயரில் வழங்கப்பட்டது.

'காந்தியடிகள் காவலர் பதக்கம்'

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினருக்கான 'காந்தியடிகள் காவலர் பதக்கம்' வழங்கப்பட்டது.

 • பெண் ஆய்வாளர் மகுடீஸ்வரி,
 • உதவி ஆய்வாளர் செல்வராஜ்,
 • தலைமைக் காவலர்கள் சண்முகநாதன், ராஜசேகரன்

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையங்களுக்கான கோப்பை வழங்கப்பட்டது.

 1. முதலிடம் - சேலம் நகர காவல்நிலையம்,
 2. இரண்டாமிடம் - திருவண்ணாமலை நகர காவல்நிலையம்,
 3. மூன்றாமிடம் - கோட்டூர்புரம் காவல்நிலையம்