TNPSC Current Affairs : January-25-2021
TNPSC GROUP II MAINS
விருதுகள்

பிரதமரின் ராஷ்ட்ரிய பால சக்தி புரஸ்கார்

  1. புதுமையான கண்டுபிடிப்புகள்,
  2. கல்வித்திறன்,
  3. விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம்,
  4. பொதுசேவை, மற்றும் வீர தீர மிக்க துறைகளில்
  5. தலை சிறந்த சாதனைகளை படைத்துள்ள, அபரிமிதமான திறமைகள் கொண்ட குழந்தைகளுக்கு பிரதமரின் ராஷ்ட்ரிய பால சக்தி புரஸ்கார் எனப்படும் தேசிய குழந்தைகள் விருதுகளை மத்திய அரசு வழங்குகிறது.
  6. 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் 32 மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகள் இந்த விருதுகளை பெற்றுள்ளனர்.
  7. கலை மற்றும் கலாச்சார துறையில் 7 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
  8. கல்வித் திறன் சாதனையில் 5 குழந்தைகளும்,
  9. விளையாட்டு துறையில் 7 குழந்தைகளும் விருது பெற்றுள்ளன.
  10. 3 குழந்தைகள் வீரதீர செயல்களுக்கான விருதுகளையும்,
  11. தமிழகத்தில் வசிக்கும் பிரசித்தி சிங்குக்கு சமூக சேவைக்கான விருதும் கிடைத்துள்ளது.
  12. இந்தாண்டுக்கான பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருதுகள், 32 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
RRB /TNPSC CURRENT AFFAIRS
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

11-வது தேசிய வாக்காளர் தினம் 

கருப் பொருள்: நமது வாக்காளர்களை அதிகாரமிக்கவர்களாகவும், விழிப்புணர்வு மிக்கவர்களாகவும், பாதுகாப்பு மற்றும் தகவல் அறிந்தவர்களாகவும் ஆக்குவதே இந்தாண்டு தேசிய வாக்காளர் தினத்தின் கருப் பொருள்.

இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 1950ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி ஏற்படுத்தப்பட்டது. 

ஜனவரி 25: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாப்படுகிறது.

முக்கிய நோக்கம்: வாக்காளர்கள் குறிப்பாக புதிய வாக்காளர்களின் பதிவை ஊக்குவிப்பதுதான்.

இணையதள ரேடியோ: ஹலோ வாக்காளர்கள்’ என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதள ரேடியோவையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

 

TNPSC CURRENT AFFAIRS
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

தேசிய வாக்காளர் தினம்

  1. இன்று - ஜனவரி , 25 இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்களர்களை ஊக்கப்படுத்துவதற்காக தேசிய வாக்காளர் நாள் (National Voters' Day) அனுசரிக்கபடுகிறது.
  2. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி ' தேர்தல் ஆணையம்' அமைக்கப்பட்ட நாளே "தேசிய வாக்காளர் நாள்" ஆகும்.
  3. 2011 ஆம் ஆண்டு முதல் இத்தினம் கட்டாயமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
  4. வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந் நாளின் நோக்கமாகும்.
  5. 18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி வாய்ந்தவர்.
  6. தேர்தல் என்பது பொதுவாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது.
  7. சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள்.
  8. வாக்காளர் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை ஒன்று தேர்தல் ஆணையத்தால் வழங்கபடுகின்றது.
TNPSC January current affairs
விருதுகள்

ஜனாதிபதி விருது - மத்திய அரசு அறிவிப்பு:

ஜனாதிபதி விருது குடியரசு மற்றும் சுதந்திரதின விழாவையொட்டி போலீஸ், சிறை மற்றும் தீயணைப்புத்துறைகளில் சிறப்பான  முறையில் பணியாற்றியவர்களுக்கு ஜனாதிபதி விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

இதில் தமிழக போலீஸ் துறையை சேர்ந்த 20 பேர் இடம் பெற்றுள்ளனா்.

இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.

போலீஸ் கமிஷனர்

1. சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால். 

2. டேவிட்சன் தேவாசீர்வாதம் - கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. போலீஸ் அகாடமி. 

3. மணிகண்டகுமார் - தமிழ்நாடு சிறப்பு காவல் படை கோவை புதூர் இன்ஸ்பெக்டர்.

4. டி.எஸ்.அன்பு - சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. 

5. கபில்குமார் சி சரத்கார் - சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு ஐ.ஜி. 

6. சந்தோஷ்குமார் - நிர்வாக பிரிவு போலீஸ் ஐ.ஜி. இன்ஸ்பெக்டர் சுகன்யா

7. ஜான்சன் - ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு, சேலம் மாவட்டம். 

8. ஜீவானந்தம் - பரங்கிமலை உதவி போலீஸ் கமிஷனர், சென்னை. 

9. முரளி - துணை போலீஸ் சூப்பிரண்டு, ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம். 

10. கலைச்செல்வம், காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை சூப்பிரண்டு. 

11. கந்தசாமி - சென்னை பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டர்.

12. சிவசங்கரன் - மணிமுத்தாறு, சிறப்பு காவல்படை இன்ஸ்பெக்டர். 

13. சுகன்யா - சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர். 

14. ஸ்ரீனிவாசன்-மாநில உளவுப்பிரிவு தலைமையக சப்-இன்ஸ்பெக்டர் சென்னை. 

15. சுரேஷ் - சிறப்பு அதிரடிப்படை சப்-இன்ஸ்பெக்டர், ஈரோடு. 

16. சித்தார்த்தன் - மாநில உளவுப்பிரிவு தலைமையக சப்-இன்ஸ்பெக்டர், சென்னை. 

17. ரவிச்சந்திரன் - மாநில குற்ற ஆவணகாப்பக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், சென்னை. 

18. ஸ்டீபன் - கியூ பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், கன்னியாகுமரி. 

19. கருணாகரன் - மாநில உளவுப்பிரிவு, தலைமையக போலீஸ் ஏட்டு, சென்னை. 

20. ரமேஷ்-மாநில உளவுப்பிரிவு, தலைமையக போலீஸ் ஏட்டு, சென்னை.

RRB /TNPSC CURRENT AFFAIRS
விருதுகள்

நாட்டின் மிக உயரிய பத்ம விருதுகள்

நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 7 பேர் கொண்ட பெயர் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.

பத்ம விபூஷண் விருது
  1. பொது விவகார துறைக்காக ஜப்பானின் முன்னாள் பிரதமர் - ஷின்ஜோ அபே,
  2. கலை பிரிவில் தமிழகத்தில் இருந்து பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் (மறைவுக்கு பின்),
  3. மருத்துவ பிரிவில் கர்நாடகாவை சேர்ந்த பெல்லி மொனப்பா ஹெக்டே,
  4. அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் அமெரிக்காவை சேர்ந்த நரீந்தர் சிங் கப்பானி (மறைவுக்கு பின்).
  5. ஆன்மீகத்திற்காக டெல்லியை சேர்ந்த மவுலானா வாஹிதுதீன் கான்,
  6. தொல்லியல் துறைக்காக டெல்லியை சேர்ந்த பி.பி. லால், 
  7. கலை பிரிவில் ஒடிசாவை சேர்ந்த சுதர்சன் சாஹூ
RRB /TNPSC CURRENT AFFAIRS
விருதுகள்
நாட்டின் மிக உயரிய பத்ம பூஷண் விருதுக்கு 10 பேர் தேர்வு:   
  1. கலை துறையில் கேரளாவை சேர்ந்த கிருஷ்ணன் நாயர் சாந்த குமாரி சித்ரா,
  2. பொது விவகார துறையில் அசாம் முன்னாள் முதல் மந்திரி தருண் கோகாய் (மறைவுக்கு பின்),
  3. இலக்கியம் மற்றும் கல்வி பிரிவில் கர்நாடகாவை சேர்ந்த சந்திரசேகர் கம்பாரா,
  4. பொது விவகார துறையில், முன்னாள் மக்களவை சபாநாயகரான மத்திய பிரதேசத்தின் சுமித்ரா மகாஜன்,
  5. குடிமக்கள் சேவையில் பிரதமருக்கான முன்னாள் முதன்மை செயலாளரான உத்தர பிரதேசத்தின் நிருபேந்திர மிஸ்ரா 
  6. பொது விவகார துறையில் முன்னாள் மத்திய மந்திரியான பீகாரை சேர்ந்த ராம் விலாஸ் பஸ்வான் (மறைவுக்கு பின்),
  7. பொது விவகார துறையில் குஜராத்தின் கேசுபாய் பட்டேல் (மறைவுக்கு பின்),
  8. ஆன்மீகத்தில் மத தலைவரான உத்தர பிரதேசத்தின் கால்பே சாதிக் (மறைவுக்கு பின்),
  9. பொது விவகார துறையில் அரியானாவின் தர்லோசன் சிங்.
  10. ரஜினிகாந்த் தேவிதாஸ் ஷ்ரோஃப் - மகாராஷ்டிரம்