TNPSC Current Affairs : January-21-2021
RRB /TNPSC CURRENT AFFAIRS
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

2-ம் கட்ட கரோனா தடுப்பூசி:

  1. இரண்டாம் கட்டமாக கரோனா தடுப்பூசி போடப்படும்போது பிரதமர் மோடி மற்றும் 50- வயதுக்கு மேற்பட்ட மாநில முதல்வர்களுக்கும் போடப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
  2. சீனாவில் உருவான கரோனா வைரஸ், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் பரவத் தொடங்கியது.
  3. வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது.
  4. இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த ‘கோவிஷீல்டு’, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய ‘கோவேக்ஸின்’ ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
  5. இதையடுத்து, தமிழகம் உட்படநாடு முழுவதும் 2 கட்டங்களாக கரோனா தடுப்பூசி போடும் பணிக்கான ஒத்திகை நடத்தப்பட்டது.

  6. இதனைத் தொடர்ந்து ஜனவரி 16-ம் தேதி அன்று பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.

  7. நாடு தழுவிய மிகப்பெரிய கோவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல் திட்டத்தின் கீழ் நேற்று வரை 8,06,48 பயனாளிகளுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

  8. முதல்கட்டமாக 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  9. நாடு முழுவதும் 3,006 மையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் அடுத்த சில மாதங்களுக்கு தொடர்ந்து நடக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

  10. இந்தநிலையில் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட பிறகு 2-ம் கட்டமாக மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி போட்டப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

  11. இரண்டாம் கட்டமாக கரோனா தடுப்பூசி போடப்படும்போது பிரதமர் மோடி மற்றும் 50- வயதுக்கு மேற்பட்ட மாநில முதல்வர்களுக்கும் போடப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

  12. 50 வயதுக்கு மேற்பட்ட எம்.பி.க்கள், எம்எல்ஏகளுக்கும் இதே சமயத்தில் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNPSC GROUP II MAINS
மாநிலங்களின் சுயவிவரம்

புதிய கண்டுபிடிப்புகளுக்கான நிதி ஆயோக் தரப் பட்டியலில் 3-வது இடத்தில் தமிழகம்

  1. புதிய கண்டுபிடிப்புகள் சார்ந்து இந்திய மாநிலங்களின் செயல்பாட்டை நிதி ஆயோக் அமைப்பு ஆய்வு செய்து தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முன்னணி மாநிலங்களாக கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் இடம்பிடித்துள்ளன.
  2. இந்த அறிக்கையின்படி 2020-ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
  3. புதிய கண்டுபிடிப்புகளுக்கான சர்வதேச தரவரிசைப் பட்டியல் விதிமுறைகளின்படி இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை 3 வகைகளாகப் பிரித்து அவற்றை ஆய்வு செய்து நிதி ஆயோக் அறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளது.
  4. நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் மற்றும் சிஇஓ அமிதாப் கந்த் இதனை வெளியிட்டுள்ளனர்.
  5. இந்தப் பட்டியலில் முதல் 5 மாநிலங்களாக கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் கேரளா ஆகியவை இடம் பிடித்துள்ளன. ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் பிஹார் ஆகிய 3 மாநிலங்களும் பட்டியலில் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன.
  6. புதிய கண்டுபிடிப்புகள் சார்ந்து மாநிலங்களின் ஈடுபாடு, அவற்றின் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
TNPSC GROUP II MAINS
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்

”பராக்கிரம் திவஸ்”

  1. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும், ”பராக்கிரம் திவஸ்” அதாவது, பராக்கிரம தினமாக,  கொண்டாடப்படும் என மத்திய கலாச்சார அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
  2. "நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 125 வது பிறந்தநாளில் இந்த மாமனிதர், தேசத்திற்கு ஈடு இணையற்ற பங்களிப்பை இந்திய மக்கள் அன்புடன் நினைவில் கொள்கிறார்கள்.
  3. நேதாஜியின் 125 வது பிறந்த தினத்தை தேசிய மற்றும் சரவதேச நிலையில், 2021 ஜனவரி முதல் சிறப்பான வகையில் கொண்டாட மத்திய அரசு (Central Government) முடிவு செய்துள்ளது" என அமைச்சகம் கூறியது.
  4. ஜனவரி 23, 2021 முதல் இந்த ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்த நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் நடத்த நரேந்திர மோடி  அரசு ஏற்பாடுகள் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  5. சமீப காலங்களில், நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் தைரியம் மற்றும் தியாகத்தை குறிப்பிட்டு, அவருக்கு உரிய மரியாதை அளிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. புதுடெல்லியின் (New Delhi) செங்கோட்டையில் நேதாஜி குறித்த ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
  6. இதை பிரதமர், நேதாஜியில் சென்ற பிறந்த நாளான 23.01.2019 அன்று திறந்து வைத்தார்.