TNPSC Current Affairs : January-20-2021
RRB /TNPSC CURRENT AFFAIRS
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்

ஜோ பைடன் 

  1. அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் (Joe Biden) பதவியேற்றார்.
  2. அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
  3. ஜோ பைடன் தனது குடும்ப பைபிள் சாட்சியாக பதவியேற்றார்.
  4. இந்த பைபிள் 127 ஆண்டு பழையது என்பது குறிப்பிடத்தக்கது.
  5. பதவியேற்பு நிகழ்ச்சி Capitol Hill கட்டடத்தில் நடைபெற்றது.
  6. 2009 மற்றும் 2013ஆம் ஆண்டுகளிலும் இதேபோன்றுதான் அவர் துணை அதிபராக பதவியேற்றார். 

கமலா ஹாரிஸ் (Kamala Harris)

  1. கமலா ஹாரிஸ் (Kamala Harris) அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்றார்.
  2. அவருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சோனியா சோட்டோமேயர் (Justice Sonia Sotomayor) பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
  3. இதன் மூலம், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர், முதல் கறுப்பினப் பெண், முதல் தெற்காசியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
RRB /TNPSC CURRENT AFFAIRS
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

உலகின் முதல் கொரோனா நோயாளி

  1. சீன விஞ்ஞானி ஹுவான் யான்லிங் (Huan Yanling) ஹுவாங்கில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பற்றி முதலில் மிகப் பெரிய தகவலை வெளியிட்டார்.
  2. கொரோனாவை கண்டுபிடித்த முதல் நபர் அவர்தான். அவர் நோயாளி ஜீரோ (Patient Zero) என்றும் அழைக்கப்பட்டார்.
RRB /TNPSC CURRENT AFFAIRS
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

மிதக்கும் அதிவேக ரயில் - சீனா

  1. சீனாவிலேயே உருவாக்கப்பட்ட ஒரு அதிவேக மாக்வெல் ரயிலுக்கான ப்ரோட்டோடைப்பை சீனா வெளியிட்டது.
  2. 69 அடி நீள “சூப்பர் புல்லட் மேக்லெவ்” மாடலின் உற்பத்தி 2021 ஜனவரி 13 ஆம் தேதி சீனாவின் செங்டு நகரத்தில் தொடங்கியது.
  3. இந்த அதிவேக ரயில் 385 mph வேகத்தில், மணிக்கு 620 கி.மீ. செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  4. தென்மேற்கு ஜியோடோங் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த ரயிலில் (Train) சக்கரங்கள் இல்லை.
  5. அதற்கு பதிலாக, ரயில் உயர் வெப்பநிலை சூப்பர் கண்டக்டிங் (எச்.டி.எஸ்) மேக்லெவ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
  6. இது மற்ற ரயில்களை விட இதை வேகமாகவும் இலகுவாகவும் இயங்கவைக்கிறது.
  7. இந்த ரயில் வண்டி ‘ஃப்ளோடிங் டிரெயின்’ அதாவது ‘மிதக்கும் ரயில்’ என்று அழைக்கப்படுகிறது.
  8. மாக்லெவ் ரயில்கள் தடங்களிலிருந்து விலகி, சக்கர ரயில் உராய்வைத் தவிர்ப்பதற்காக சக்திவாய்ந்த காந்தங்களால் இயக்கப்படுகின்றன.
  9. இதனால் இவற்றால் தடங்களுக்கு மேலே உலாவ முடியும்.
  10. இந்த தொழில்நுட்பம் (Technology), ரயில் காந்தமாக்கப்பட்ட தடங்களுக்கு மேல் மிதப்பது போல தோற்றமளிக்க உதவுகிறது.
  11. மேலும், இந்த தொழில்நுட்பத்தினால் ரயில் அதிவேகமாகவும் தொடர்பற்ற முறையிலும் இயங்குகிறது.
  12. இந்த ரயில்கள் அதிவேக ரயில்கள் (Bullet Trains) எதிர்கொள்ளும் வேக சிக்கல்களை போக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
RRB /TNPSC CURRENT AFFAIRS
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்

G7  உச்சிமாநாடு ஜூன் 11-13, 2021

  1. உச்சிமாநாடு ஜூன் 11-13 அன்று  இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதியான கார்ன்வாலில் உள்ள கடலோர நகரமான கார்பிஸ் விரிகுடாவில் நடைபெற உள்ளது.
  2. ஜி7 உறுப்பு நாடுகள் சுழற்சி முறையில், தலைமை வகிக்கும்.
  3. ஜி7 உறுப்பு நாடுகள்: பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா. 
  4. 2021 ஆம் ஆண்டில் G7 உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்கும் பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த தலைவர்களை  சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளது.
  5. ஜுன் மாதம் நடைபெற உள்ள இந்த உச்சி மாநாடு, ஜோ பைடன் (Joe Biden) அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் நடக்கும் முதல் G7 உச்சிமாநாடாக இது இருக்கும்.
  6. கோவிட் -19 (Covid-19) மற்றும் காலநிலை மாற்றத்திற்கான உலகளாவிய நடவடிக்கை ஆகியவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.