TNPSC Current Affairs : January-19-2021
TNPSC GROUP I & II & IIA 2021 (GROUP I MAINS)
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
 

ஆறு நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்கிறது இந்தியா

 • உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது.
 • இந்தியாவில் முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 
 • இந்த நிலையில்,   அண்டை நாடுகளான மாலத்தீவுகள், வங்காளதேசம், நேபாளம், மியான்மர், சீசெல்சு ஆகிய நாடுகளுக்கு உதவி அடிப்படையில்  கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யப்பட உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  
   
 • அண்டை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதை பாராட்டி பிரதமர் மோடி கூறுகையில், சர்வதேச சமூகத்திற்கான சுகாதார தேவைக்கு நம்பகமான கூட்டாளியாக இருப்பதற்கு இந்தியா பெருமைப்படுகிறது. 
TNPSC GROUP I & II & IIA 2021 (GROUP I MAINS)
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

 

இந்தியா செய்திகள்  

 1. குஜராத்தில் உள்ள கிர்-சோம்நாத் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோயில் அறக்கட்டளையின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி ஒருமனதாக நேற்று தேர்வு செய்யப்பட்டார்.
 2. முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்குப் பின், சோம்நாத் அறக்கட்டளையின் தலைவராகப் பொறுப்பேற்கும் 2-வது பிரதமர் எனும் பெருமையை மோடி பெற்றுள்ளார்.
 3. அருணாச்சல பிரதேச எல்லையில் புதிய கிராமத்தை உருவாக்கிய சீனா.
 4. இந்திய குடியரசு தின விழாவரும் 26-ம் தேதி டெல்லி ராஜபாதையில் நடைபெறும் விழாவில், லத்தீன் அமெரிக்காவின் சிறியநாடான சுரிநாம் அதிபரும் இந்தியவம்சாவளியைச் சேர்ந்தவருமான சந்திரிகா பெர்சாத் சந்தோகி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
 5. நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் கண்ட்.
 6. மத்திய அரசு கரோனா தடுப்பூசி போடும் பணியை கடந்த 16-ம் தேதி தொடங்கியது.
 7. மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் போக்கை முறைப்படுத்தும் ஸ்டென்ட்: முதன்முறையாக இந்தியாவில் கண்டுபிடிப்பு.
 8. சென்னை உட்பட நாட்டின் பல பகுதிகளில் இருந்து குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைந்துள்ள கெவாடியாவுக்கு 8 புதிய ரயில்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
 9. இந்திய ராணுவத்தின்  தரைப்படைத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே.
 10. ‘‘திறன் இந்தியா திட்டத்தை’’ மாண்பு மிகு பிரதமர் நரேந்திர மோடி 2015ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி தொடங்கி வைத்தார்.
 11. பிரதமரின் 3-ம் கட்ட திறன் இந்தியா திட்டம்: 15.01.2021 தொடக்கம்.
 12. அறிவியல்தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியாஐக்கிய அரபு அமீரகம் இடையேபுரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 13. மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
 14. கோவாக்சின் என்பது இந்தியா தயாரித்த கோவிட்-19 தடுப்பூசி ஆகும். இது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டதுகோவாக்சின் மிகவும் சுத்திகரிக்கப்பட்ட தடுப்பூசியாகும்.
 15. பிப்ரவரி 1-ம் தேதி 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை காகிதமில்லா பட்ஜெட்டாகத் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 16. மத்திய அரசு கொள்முதல் செய்யும்கோவிஷீல்ட்கரோனா தடுப்பூசி விலை ரூ.210: புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் அறிவிப்பு
 17. சான் பிரான்சிஸ்கோவுக்கும், பெங்களூருக்கும் இடையிலான வான்வழி தூரம்
  TNPSC GROUP I & II & IIA 2021 (GROUP I MAINS)
  நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

  ஜனவரி 23-ஐ பராக்கிரம தினம்”

  • நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாள் ஜனவரி 23 முதல் ஒரு வருடத்திற்கு கொண்டாடப்படும் என்று மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் திரு பிரகலாத் சிங் பட்டேல் அறிவித்தார்.
  • கொல்கத்தாவில் நடைபெறவிருக்கும் தொடக்க விழாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையேற்பார் என்று புது தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தெரிவித்தார்.
  • நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நாட்டுக்கு ஆற்றியுள்ள தன்னலமற்ற சேவையையும்அவரது அணையாத விடுதலை உணர்வையும் போற்றும் வகையில்ஒவ்வொரு வருடமும் ஜனவரி 23-ஐ பராக்கிரம தினமாக கொண்டாட மத்திய அரசு முடுவெடுத்துள்ளது என்றும் இதற்கான அரசிதழ் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
  • மேலும் பேசிய அமைச்சர்நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாளை 2021 ஜனவரி 23 முதல் தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறப்பான முறையில் கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளது.
  • நிகழ்ச்சிகள் குறித்து முடிவெடுப்பதற்கும்கொண்டாட்டங்களை மேற்பார்வையிட்டு வழிகாட்டுவதற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
TNPSC GROUP I & II & IIA 2021 (GROUP I MAINS)
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

கலா சன்ஸ்கிருதி விகாஸ் யோஜனா'

 1. கலா சன்ஸ்கிருதி விகாஸ் யோஜனா' என்னும் மத்திய துறை திட்டத்தின் பல்வேறு கூறுகளின் கீழ் நடத்தப்படும் மெய்நிகர்/ஆன்லைன் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கான வழிகாட்டுதல்களை கலாச்சார அமைச்சகம் வெளியிட்டது.
 2. கண்காட்சிகள்நிகழ்ச்சிகள் உள்ளிட்ட கலை மற்றும் கலாச்சாரத் துறையின் செயல்பாடுகளின் மீது குறிப்பிடத்தகுந்த பாதிப்பை கொவிட் பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ளது.
 3. இதை கருத்தில் கொண்டுநிகழ்ச்சிகளை முறையாக ஆவணப்படுத்தி அவற்றை டிஜிட்டல் தளங்களில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை கலாச்சார அமைச்சகம் மற்றும் அதன் கலைஞர்கள் மற்றும் நிறுவனங்கள் எடுத்து வருகின்றனர்.
 4. இதன் தொடர்ச்சியாக, 'கலா சன்ஸ்கிருதி விகாஸ் யோஜனாஎன்னும் மத்திய துறை திட்டத்தின் பல்வேறு கூறுகளின் கீழ் நடத்தப்படும் மெய்நிகர்/ஆன்லைன் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கான வழிகாட்டுதல்களை கலாச்சார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
 5. குறைந்த அளவிலான பார்வையாளர்களைக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்த சமீபத்தில் அனுமதிக்கப்பட்ட போதிலும்மெய்நிகர் முறையில் 'கலா சன்ஸ்கிருதி விகாஸ் யோஜனாதிட்டத்தின் கீழ் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட நிகழ்ச்சிகளுக்காகவும்கலைஞர்களுக்கு உதவுவதற்காகவும் இந்த வழிகாட்டுதல்களை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.