TNPSC Current Affairs : January-11-2020
ரவீந்திர சேது
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

 

கொல்கத்தாவில், கொல்கத்தா துறைமுக சபையின் 150 ஆவது ஆண்டு விழா

 

  • கொல்கத்தாவில் இன்று (11.01.2020), கொல்கத்தா துறைமுக சபையின் 150-ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
  • இந்த நிகழ்ச்சியில், கொல்கத்தாவில் உள்ள ரவீந்திர சேது (ஹவுரா பாலம்) பற்றிய ஒளி & ஒலிக் காட்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.
  • முகப்பு விளக்குகளின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், அங்கு நடைபெற்ற வண்ணமிகு கலாச்சார நிகழ்ச்சிகளையும் அவர் பார்வையிட்டார்.
  • ரவீந்திர சேதுவில் அமைக்கப்பட்டுள்ள புதிய அலங்கார விளக்குகளில், மின்சார சிக்கனத்திற்கு ஏற்ற 650 எல்ஈடி மற்றும் ஒளிபாய்ச்சும் விளக்குகள், இசைக்கு ஏற்ப காட்சிகளை விளக்கும் பல வண்ண விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.
  • இந்த வண்ண விளக்குகள், பொறியியல் அதிசயமாக கருதப்படும் அந்த பாலத்திற்கு இன்னும் அதிக பாரம்பரிய தோற்றத்தை ஏற்படுத்தும்.
  • ரவீந்திர சேது 1943 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • இந்த ரவீந்திர சேதுவின் 75-ஆவது ஆண்டு விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது.
  • இந்த பாலம் நட்டுகள், போல்ட் ஏதுமின்றி, ஒட்டுமொத்த பாலமும் குடையாணி முறையில் அமைக்கப்பட்டுள்ளதால், இது பொறியியல் அதிசயமாக கருதப்படுகிறது.
  • இந்தப் பாலம், 26,500 டன் எஃகு இரும்பால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 23,000 டன் உயர் இழுவிசை கலப்பு எஃகு இரும்பாகும்.