TNPSC Current Affairs : January-01-2021
சோ. தர்மன்
விருதுகள்

சோ. தர்மன் (பிறப்பு: ஆகஸ்ட் 8, 1953) என்பவர் ஒரு தமிழகத்தைச் சேர்ந்த புதின, சிறுகதை எழுத்தாளர்.

கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர்.

கி. ராஜநாராயணனின் எழுத்துகள் ஈர்க்கப்பட்டு எழுத்தாளராகப் பரிணமித்தவர்களில் ஒருவர். 2019ஆம் ஆண்டு வரை 13 நூல்களை எழுதியுள்ளார்.

இலக்கியச்சிந்தனை, தமிழ்வளர்ச்சித்துறை, சாகித்ய அகாதெமி விருதுகளைப் பெற்றவர். இவர் எழுதிய முதற்கதை 1980ஆம் ஆண்டில் அச்சேறியது.

எட்டு சிறுகதைத்தொகுதிகள், நான்கு புதினங்கள், வில்லிசைபற்றிய ஆய்வுநூல் ஆகியன 2019ஆம் ஆண்டுவரையிலான இவரது படைப்புகள்.

புதினம் 

கூகை (தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்).

இப்புதினம் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தால் ஆங்கிலத்திலும் "மூங்கா" என்னும் பெயரில் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

சூல் (2016) (சுஜாதா விருதையும் சாகித்ய அகாதெமி விருதையும் பெற்ற நூல்)

தூர்வை (2017)

பதிமூனாவது மையவாடி (2020) சிறுகதைத்தொகுதிகள் 

ஈரம் (சிறுகதைத்தொகுதி)

சோகவனம் வனக்குமாரன் அன்பின் சிப்பி (2019)

நீர்ப்பழி சோகவனம் வாழ்க்கைவரலாறு தொகு வில்லிசைக்கலைஞர் பிச்சைக்குட்டி (2014)

விருதுகள்

1992 மற்றும் 1994 ஆண்டுகளில் இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதைக்கான விருதினைப் பெற்றிருக்கிறார்.

கூகை என்னும் புதினத்திற்காக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றிருக்கிறார்.

சூல் என்னும் புதினத்திற்காக 2016ஆம் ஆண்டிற்கான சுஜாதா விருதைப் பெற்றார்.

சூல் என்னும் புதினத்திற்காக 2019ஆம் ஆண்டில் சாகித்ய அகாதெமி விருதைப்பெற்றார்.

GROUP I MAINS TOPIC
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

எய்ம்ஸ் மருத்துவமனை - குஜராத்

  1. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்குப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
  2. குஜராத் மாநிலத்தின் ஆளுநர், முதல்வர், மத்திய சுகாதார அமைச்சர், இணை அமைச்சர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
  3. இந்த மருத்துவமனைத் திட்டத்திற்காக 201 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  4. ரூ.1195 கோடி மதிப்பில் அமைக்கப்படவிருக்கும் இந்த மருத்துவமனையின் பணிகள் 2022-ஆம் ஆண்டு மத்தியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  5. 750 படுக்கைகளைக் கொண்ட இந்த நவீன மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் கட்டிடமும் அமைக்கப்படும்.
  6. இங்கு 125 எம்பிபிஎஸ் இடங்களும், செவிலியர் படிப்புக்கான 60 இடங்களும் இருக்கும்.
  7. கட்டுமான பணிகள் 2022 மத்தியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.