TNPSC Current Affairs : February-29-2020
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர்
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பேக்

வரலாற்றுச் சிறப்பு; அமெரிக்கா-தலிபான் இடையே அமைதி ஒப்பந்தம்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
  1. ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டி, அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே வரலாற்றுச்சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தம் தோஹாவில் இன்று கையொப்பமானது.
  2. இந்த ஒப்பந்தத்தின் படி, கடந்த 18 ஆண்டுகளாக இருதரப்பினருக்கும் இடையே நீடித்து வந்த போர் முடிக்கு வருகிறது.
  3. அடுத்த 14 மாதங்களில் அமெரிக்கா தனது படைப்பிரிவுகளை முழுமையாக விலக்கிக்கொள்ளும்.
  4. கடந்த 18 ஆண்டுக்கால போருக்காக இதுவரை அமெரிக்கா ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான அமெரிக்க டாலர்களைச் செலவு செய்துள்ளது.
மலேசியாவின் புதிய பிரதமராக அறிவிப்பு
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்
  1. மலேசியாவின் புதிய பிரதமராக முகைதீன் யாசின் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
  2. மலேசியாவின் அரண்மனை தரப்பில், “முன்னாள் உள்துறை அமைச்சர் முகைதீன் யாசின் மலேசியாவின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
புந்தேல்கண்ட் விரைவு நெடுஞ்சாலை
நலன்புரி சார்ந்த அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு
  • 2018 பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட, உத்தரப்பிரதேச பாதுகாப்புத் தொழில் வழித்தட பகுதியில் வசதிகளை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில், 296 கிலோ மீட்டர் நீளம் கொண்ட புந்தேல்கண்ட் விரைவு நெடுஞ்சாலை திட்டத்துக்கு சித்ரகூட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (29.02.2020) அடிக்கல் நாட்டினார்.
  • ரூ.14,849 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த விரைவு நெடுஞ்சாலை சித்ரகூட், பாண்டா, மஹோபா, ஹமிர்பூர், ஜலாவுன், அரேயா, எட்டாவா மாவட்டங்களுக்குப் பயன் தருவதாக இருக்கும்.
  • இந்த நிகழ்ச்சியில் 10,000 விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகளும் தொடங்கி வைக்கப்பட்டன.
  • பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளுக்கும் விவசாயிகள் கடன் அட்டைகள் வழங்குவதன் முழுமையாக்கல் முயற்சியையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • நாட்டில் வேலைவாய்ப்புகளை ஒருங்கிணைப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் பல முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் திரு. மோடி, புந்தேல்கண்ட் விரைவு நெடுஞ்சாலை, பூர்வாஞ்சல் விரைவு நெடுஞ்சாலை அல்லது திட்டமிடப்பட்டுள்ள கங்கா விரைவு நெடுஞ்சாலை ஆகியவை உத்தரப்பிரதேசத்தில் சாலை இணைப்பு வசதிகளை அளிப்பதுடன் மட்டுமின்றி, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும், பெரிய நகரங்களில் உள்ள வசதிகள் எல்லோருக்கும் கிடைக்க வழி ஏற்படுத்துவதாகவும் இருக்கும் என்று கூறினார்.
  • பாதுகாப்புத் துறையில், தரையில் பயன்படுத்தும் சாதனங்கள், கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகள் முதல் போர் விமானங்கள் வரையிலான விஷயங்கள், ஹெலிகாப்டர்கள், ஆயுதங்கள், உணர்பொறிகள் போன்றவை பெருமளவில் தேவைப்படுவதைப் பட்டியலிட்ட பிரதமர், உத்தரப்பிரதேச பாதுகாப்புத் தொழில் வழித்தடத்திற்கு நடப்பாண்டு பட்ஜெட்டில் அரசு ரூ.3700 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் தெரிவித்தார்.
  • புந்தேல்கண்ட் விரைவு நெடுஞ்சாலை திட்டத்தின் மூலம் உத்தரப்பிரதேச பாதுகாப்புத் துறை தொழில் வழித்தட திட்டத்துக்கு புதிய உத்வேகம் கிடைத்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
  • நாட்டில் விவசாயிகளின் வருவாயைப் பெருக்கி, அவர்களுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்வதற்கு, 10,000 விவசாயிகள் உற்பத்தியாளர் மையங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • இதுவரை உற்பத்தியாளராக மட்டுமே இருந்த விவசாயிகள், இனிமேல் இந்த மையங்கள் மூலம் வணிகமும் செய்வார்கள் என்று பிரதமர் தெரிவித்தார்.
  • விவசாயிகளுக்காக இந்த அரசு மேற்கொண்டு வரும் பல முயற்சிகளைப் பட்டியலிட்ட பிரதமர், குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயம், மண்வள அட்டை, 100 சதவீதம் வேம்பு தடவிய யூரியா, பல தசாப்த காலங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த நீர்ப்பாசனத் திட்டங்களை பூர்த்தி செய்தல் என விவசாயிகள் தொடர்பான எந்தத் திட்டமாக இருந்தாலும், அதில் இந்த அரசு முனைப்புக் காட்டி வருகிறது என்று தெரிவித்தார்.
  • விவசாயிகள் உற்பத்தியாளர் மையங்கள் மூலமாக, விவசாய உற்பத்திப் பொருள்கள் சேகரிக்கப்பட்டு, இன்னும் நல்ல விலைக்கு விற்க விவசாயிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
  • அதே வகையில், நாட்டில் `உயர் வளர்ச்சி நோக்கம் தேவைப்படும் மாவட்டங்கள்' என்ற வகையில் 100க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், குறைந்தபட்சம் ஓர் ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒரு மையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
  • உத்தரப்பிரதேசத்தில் சித்ரகூட் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 2 கோடி விவசாயக் குடும்பங்கள், ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அரசின் உதவிகளைப் பெறும் தகுதிகளைப் பெற்றிருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.
  • இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல், எந்தவிதமான பாரபட்சமும் இல்லாமல், இந்த உதவிகள் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
  • விவசாயிகள் பெயரில், புந்தேல்கண்ட் பெயரில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் முன்னர் அறிவிக்கப்பட்ட திட்டங்களில், விவசாயிகளின் கைகளுக்கு எதுவும் கிடைக்காமல் இருந்த நிலையுடன் இப்போதைய நிலையை அவர் ஒப்பீடு செய்தார். பிரதமரின் கிசான் திட்ட பயனாளிகள் அனைவரும் பிரதமரின் ஜீவன் ஜோதி காப்பீடு மற்றும் பிரதமரின் ஜீவன் சுரக்சா காப்பீட்டுத் திட்டங்களிலும் இணைக்கப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார். ``நெருக்கடியான காலங்களில் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரையில் காப்பீடு கிடைப்பதை இத்திட்டங்கள் உறுதி செய்யும்'' என்று பிரதமர் கூறினார்.
  • விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதற்கு 16 அம்சத் திட்டம் உருவாக்கப் பட்டிருப்பதாக பிரதமர் திரு. மோடி அறிவித்தார். தனது விளைநிலத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவுக்குள் கிராமப்புற சந்தை (Haat) வசதி கிடைப்பதை உறுதி செய்ய அரசு முயற்சித்து வருகிறது என்று தெரிவித்தார். இதன் மூலம் நாட்டில் எந்தவொரு சந்தையுடனும் விவசாயி தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டார். வரும் காலங்களில் வேளாண் பொருளாதாரத்தில் கிராமப்புற சந்தைகள் புதிய மையங்களாக உருவெடுக்கும் என்று அவர் கூறினார்.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா
நலன்புரி சார்ந்த அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு
பிப்ரவரி 29, 2020 அன்று, பிரதமர் மோடி 10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை சித்ரக்கூட்டில் தொடங்கவுள்ளார். 
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டதை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முக்கியத்துவம் 

1.1 ஹெக்டேருக்கும் குறைவான நிலத்தை வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளில் 86% க்கும் அதிகமானோர் உள்ளனர்.
உரங்கள், தரமான விதை, பூச்சிக்கொல்லிகள் வாங்குவதில் அவர்கள் சவால்களை எதிர்கொள்கின்றனர். 
இந்த சவால்களை எதிர்கொள்ள விவசாய உற்பத்தியாளர் அமைப்பு விவசாயிகளுக்கு உதவுகிறது.
இந்த சவால்களை எதிர்கொள்ள விவசாய உற்பத்தியாளர் அமைப்பு விவசாயிகளுக்கு உதவுகிறது. சந்தை, தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆகியவற்றின் சிறந்த அணுகலைப் பெற அவை விவசாயிகளுக்கு உதவுகின்றன. எனவே, இந்த அமைப்புகளை மேலும் மேலும் தொடங்குவது விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த உதவும்.
இது 2022 ஆம் ஆண்டளவில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான இலக்கை அடைய கோயிக்கு உதவும்.
மிஷன் பூர்வோதயா: ஒடிசாவை ஸ்டீல் ஹப் ஆக்குவதற்கு இந்தியா-ஜப்பான் கைகோர்க்கின்றன
நலன்புரி சார்ந்த அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு
மிஷன் பூர்வோதயா (Mission Purvodaya): 
இந்த பணி 2020 ஜனவரியில் தொடங்கப்பட்டது. கிழக்கு இந்தியாவை ஒருங்கிணைந்த எஃகு மையமாக அபிவிருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்பு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும், எஃகு துறையின் வளர்ச்சியை அதிகரிப்பதும் அரசாங்கத்தின் நோக்கமாகும். இது 2030 க்குள் 300 மெட்ரிக் டன் எஃகு உற்பத்தி செய்யும் தேசிய எஃகு கொள்கையின் இலக்கை அடைய உதவும்.