TNPSC Current Affairs : February-24-2020
CMS-COP 13/சீட்டா என்ற சிறுத்தை இனம்
புவியியல் அடையாளங்கள்
சீட்டா என்ற சிறுத்தை இனம் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் அழிந்துவிட்டது. எனவே, நாட்டில் சிறுத்தை மீண்டும் அறிமுகப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது CMS-COP 13 இல் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் சிறுத்தை சீட்டா முக்கியமாக வேட்டையாடுதலால் இந்தியாவில் அழிந்துவிட்டது. கடைசி சீட்டா 1947 இல் சத்தீஸ்கரில் படமாக்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டில், விஞ்ஞானிகள் ஈரானில் இருந்து ஆசிய சீட்டாவை குளோன் செய்ய முன்மொழிந்தனர். இருப்பினும், ஈரான் அதற்கு பதிலாக ஒரு ஆசிய சிங்கத்தை கோரியதால் இந்த திட்டம் கைவிடப்பட்டது. இதுபோன்ற பல தடைகளுக்குப் பிறகு, சீட்டா மீண்டும் நாட்டில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஐடிடிஎப் உலக டூர் ஹங்கேரியன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி
விளையாட்டு
  1. ஹங்கேரியில் நடைபெற்று வரும் ஐடிடிஎப் உலக டூர் ஹங்கேரியன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அசந்தா சரத் கமல்- ஞானசேகரன் சத்யன்ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது.
  2. ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
  3. நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில் சரத் கமல்-சத்யன் ஜோடியும், ஜெர்மனியின் பெனடிக்ட்-பாட்ரிக் பிரான்சிஸ்கா ஜோடியும் மோதின.
  4. இதில் 5-11, 9-11, 11-8, 9-11 என்ற புள்ளிகள் கணக்கில் சரத் கமல்-சத்யன் ஜோடி தோல்வி கண்டது.
ஐடிடிஎப் உலக டூர் ஹங்கேரியன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி
விளையாட்டு
  1. ஹங்கேரியில் நடைபெற்று வரும் ஐடிடிஎப் உலக டூர் ஹங்கேரியன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அசந்தா சரத் கமல்- ஞானசேகரன் சத்யன்ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது.
  2. ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
  3. நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில் சரத் கமல்-சத்யன் ஜோடியும், ஜெர்மனியின் பெனடிக்ட்-பாட்ரிக் பிரான்சிஸ்கா ஜோடியும் மோதின.
  4. இதில் 5-11, 9-11, 11-8, 9-11 என்ற புள்ளிகள் கணக்கில் சரத் கமல்-சத்யன் ஜோடி தோல்வி கண்டது.
ரிசர்வ் வங்கியின் நிதி ஆண்டில் மாற்றம்
தற்போதைய சமூக பொருளாதார சிக்கல்கள்

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் 

பணவீக்க அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கென உருவாக்கப்பட்ட நிதிக் கொள்கையின் கட்டமைப்பை ஆய்வு செய்துவருவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

  1. ‘தற்போது ரிசர்வ் வங்கிக்கான நிதி ஆண்டு ஜுலை 1-ல்ஆரம்பித்து ஜூன் 30-ல் முடிகிறது.
  2. இனிமேல் மத்திய நிதி ஆண்டின்படியே ரிசர்வ் வங்கியின் நிதி ஆண்டும் மாற்றப்பட உள்ளது.
  3. அதன்படி, வரும் ஜூலை 1-ல் ரிசர்வ் வங்கியின் நிதி ஆண்டு தொடங்கி மார்ச் 31-ல் முடியும்.
  4. அதன்பிறகு, அதாவது 2021-ம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கிக்கும் நிதி ஆண்டு ஏப்ரல் 1-ல் தொடங்கி மார்ச் 31-ல் முடிவடையும்’ என்று தெரிவித்தார்.
இந்தியாவுடனான வர்த்தக உறவில் சீனாவை முந்தும் அமெரிக்கா
தற்போதைய சமூக பொருளாதார சிக்கல்கள்

அமெரிக்கா - இந்தியாவுக்கு இடையிலான வர்த்தக உறவு

  1. சீனா - இந்தியாவுக்கு இடையிலான வர்த்தக உறவைவிட, அமெரிக்கா - இந்தியாவுக்கு இடையிலான வர்த்தக உறவு சமீப ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்துள்ளது.
  2. இதனால் இந்தியாவின் முன்னணி வர்த்தக நாடாக இருந்த சீனாவின் இடத்தை அமெரிக்கா பிடித்துள்ளது. 
  3. 2018-19 நிதி ஆண்டில் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான இருதரப்பு வர்த்தகம் 87.95 பில்லியன் டாலராக உள்ளது.
  4. இதே காலகட்டத்தில் சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகம் 87.07 பில்லியன் டாலராக உள்ளது.
  5. 2018-ம் ஆண்டு முதல் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக்கப் போர் தீவிரம் அடையத் தொடங்கியது.
  6. அதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தக உறவு பெரிய சிக்கல்கள் ஏதுமின்றி பயணித்து வருகிறது.

சீனாவுடனான வர்த்தகம்

நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் அமெரிக்கா-இந்தியா இடையிலான வர்த்தகம் 68 பில்லியன் டாலராக உள்ளது. அதுவே சீனாவுடன் 64.96 பில்லியன் டாலர் அளவிலேயே உள்ளது.

தற்போது சீனாவில் கோவிட் 19 வைரஸ் (கரோனோ வைரஸ்) பரவி வருகிற நிலையில், சீனாவுடன் இந்தியாவின் வர்த்தகம் மேலும் பாதிப்படைந்துள்ளது.

டிரம்பின் வருகை

டிரம்பின் வருகையைத் தொடர்ந்து அமெரிக்க-இந்தியா வர்த்தக உறவு மேலும் வலுப்பெறும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், இவ்விரு நாடுகளுக்கிடையே தாராளமய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டால், அது இந்நாடுகளுக்கிடையேயான இரு தரப்பு வர்த்தக உறவை அடுத்ததளத்துக்கு இட்டுச் செல்லும் என்று தெரிவிக்கின்றனர்.

வர்த்தக உபரி

அமெரிக்காவுடன் இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி அதிகரித்து வருகிறது. தாராள வர்த்தக உறவால்இந்தியாவுக்கு அதிகப் பலன் கிடைக்கும். இந்திய உள்நாட்டு தயாரிப்பு மற்றும் சேவைகளுக்கு அமெரிக்கா பெரிய சந்தையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதேசமயம் சீனாவுடன் இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இரண்டும் சரிந்து வருகிறது. 2013-14முதல் 2017-18 வரையிலான காலகட்டத்தில் சீனாதான் இந்தியாவின் முன்னணி வர்த்தக நாடாக இருந்தது. அதற்கு முன்னால் ஐக்கியஅரபு அமீகரகத்துடன் இந்தியா வலுவான வர்த்தக உறவைக் கொண்டிருந்தது.

அமெரிக்காவுடனான வர்த்தக உறவில் இந்தியா வர்த்தக உபரியைக் கொண்டிருக்கிறது. ஆனால்சீனாவுடனான உறவில் வர்த்தகப் பற்றாக்குறையைக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியா கூடுதல்கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக வேளாண் பொருட்கள், உணவுப் பொருட்கள் சார்ந்த வர்த்தகத்தில் இந்தியா கவனத்துடன் செயல்பட வேண்டும். ஏனென்றால் சோளம், சோயாபீன் உள்ளிட்டவற்றின் உற்பத்தியில் உலகில் அமெரிக்காதான் முன்னணி வகிக்கிறது. இதனால் இந்திய உற்பத்தி பாதிக்கப்படலாம். எனவே இந்தியா இவ்வகை ஒப்பந்தங்களில் கூடுதல் கவனத்துடன் முடிவெடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இந்தியா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் டிரம்பின் இந்திய வருகையை ஒட்டி அந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா எதிர்பார்ப்பு

இந்தியா தற்சமயம் அமெரிக்க விசாவுக்கான தொகையைக் குறைக்க வேண்டும் என்று நிபந்தனை வைத்துள்ளது.

அதேபோல், சில இரும்பு மற்றும் அலுமினியம் தயாரிப்புகளுக்கு அமெரிக்கா விதித்து வரும் வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும், வேளாண்,வாகனங்கள், வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்ட சந்தைகளில் அதிகஏற்றுமதிக்கு வாய்ப்புத் தர வேண்டும் என்று இந்தியத் தரப்பிலிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், இந்தியாவுக்குப் பால் தயாரிப்புகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை அதிகம் ஏற்றுமதி செய்ய அனுமதியளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது அமெரிக்க தரப்பு. சிலதகவல் தொழில்நுட்ப தயாரிப்புகள் மீதான வரியையும் குறைக்கவேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. ட்ரம்ப் வருகை இரு நாட்டு வர்த்தக எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய அதிக வாய்ப்புள்ளது.

இருசக்கர பசுமை வாகன விற்பனை மையம்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சமீபத்திய கண்டுபிடிப்புகள்

சென்னை கொட்டிவாக்கத்தில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மின்கலனால் செயல்படும் இருசக்கர பசுமை வாகன விற்பனை மையத்தை (பிப்.23) மயில்சாமி அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.

சூரிய ஒளியினால் நவீன லித்தியம் அயன் பேட்டரி தொழில்நுட்பத்தை இஸ்ரோ 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதாகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாத்திட அதிக அளவில் பசுமை வாகனங்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.