TNPSC Current Affairs : February-22-2020
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கம் வென்றார் சாக் ஷி மாலிக்
விளையாட்டு
  1. டெல்லியில் நடைபெற்று வரும்இந்தத் தொடரில் மகளிருக்கான 65 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சாக் ஷி மாலிக் இறுதி சுற்றில் ஜப்பானின் நவோமி ருகியை எதிர்த்து விளையாடினார்.
  2. இதில்சாக் ஷி மாலிக் 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
  3. 53 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் வினேஷ் போகத், ஜப்பானின் மயூமுகைதாவை எதிர்த்து மோதினார்.
  4. இதில் வினேஷ் போகத் 2-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால் வெண்லகப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் விளையாடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் வினேஷ் போகத்.
  5. இதில் வியட்நாமின் தி லி கியுவை 0-10 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றார் வினேஷ் போகத்.
  6. 57 கிலோஎடைப் பிரிவில் இந்தியாவின் அன்ஷு 4-1 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் சேவரா ஈஷ்முரடோவாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
  7. 72 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் குர்ஷரன் பிரீத் கவுர் 5-2 என்ற கணக்கில் மங்கோலியாவின் ஏக்பயாரை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றார்.
  8. அதேவேளையில் 62 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் சோனம் 0-11 என்ற கணக்கில் கிர்கிஸ்தானின் ஐசுலுடைனிபெகோவாவிடம் தோல்வியடைந்தார்.

மே.இ.தீவுகள் வீரருக்கு கவுரவக் குடியுரிமை: பாகிஸ்தான் அரசு வழங்குகிறது
விளையாட்டு
  1. மே.இ.தீவுகள் அணி வீரர் டேரன் சமிக்கு கவுரவக் குடியுரிமையும், நிஷான் இ ஹைதர் எனும் உயர்ந்த விருதும் வழங்கப்பட உள்ளது. இஸ்லாமாபாத்தில் மார்ச் 23-ம் தேதி நடக்கும் விழாவில் இந்த விருதை டேரன் சமிக்கு அதிபர் ஆரிப் அல்வி வழங்குகிறார்.
  2. இதற்கு முன்பு ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ ஹேடன், தென் ஆப்பிரிக்க வீரர் ஹெர்சலே கிப்ஸ் ஆகியோருக்கு 2007-ம் ஆண்டு உலகக்கோப்பை முடிந்த பின் கரிபீயன் தீவுகளில் இருக்கும் செயின்ட் அரசு கவுரவக் குடியுரிமை வழங்கி இருந்தது. இப்போது மூன்றவதாக டேரன் சமிக்கு பாகிஸ்தான் அரசு கவுரவக் குடியுரிமை வழங்க உள்ளது.
பிப். 21 முதல் 23 வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த இயற்கை உணவுத் திருவிழா
பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்

மக்களிடம் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு அதிகரிப்பு; இயற்கை உணவு உற்பத்தியில் இந்தியாவுக்கு முதலிடம்: ஆண்டுக்கு 17 சதவீதம் வளர்ச்சி

இந்திய இயற்கை உணவு சந்தை ஆண்டுக்கு 17 சதவீதம் அளவில் வளர்ச்சி கண்டுவருகிறது என்று மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்தார். மக்களிடம் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு அதிகரித்து வருகிற நிலையில் இயற்கை உணவுக் கான தேவை அதிகரித்து, அதற் கான சந்தை மிக வேகமாக வளரும் என்று அவர் தெரிவித்தார்.

அந்த வகையில் இயற்கை உணவு உற்பத்தியில் முதலிடத்தை எட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

டெல்லியில் இயற்கை உணவு திருவிழா நடைபெற்றது. அதில் மத்திய உணவு பதப்படுத்து தல் துறையின் அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி இருவரும் இணைந்து விழாவை தொடங்கிவைத்தனர்.

3 நாட்களுக்குத் திருவிழா

பிப். 21 முதல் 23 வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த இயற்கை உணவுத் திருவிழாவில் 180-க்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோர்கள், சுய தொழில் குழுவினர், கூட்டுறவு சங்கத்தினர் கலந்து கொள்கின்றனர்.

அப்போது பேசிய ஹர்சிம்ரத் கவுர், ‘‘உலகம் தற்போது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் இயற்கை உணவுக்கான தேவை அதிகரித்துள்ளது. இயற்கை மற்றும் ஆரோக்கியமான உணவு களுக்கான முக்கிய சந்தை இந்தியாவிடமே உள்ளது. இந்தியா வின் பல பகுதிகள் இயற்கையோடு இயைந்தவை. இயற்கை உணவு துறை ஆண்டுக்கு 17 சதவீதம் அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.

வரும் ஆண்டுகளில் அது மேலும் அதிகரிக்கும். இத்துறை யில் பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இயற்கை உணவுக்கான வடிக்கையாளர்களை, சில்லறை வியாபாரிகளை அடையாளம் காண்பதற்கான வாய்ப்பை இத்தகைய திருவிழாக்கள் ஏற்படுத்தித் தருகின்றன. இத்துறையே விவசாயிகளுக்கான ஊதியத்தை இருமடங்காக உயர்த்துவதற்கான மத்திய அரசின் இலக்குக்கு அடிப்படையானது’’ என்று அவர் தெரிவித்தார்.

515 மில்லியன் டாலர் ஏற்றுமதி

இந்தியா 2017-18-ம் நிதி ஆண்டில் 1.7 மில்லியன் டன் அளவில் சான்றளிக்கப்பட்ட இயற்கை உணவுகளை உற்பத்தி செய்துள்ளது. 515 மில்லியன் டாலர் அளவில் அவற்றை ஏற்றுமதி செய்திருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்திய இயற்கை உணவு சந்தை மதிப்பு ரூ.75,000 கோடியை எட்டும் என்று சில வாரங்களுக்கு அவர் முன் தெரிவித்திருந்தார்.

பழங்குடிகளின் தயாரிப்புகள்..

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பேசுகையில், ‘‘இயற்கை உணவுத் துறையில் அந்நிய முதலீடு அதிகரித்து வருகிறது. பெண் தொழில் முனைவோர்கள் எளிதாக தொழில் தொடங்கும் வகையில் மத்திய அரசு முத்ரா கடன் வழங்குகிறது.

உணவு பதப்படுத்துதல் தொடர்பான நவீன தொழில்நுட்பங்கள் பெண்களுக்கு கிடைக்கபெறச் செய்ய வேண்டும். அடுத்த ஆண்டு முதல் இத் திருவிழாவில் மாற்றுத் திறனாளி களையும் பங்கேற்கச் செய்ய வேண்டும். பழங்குடிகளின் தயாரிப்பை இதில் இணைக்க வேண்டும்’’ என்று கூறினார்.

இயற்கை உணவு உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தில் உள்ளதாக உணவு பதப்படுத்துதல் துறை செயலர் புஷ்பா சுப்ரமணியம் தெரிவித்தார்.

கொவைட் - 19 பாதிப்பு குறித்த தலையங்கம்
பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்
  1. சீனாவின் வூஹான் நகரில் கடந்த நவம்பர் மாதம் உருவான கரோனா நோய்த்தொற்று இப்போது இந்தியா, ஜப்பான், தைவான், பிலிப்பின்ஸ், ஹாங்காங், பிரான்ஸ் என்று நாடு விட்டு நாடு, கண்டம் விட்டுக் கண்டம் அதிவிரைவாகப் பரவிக் கொண்டிருக்கிறது.
  2. இந்த நோய்த்தொற்றை எப்படிக் கட்டுப்படுத்தப் போகிறோம், இதற்கு என்னதான் மருத்துவம் என்பது புரியாமல் உலகம் விழி பிதுங்கி நிற்கிறது.
  3. "கரோனா வைரஸ்' என்கிற பொதுப் பெயரில் அழைக்கப்பட்டு வந்த நோய்த்தொற்றுக்கு "கொவைட் - 19' என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த நோய்த்தொற்றால் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  2,236 உள்பட உலகம் முழுவதிலுமாக பலியானவர்களின் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 2,250.
  4. சீனாவில் 889 பேர் புதிதாகக் "கொவைட் - 19' தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். பாதிப்புக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 75,467. சீனா மட்டுமல்லாமல், இந்தியா உள்ளிட்ட 27 நாடுகளில் "கொவைட் - 19' நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். சர்வதேச அளவில் பாதிப்புக்குள்ளாகி  இருப்பவர்களின் எண்ணிக்கை நேற்றைய தகவல்படி 76,808 பேர். 
  5. இந்த "கொவைட் - 19' நோய்த்தொற்று, சீனாவிலுள்ள வூஹான் நகரின் மீன் மற்றும் இறைச்சி சந்தையிலிருந்து உருவாகியிருப்பது தெரியவந்திருக்கிறது. இந்தச் சந்தையில் உயிருள்ள மிருகங்களும், கால்நடைகளும், வன விலங்குகளும் இறைச்சிக்காக கொல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அங்கே உள்ள இறைச்சிக் கடைகளில் உயிருள்ள மயில்கள், எலிகள், பெருச்சாளிகள், நரிகள், முதலைகள், ஓநாய்க் குட்டிகள், ஆமைகள், பாம்புகள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட பல உயிருள்ள விலங்கினங்கள்  வாடிக்கையாளர்களின் கண் முன்னால் இறைச்சிக்காகக் கொல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. எழுபதுக்கும் அதிகமான விலங்கினங்களின் கால், ரத்தம், குடல், மூளை உள்ளிட்ட உறுப்புகள் பட்டியலிடப்பட்டு விற்கப்படுகின்றன.
  6. 2002-இல் சீனாவிலிருந்து உருவான "சார்ஸ்' என்கிற நோய்த்தொற்றுக்குக் காரணமாக இருந்தது நம்மால் மரநாய் என்று அழைக்கப்படும் "பாம் சிவட்' என்கிற கீரியைப் போன்ற காட்டு மிருகம். 2012-இல் உருவான "மெர்ஸ்' என்கிற நோய்த்தொற்று மத்திய கிழக்கு ஆசியாவில் உருவானது. இதற்குக் காரணம் ஒட்டகங்கள். கடந்த 1996 முதல் இதுவரை 11 முறைகள் பறவைக் காய்ச்சல் தாக்குதல்களுக்கு உள்ளாகிக் கோடிக்கணக்கான பறவைகள், குறிப்பாகக் கோழிகள் கொத்துக் கொத்தாகச் செத்து மடிந்திருக்கின்றன. கோழிகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவிய அந்த விஷக் காய்ச்சலின் தொடக்கமும் சீனாதான். வாத்துக் கழிவிலிருந்து பறவை இனங்களை மட்டுமல்லாமல் 60 நாடுகளில் மனிதர்களையும் தாக்கியது பறவைக் காய்ச்சல்.
  7. அதிகரித்துவரும் மாமிச உணவுப் பழக்கம் "சார்ஸ்', பறவைக் காய்ச்சல், "மெர்ஸ்' இப்போது "கொவைட் - 19' உள்ளிட்ட நோய்த்தொற்று பாதிப்புகளுக்கு மிக முக்கியமான காரணம் என்று சமூகவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். வளர்ச்சி என்கிற பெயரில் காடுகள் அழிக்கப்படுவதால், வனவிலங்குகளுக்கும், வளர்ப்பு மிருகங்களுக்குமான நேரடித் தொடர்புகள் அதிகரித்திருக்கின்றன. வனவிலங்குகள் வேறு வழியில்லாமல் மனித உறைவிடங்களுக்குள் தஞ்சமடைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அதனால் அவற்றை பாதிக்கும் நோய்த்தொற்றுகள் வளர்ப்பு மிருகங்களைத் தொற்றிக் கொள்கின்றன.
  8. இறைச்சிக் கடைகளும், சந்தைகளும்தான் நோய்த்தொற்றுகளின் ஊற்றுக்கண்கள். பல்வேறு பறவைகளும், விலங்குகளும் இறைச்சிக்காக ஒரே இடத்தில் வைக்கப்படும்போது, நோய்த்தொற்றுகள் அனைத்துக்கும் பரவுகின்றன. ஒரே கசாப்பு மேடையும், கத்தியும் பயன்படுத்தப்படுவதால், இறைச்சியின் மூலம் மனிதர்களுக்கு நோய்த்தொற்றுகள் பரவுவது தவிர்க்க இயலாததாகிறது. குறிப்பாக, கோழி, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, ஒட்டக இறைச்சி ஆகியவைதான் மனிதர்களிடையே நோய்த்தொற்று பரவுவதற்கு முக்கியமான காரணங்கள்.
  9. சீனாவிலிருந்து பல்வேறு நோய்த்தொற்றுகள் உருவாகி வருவதில் வியப்பில்லை. அமெரிக்க சிவப்பு நரிகள், ஆஸ்திரேலிய வரிக்குதிரைகள், ஆப்பிரிக்க நெருப்புக் கோழிகள் உள்ளிட்ட 54 வனவிலங்குகளை வியாபார ரீதியில் வளர்த்து விற்பனை செய்ய சீன அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. பல்லி, எலி, பாம்பு, கீரி உள்ளிட்டவை சீனர்களால் பரவலாக உட்கொள்ளப்படுகின்றன. வெளவால்கள், எலி போன்றவற்றை முதலில் தாக்கும் நோய்த்தொற்றுகள் படிப்படியாக மனித உணவாகும் இறைச்சிகளின் மூலம் பரவும்போது, நம்மால் தடுக்க முடிவதில்லை.
  10. வனவிலங்கு வர்த்தகம் தடைசெய்யப்பட்டாலும்கூட இந்த ஆபத்திலிருந்து மனித இனம் தப்பிவிட முடியுமா என்பது சந்தேகமாக இருக்கிறது. எலிகள், பெருச்சாளிகள், வெளவால்கள், பாம்புகள், தவளைகள் போன்றவை சீனர்களின் உணவாகவே இருப்பதால் அதன் விற்பனையைத் தடை செய்ய முடியாது. துரித உணவகங்களில் முழுமையாகச் சமைக்கப்படாத, அரைகுறையாக வேகவைக்கப்படும் மாமிச உணவுகள் விற்பனை செய்யப்படுவதைக் கண்காணிப்பதும் இயலாது. அதன் விளைவை மனித இனம் எதிர்கொள்கிறது.
  11. "கொவைட் - 19' நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மனிதர்களை அடையாளம் கண்டு குணப்படுத்த முயற்சிக்கிறோம்.

 

Thanks to Dinamani