TNPSC Current Affairs : February-14-2020
அண்டார்டிகாவில் வெப்பமான வெப்பநிலை 20.75 டிகிரி செல்சியஸ்
புவியியல் அடையாளங்கள்
  1. உலக வானிலை அமைப்பு அறிவித்தது முதல் முறையாக அண்டார்டிகா அதன் வெப்பமான வெப்பநிலையை 20.75 டிகிரி சி.
  2. இதுவரை, அதிகபட்சம் 18.3 டிகிரி செல்சியஸ் ஆகும், இது 1982 ஜனவரியில் பதிவு செய்யப்பட்டது.
சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் சிறந்த வீரர் விருதை வென்றார் மன்பிரீத் சிங்
விளையாட்டு

சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் சிறந்த வீரர் விருதை வென்றார் மன்பிரீத் சிங்.

  1. சர்வதேச ஹாக்கி சம்மேளனம் சார்பில் வழங்கப்படும் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் தட்டிச் சென்றுள்ளார்.
  2. இதன் மூலம் இந்த விருதை வெல்லும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் 27 வயதான மன்பிரீத் சிங். 2019-ம்ஆண்டு இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு மறக்க முடியாத வகையில் சிறப்பானதாக அமைந்திருந்தது. ஏனெனில் மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆடவர்ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.
  3. மன்பிரீத் சிங் 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக், 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கிலும் இந்திய அணிக்காக களமிறங்கியுள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு அறிமுகமான அவர், இதுவரை 260 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்
விளையாட்டு
  1. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான சர்தார் வல்லபாய் படேல் மைதானம் விரைவில் திறக்கப்பட உள்ளது.
  2. குஜராத் மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் மோதிராவில் சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் அதி நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக 1,10,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டுள்ளது.
  3. இந்த மைதானம் சுமார் ரூ.800 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
  4. மெல்பர்னைவிட அதிகம்
  5. மோதிரா மைதானத்தின் இருக்கை களின் எண்ணிக்கை 1,10,000 ஆகும். இதன் மூலம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற பெருமையை பெற உள்ளது.
  6. ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தின் இருக்கைகளை விட மோதிரா மைதானத்தில் 10 ஆயிரம் இருக்கைகள் அதிகமாக உள்ளது.